அறிவியல் ஆய்வக சோதனைகள் - தாவர மற்றும் விலங்கு திசுக்களைக் கண்டறிதல் | 9th Science : Practical experiments
6. தாவர மற்றும்
விலங்கு
திசுக்களைக்
கண்டறிதல்
நோக்கம் :
தயாரிக்கப்பட்ட நிலையான கண்ணாடி வில்லையில் இருந்து தாவர மற்றும் விலங்குகளின் திசுக்களின் கட்டமைப்பு அம்சங்களைக் கண்டறிதல்.
 
உற்று நோக்கல் : 
கொடுக்கப்பட்ட கண்ணாடி வில்லையின் மேல் இருக்கும் தாவர மற்றும் விலங்கு திசுக்களை அடையாளம் காண்க. 
அ) எளிய திசுக்கள் - பாரன்கைமா,
கோலன்கைமா, ஸ்கிளிரன்கைமா 
ஆ) கூட்டுத்திசுக்கள் - சைலம் மற்றும் ஃப்ளோயம் 
இ) எபிதீலிய திசு - தூண் எபிதீலியம் குற்றிழை எபிதீலியம்
 ஈ) இணைப்புத் திசு - எலும்பின் குறுக்கு வெட்டுத் தோற்றம் 
உ) தசைத்திசு-எலும்பு சட்டக தசை, மென் தசை மற்றும் இதயத்தசை ஊ) நரம்புத்திசு
திசுக்களின் படம் வரைந்து, பாகங்களை குறித்து அவற்றின் இருப்பிடம் மற்றும் செயல்களை எழுதுக
தீர்வு :
அ) எளிய திசுக்கள் :
பாரன்கைமா

இருப்பிடம் :
நீர் தாவரங்களில் காற்றிடைப் பகுதிகளில் உள்ளது. 
பணி : 
1. வறண்ட நிலத் தாவரங்களில் நீர் மற்றும் உணவு சேமித்தல் 
2. மிதத்தல், சுரத்தல் 
கோலன்கைமா

இருப்பிடம் : 
புறத்தோலுக்கு கீழே உள்ளது. 
பணி :
தாவர உறுப்புகளுக்கு வலிமை அளித்தல்.
ஸ்கிளிரன்கைமா

இருப்பிடம் : 
தாவர உடல், பழங்கள் மற்றும் விதைகள் 
பணி :
1. நார்தன்மை உடையது ஸ்கிளிரன்கைமா 
ஆ) கூட்டுத் திசுக்கள் : 
சைலம்

இருப்பிடம் : 
தண்டு மற்றும் வேரின் மையப்பகுதி (வாஸ்குலார் கற்றைகள்). 
பணி : 
நீர் மற்றும் கனிம ஊட்டச் சத்துக்களை தண்டு மற்றும் இலைகளுக்கு கடத்துதல் 
சல்லடை தட்டு

இருப்பிடம் : 
தண்டு மற்றும் வேரின் மையப்பகுதி வாஸ்குலார் கற்றைகள்) 
பணி : 
உணவுப் பொருட்களை கடத்துதல்
இ) எபிதீலிய திசு :
தூண் எபிதீலியம்

இருப்பிடம் : 
இரைப்பை, பித்தப்பை, பெருங்குடல் 
பணி : 
உறிஞ்சுதல், சுரத்தல்
குறுயிழை எபிதீலியம்

இருப்பிடம் : 
சுவாசக்குழாய், சிறுநீரகக் குழல்கள், அண்டக்குழல்கள் 
பணி : 
கோழையை ஒரு குறிப்பிட்ட திசையில் நகர்த்துதல் 
ஈ) இணைப்புத்திசு

இருப்பிடம் : 
எலும்பு
பணி
(i) உடலுக்குவடிவம், கட்டமைப்பு
உ) தசைத் திசு :
எலும்பு தசை

இருப்பிடம் :
கை, கால் தசைகள் 
பணி :
தன்னிச்சை செயல்கள்

இருப்பிடம் : 
இரத்தநாளம், இரைப்பை சுரப்பிகள், சிறுகுடல், சிறுநீர்ப்பை 
பணி : 
தன்னிச்சையற்ற செயல்கள்

இருப்பிடம் : 
இதயம் 
பணி : 
இதயம் சுருங்கி விரிதல்
ஊ) நரம்புத்திசு :

இருப்பிடம் : 
நரம்பு மற்றும் மூளை 
பணி : 
உணர்வுகளை கடத்துதல்