பருவம் 1 அலகு 2 | வரலாறு | 6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் - வினா விடை | 6th Social Science : History : Term 1 Unit 2 : Human Evolution

   Posted On :  27.08.2023 07:00 am

6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : பருவம் 1 அலகு 2 : மனிதர்களின் பரிணாம வளர்ச்சி

வினா விடை

6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : பருவம் 1 அலகு 2 : மனிதர்களின் பரிணாம வளர்ச்சி : புத்தக வினாக்கள், கேள்வி பதில்கள்

பயிற்சிகள்

 

I. சரியான விடையைத் தேர்ந்தெடு

 

1. பரிணாமத்தின் வழிமுறை ---------------------------

அ. நேரடியானது

ஆ. மறைமுகமானது

இ படிப்படியானது

ஈ. விரைவானது

[விடை: இ) படிப்படியானது]

 

2 தான்சானியா -------------------- கண்டத்தில் உள்ளது.

அ. ஆசியா

ஆ. ஆப்பிரிக்கா

 

இ அமெரிக்கா

ஈ ஐரோப்பா

[விடை: ஆ. ஆப்பிரிக்கா]

 

II. கூற்றுக்கான காரணத்தைப் பொருத்துக. சரியான விடையைத் தேர்ந்தெடு

 

1. கூற்று: உலகின் வெவ்வேறு பகுதிகளுக்கு இடம்பெயர்ந்தமனிதர்களின்உடலமைப்பிலும் நிறத்திலும் காலப்போக்கில் மாற்றங்கள் ஏற்பட்டன.

காரணம் : தட்பவெப்ப நிலை மாற்றமே

அ. கூற்று சரி.

ஆ. காரணம் தவறு.

இ கூற்றும் காரணமும் சரி.

ஈ.கூற்றும் காரணமும் தவறானவை.

[விடை: இ கூற்றும் காரணமும் சரி]

 

III. சரியான இணையைக் கண்டுபிடி


அ. ஆஸ்ட்ரலோபிதிகஸ் - இரு கால்களால் நடப்பது

ஆ. ஹோமோ ஹேபிலிஸ் - நிமிர்ந்து நின்ற மனிதன்

இ. ஹோமோ எரக்டஸ் – சிந்திக்கும் மனிதன்

ஈ. ஹோமோ சேப்பியன்ஸ் – முகத்தின் முன்பக்க நீட்சி குறைந்து காணப்படுவது

[விடை: அ. ஆஸ்ட்ரலோபிதிகஸ் - இரு கால்களால் நடப்பது]

 

IV. கோடிட்ட இடங்களை நிரப்பவும்

 

1. தான்சானியாவில் காணப்பட்ட தொடக்க கால மனிதர்களின் காலடித்தடங்களை மானுடவியல் ஆய்வாளர்கள் உலகின் பார்வைக்குக் கொண்டுவந்தார்கள்.

2.  பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால், நம் முன்னோர்கள் நாடோடி வாழ்க்கை வாழ்ந்தார்கள்.

3. பழங்கால மனிதர்களின் முதன்மையான தொழில்கள் வேட்டையாடுதல், மற்றும் உணவு சேகரித்தல் ஆகும்.

4. கலப்பை  கண்டுபிடிக்கப்பட்ட நிகழ்வு விவசாயத்தை எளிதாக்கியது.

5. பாறை ஓவியங்கள் நீலகிரி மாவட்டத்தில் உள்ள கரிக்கையூர் என்னுமிடத்தில் காணப்படுகின்றன.

 

V. சரியா, தவறா?

 

1. நாணயங்களை ஆராய்வதற்கான துறை மானுடவியல் ஆகும். விடை: தவறு

2 ஹோமோ எரக்டஸ் மனிதர்களுக்கு நெருப்பு குறித்த அறிவு இருந்தது. விடை: சரி

3 மனிதர்களின் முதல் அறிவியல் கண்டுபிடிப்பு சக்கரம் ஆகும். விடை: சரி

4 மனிதர்களால் பழக்கப்படுத்தப்பட்ட முதல் விலங்கு ஆடு. விடை: தவறு

 

 

VI. ஓரிரு வார்த்தைகளில் விடையளி

 

1. அகழாய்வில் கிடைக்கும் பொருட்களின் காலத்தை அறிய என்ன முறை பயன்படுகிறது?

கதிரியக்கக் கார்பன் பகுப்பாய்வு முறை

 

2. தொடக்க கால மனிதர்கள் எதை அணிந்தார்கள் ?

அவர்கள் பதப்படுத்தப்பட்ட விலங்குகளின் தோல்கள், மரங்களின் கிளைகள், இலைகள் ஆகியவற்றை அணிந்தார்கள்.

 

3. தொடக்க கால மனிதர்கள் எங்கு வாழ்ந்தார்கள் ?

அவர்கள் மரம், குகை மற்றும் மலையடிவாரத்தில் வாழ்ந்தார்கள்.

 

4. நிலத்தை உழுவதற்கு எந்த விலங்கு பயன்படுத்தப்பட்டது?

எருது

5. மனிதர்கள் எப்போது ஒரே இடத்தில் குடியேறி வாழ ஆரம்பித்தார்கள்?

> விவசாயம் செயல்பாட்டுக்கு வந்த பின் மக்கள் விலங்குகளைப் பழக்கி, அவற்றையும் விவசாயத்தில் ஈடுபடுத்தினர். 

> வேட்டையாடி வாழ்க்கை நடத்தியதை விட இந்த வாழ்க்கை எளிதாக இருந்தது. விவசாயம் அவர்களை ஒரு குறிப்பிட்ட இடத்தில் குடியேறும்படிச் செய்தது.

 

VII. கீழ்க்காணும் வினாக்களுக்கு விடையளி

 

1. பரிணாமம் என்றால் என்ன?

மனித இனம் மாற்றங்களை அடைந்து, ஒரு மேம்பட்ட நிலையை நோக்கி வளர்ச்சி பெறும் வழிமுறையைப் பரிணாமம் என்கிறோம்.

 

2. ஹோமோ சேப்பியன்ஸ் மனிதர்களின் இரு பண்புகளை எழுதுக.

> அவர்கள் சுயமாக சிந்திக்கும் தன்மை பெற்றிருந்தனர். 

> மனிதனைப் போன்ற தோற்றம் உடையவர்கள்

> கரடு முரடான கருவிகளைப் பயன்படுத்தினர் 

> வேட்டையாடுதல் மற்றும் உணவு சேகரிக்கும் சமூகமாக வாழ்ந்தனர்.

 

3. மனிதர்கள் ஏன் இடம் விட்டு இடம் நகர்ந்தார்கள் ?

> அவர்கள் உணவு தேடி இடம் விட்டு இடம் நகர்ந்தனர். 

> நிலத்தில் விவசாயம் செய்து வந்த அவர்கள், அந்த நிலத்தின் மண்வளம் குன்றி விட்டால் வேறொரு பகுதிக்கு இடம் பெயர்ந்தார்கள்.

 

4. பழங்கால வேட்டை முறைகளை விளக்கிக் கூறவும்.

> வேட்டையாடுதல் பழங்கால மக்களின் முக்கியத் தொழிலாகும்.

> கல்லாலும், எலும்பாலும் செய்த கருவிகளைப் பயன்படுத்தினார்கள்

> கூர்மையான கருவிகளைப் பயன் படுத்தினார்கள் 

> பன்றி, மான், காட்டெருமை, காண்டாமிருகம், யானை, கரடி போன்ற விலங்குகளை வேட்டையாடினர்.

 

5. கோடரிகள் ஏன் உருவாக்கப்பட்டன?

மரம் வெட்டவும், மரக்கிளைகளை நீக்கவும், குழிதோண்டவும், விலங்குகளின் தோலை உரிக்கவும் கோடரிகள் உருவாக்கப்பட்டன.

 

6. தொல்லியல் என்பதை எவ்வாறு வரையறுப்பாய்?

வரலாற்றுக்கு முந்தைய கால மனிதர்களையும், அவர்கள் பயன்படுத்திய பொருட்களையும் பற்றிப் படிப்பது தொல்லியல் ஆகும்.

 

7. மானுடவியல் பற்றி நீ அறிந்துள்ளது என்ன ?

> மனிதர்களையும் அவர்களின் பரிணாம வளர்ச்சியையும் பற்றிப் படிப்பது மானுடவியல் ஆகும்.

> மானுடவியல் (anthropology) என்னும் சொல் இரண்டு கிரேக்க வார்த்தை களிலிருந்து பெறப்பட்டது. anthrops என்பதன் பொருள் மனிதன். Logos என்பதன் பொருள் எண்ணங்கள் அல்லது காரணம்.

 

 

VIII. உயர் சிந்தனை வினா


1. பழங்காலம் முதல் நவீன காலம் வரை சக்கரம் வகித்து வரும் முக்கியத்துவம்.

• சக்கர உருவாக்கம் மனித வரலாற்றில் ஒரு முதல் தரமான கண்டுபிடிப்பாகக் கருதப்படுகிறது. 

• மலைகளிலிருந்து கற்கள் உருண்டு வருவதைப் பார்த்தபோது, சக்கரத்தை உருவாக்குவதற்கான சிந்தனையை பழங்கால மக்கள் பெற்றிருக்கலாம்.

• சக்கரத்தின் உதவியால் பானை செய்யக் கற்றுக் கொண்டனர். 

• சக்கரத்தின் உதவியினால் பொருட்களை ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு எளிதாக எடுத்துச் சென்றனர். 

• நவீன இயந்திரங்களில் சக்கரம் இல்லாத இயந்திரங்களே இல்லை எனலாம். 

• இவ்வாறு சக்கரம் தொழிற்சாலை மற்றும் போக்குவரத்தில் முக்கியப் பங்காற்றுகிறது.

 

IX. மாணவர் செயல்பாடு


1. வெவ்வேறு காலகட்டங்களைச் சேர்ந்த மனிதர்களின் படங்கள் அடங்கிய ஒரு படத்தொகுப்பைத் தயார் செய்.

 

X. வாழ்க்கைத் திறன்


1. களிமண் பானைகள் மற்றும் கருவிகளைச் செய்துபார்.

2. விதவிதமான பொம்மை வண்டிகளைச் சேகரி அவற்றில் செவ்வகம், சதுரம், முக்கோணம் போன்ற வடிவங்களில் சக்கரங்களைப் பொருத்தி, வண்டிகள் எப்படி நகர்கின்றன என்று சோதனை செய்து பார்.

 

XI. கட்டக வினாக்கள்

____________________ கண்டுபிடிக்கப்பட்ட நிகழ்வு பானை செய்வதை எளிதாக்கியது

விடை: சக்கரம்

பண்டப்பரிமாற்றமுறை என்பது _______________  ஆகும்.

விடை: ஒரு பொருளைக் கொடுத்து, அதற்குப் பதிலாக வேறு ஒரு பொருளைப் பெறுவது.

தொடக்க கால மனிதர்கள் வேட்டைக்குப் பயன்படுத்திய ஆயுதங்களில் இரண்டைக் கூறு

விடை: கல் கோடாரி. கல் சுத்தியல்

ஆயுதங்கள் செய்வதற்கு ஏற்ற கல் எது?

விடை: சிக்கி முக்கிக் கல்

நகரங்களும் பெருநகரங்களும் __________ மற்றும் _______________ ஆகியவற்றால் தோன்றின. 

விடை: வணிகம், வர்த்தகம்

மனிதர்களின் முதல் அறிவியல் கண்டுபிடிப்பு எது?

விடை: சக்கரம்

பாறை ஓவியங்களில் உள்ள உருவங்களை அடையாளம் காணவும்

விடை: வேட்டையாடுதல் மற்றும் நடனமாடுதல்

தொடக்க கால மனிதர்களின் முதன்மையான தொழில் எது?

விடை: வேட்டையாடுதல்

குகை ஓவியங்கள் மூலம் நாம் என்ன அறிந்துகொள்கிறோம்?

விடை: மக்களின் கடந்த கால வாழ்க்கை முறைபற்றி அறிந்து கொள்கிறோம்

தொடக்க கால மனிதர்கள் எங்கு வாழ்ந்தார்கள்?

விடை: குகைகளில் வாழ்ந்தார்கள்

________________ தொல்லியல் துறையுடன் தொடர்புடையது.

விடை: மானுடவியல்

தொடக்க கால மனிதர்களால் பழக்கப்படுத்தப்பட்ட விலங்குகளில் இரண்டைக் குறிப்பிடு.

விடை: நாய், எருது


 

XII. வரைபடம்


இந்திய வரைபடத்தில் கீழ்க்கண்ட இடங்களைக் குறிக்கவும்.

1. ஆதிச்சநல்லூர்

2. அத்திரம்பாக்கம்

3. பிம்பேட்கா

4. ஹன்சாகி பள்ளத்தாக்கு

5. லோத்தல்

Tags : Human Evolution | Term 1 Unit 2 | History | 6th Social Science பருவம் 1 அலகு 2 | வரலாறு | 6 ஆம் வகுப்பு சமூக அறிவியல்.
6th Social Science : History : Term 1 Unit 2 : Human Evolution : Exercises Questions with Answers Human Evolution | Term 1 Unit 2 | History | 6th Social Science in Tamil : 6th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : பருவம் 1 அலகு 2 : மனிதர்களின் பரிணாம வளர்ச்சி : வினா விடை - பருவம் 1 அலகு 2 | வரலாறு | 6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : 6 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : பருவம் 1 அலகு 2 : மனிதர்களின் பரிணாம வளர்ச்சி