பன்முகத் தன்மையினை அறிவோம் | பருவம் 1 அலகு 1 | குடிமையியல் | 6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் - வினா விடை | 6th Social Science : Civics : Term 1 Unit 1 : Understanding Diversity

6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : பருவம் 1 அலகு 1 : பன்முகத் தன்மையினை அறிவோம்

வினா விடை

6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : பருவம் 1 அலகு 1 : பன்முகத் தன்மையினை அறிவோம் : புத்தக வினாக்கள், கேள்வி பதில்கள்

பயிற்சிகள்

 

1. சரியான விடையை தேர்வு செய்க

 

1. இந்தியாவில் ------------------------------- மாநிலங்களும், ----------------- யூனியன் பிரதேசங்களும் உள்ளன.

அ) 27,9

ஆ) 29,7

இ) 28,7

ஈ) 28,8

[விடை : ஆ) 29,7]

 

2. இந்தியா ஒரு ----------------- என்று அழைக்கப்படுகிறது.

அ) கண்டம்

ஆ) துணைக்கண்டம்

இ) தீவு

ஈ) இவற்றில் எதுமில்லை

[விடை : ஆ) துணைக்கண்டம்]

 

3. மிக அதிக மழைப்பொழிவுள்ள மௌசின்ராம் ----------------------- மாநிலத்தில் உள்ளது.

அ) மணிப்பூர்

ஆ) சிக்கிம்

இ) நாகலாந்து

ஈ) மேகாலயா

[விடை : ஈ) மேகாலயா]

 

4. கீழ்கண்டவற்றில் எந்த மதம் இந்தியாவில் நடைமுறையில் இல்லை?

அ) சீக்கிய மதம்

ஆ) இஸ்லாமிய மதம்

இ) ஜொராஸ்ட்ரிய மதம்

ஈ) கன்ஃபூசிய மதம்

[விடை : ஈ) கன்ஃபூசிய மதம்]

 

5. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் அங்கீகரிக்கப்பட்டுள்ள அலுவலக மொழிகளின் எண்ணிக்கை ---------------------

அ) 25

ஆ) 23

இ) 22

ஈ) 26

[விடை : இ) 22]

 

6. ------------------- மாநிலத்தில் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

அ) கேரளா

ஆ) தமிழ்நாடு

இ) பஞ்சாப்

ஈ) கர்நாடகா

[விடை : அ) கேரளா]

 

7. மோகினியாட்டம் -------------------------  மாநிலத்தின் செவ்வியல் நடனம் ஆகும்.

அ) கேரளா

ஆ) தமிழ்நாடு

இ) மணிப்பூர்

ஈ) கர்நாடகா

[விடை : அ) கேரளா]

 

8. "டிஸ்கவரி ஆஃப் இந்தியா" என்ற நூலினை எழுதியவர் -----------------------

அ) இராஜாஜி

ஆ) வ.உ.சி

இ) நேதாஜி

ஈ) ஜவஹர்லால் நேரு

[விடை : ஈ) ஜவஹர்லால் நேரு]

 

9. 'வேற்றுமையில் ஒற்றுமை' என்ற  சொற்றொடரை உருவாக்கியவர்

அ) ஜவஹர்லால் நேரு

ஆ) மகாத்மா காந்தி

இ) அம்பேத்கார்

ஈ) இராஜாஜி

[விடை : அ) ஜவஹர்லால் நேரு]

 

10. வி.ஏ. ஸ்மித் இந்தியாவை ----------------------- என்று அழைத்தார்.

அ) பெரிய ஜனநாயகம்

ஆ) தனித்துவமான பன்முகத்தன்மை கொண்ட நிலம்

இ) இனங்களின் அருங்காட்சியகம்

ஈ) மதச்சார்பற்ற நாடு

[விடை : இ) இனங்களின் அருங்காட்சியகம்]

 

II. கோடிட்ட இடங்களை நிரப்புக


1. ஒரு பகுதியின் பொருளாதார நடவடிக்கைகளை அப்பகுதியின் நிலவியல் கூறுகளும் காலநிலைகளும் பெரிதும் தீர்மானிக்கின்றன.

2. மிகவும் குறைந்த மழைப்பொழிவுள்ள ஜெய்சால்மர் ராஜஸ்தான்  மாநிலத்தில் உள்ளது.

3. தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்ட ஆண்டு 2004

4. பிஹு திருவிழா அசாம் மாநிலத்தில் கொண்டாடப்படுகிறது.

 

III. பொருத்துக  

1. நீக்ரிட்டோக்கள் - அ மதம்

2. கடற்கரை பகுதிகள் - ஆ இந்தியா

3. ஜொராஸ்ட்ரியம் - இ மீன்பிடித்தொழில்

4. வேற்றுமையில் ஒற்றுமை = ஈ இந்திய இனம்

 

விடைகள்

1. நீக்ரிட்டோக்கள் - இந்திய இனம்

2. கடற்கரை பகுதிகள் - மீன்பிடித்தொழில்

3. ஜொராஸ்ட்ரியம் -  மதம்

4. வேற்றுமையில் ஒற்றுமை – இந்திய

 

IV. பின்வரும் வினாக்களுக்கு விடையளி.

 

1. பன்முகத்தன்மையினை வரையறு.

இந்தியர்களாகிய நாம் பல்வேறுபட்ட பின்புலங்கள், பண்பாடுகள்,வழிபாட்டு முறைகளைச் சார்ந்து வாழ்கிறோம். இதுவே பன்முகத் தன்மை எனப்படும்.

 

2. பன்முகத்தன்மையின் வகைகள் யாவை?

• நில அமைப்பு மற்றும் வாழ்வியல் முறைகளில் பன்முகத் தன்மை

• சமூக பன்முகத்தன்மை

• சமய பன்முகத்தன்மை

• மொழி சார் பன்முகத் தன்மை

• பண்பாடு பன்முகத் தன்மை


3. இந்தியா ஏன் துணைக்கண்டம் என்று அழைக்கப்படுகிறது?

கண்டம் எனப்படுவது மலைகள், பீடபூமிகள், சமவெளிகள், ஆறுகள், கடல்கள் போன்ற பல்வேறு இயற்கைப் பிரிவுகள் மற்றும் கால நிலைகளைக் கொண்ட மிகப் பரந்த நிலப்பரப்பு ஆகும். இவ்வனைத்தையும் இந்தியா பெற்றிருப்பதால் இந்தியா ‘துணைக்கண்டம்' என்று அழைக்கப்படுகிறது.

 

4. இந்தியாவில் கொண்டாடப்படும் பல்வேறு விழாக்களில் எவையேனும் மூன்றை பற்றி எழுதுக.

தீபாவளி - இந்துக்கள்

கிறிஸ்துமஸ் - கிறிஸ்தவர்கள்

ரம்ஜான் - இஸ்லாமியர்கள்

சில விழாக்களை பல்வேறு மதத்தைச் சார்ந்த மக்கள் ஒன்றுபட்டு, ஒற்றுமையாகக் கொண்டாடுகின்றனர்.

 

5. இந்தியாவில் புகழ்பெற்ற செவ்வியல் நடனங்களை பட்டியலிடு.

1. தமிழ்நாடு  - பரதநாட்டியம்  

2. கேரளா - கதகளி  

3. கர்நாடகா - யக்ஷகானம்  

4. வட இந்தியா - கதக்  

5. அசாம் - சத்ரியா

6. மணிப்பூர் - மணிப்புரி

7. ஒடிசா - ஒடிசி

8. ஆந்திரபிரதேசம் - குச்சிப்புடி

 

6. இந்தியா “வேற்றுமையில் ஒற்றுமை” நிலவும் நாடு என ஏன் அழைக்கப்படுகிறது?

• இந்தியா மாறுபட்ட புவியியல் அமைப்பு, தட்ப வெப்பநிலை, தாவரங்கள், விலங்குகள், பலவகைப்பட்ட கலாச்சாரம், பழக்க வழக்கங்கள், மொழிகள், நம்பிக்கைகள் அனைத்தும் கொண்டுள்ளது.

• இவ்வாறு இந்தியா பன்முகத்தன்மை நிறைந்த நாடாக இருப்பினும் நாட்டுப்பற்று என்ற உணர்வால் நாம் அனைவரும் ஒன்றுபட்டுள்ளோம்.

 

V. பின்வரும் வினாக்களுக்கு விரிவான விடையளி


1. மொழிசார் பன்முகத்தன்மை மற்றும் பண்பாட்டு பன்முகத்தன்மையினை விவரி.

• இந்தியாவின் 2001 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இந்தியா 122 முக்கிய மொழிகளையும், 1599 பிற மொழிகளையும் கொண்டுள்ளது.

• தமிழ் மொழியானது பழமையான திராவிட மொழி ஆகும்.

• இந்தியா ஏறத்தாழ 300 ஆண்டுகள் ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் இருந்தது.

• இதனால் ஆங்கிலம் ஒரு முக்கிய மொழியாக எழுச்சி பெற்றது.

• பள்ளிகள், கல்லூரிகளில் பயிற்று மொழியாகவும், அலுவலக மொழியாகவும், ஆங்கிலம் பயன்படுத்தப்படுகிறது.

பண்பாட்டு பன்முகத்தன்மை:

• பண்பாடு என்பது மக்களின் மொழி, உடை, உணவு முறை, மதம், சமூகப் பழக்க வழக்கங்கள், இசை, கலை மற்றும் கட்டிடக் கலைகளின் பாரம்பரியத்தை குறிக்கிறது.

• ஒரு குறிப்பிட்ட மக்களின் பண்பாடு அவர்களின் சமூக நடத்தையிலும் மற்றும் சமூக தொடர்புகளிலும் வெளிப்படுகிறது.

• இது சமூக வடிவமைப்புகளால் முன்னிறுத்தப்படும் குழு அடையாளத்தின் வளர்ச்சி நிலை ஆகும்.

• கலை மற்றும் கட்டிடக்கலை ஒரு சமுதாயத்தின் ஒருங்கிணைந்த அங்கம் ஆகும்.

• இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலமும் அவற்றிற்கான உயர்ந்த மரபையும் நுண்ணிய கலைவெளிப்பாட்டு வடிவங்களையும் பெற்றிருக்கின்றன.

 

2. இந்தியா “வேற்றுமையில் ஒற்றுமை” என்ற நாடாக இருப்பினும் நாம் அனைவரும் ஒன்றுபட்டுள்ளோம் - விளக்குக.

• இந்தியாபன்முகத்தன்மை நிறைந்தநாடு“நாட்டுப்பற்று” என்ற உணர்வால் ஒன்றுபட்டுள்ளோம்.

• தேசியக்கொடி, தேசியகீதம் தாய்நாட்டில் நாம் ஒற்றுமையுடன் இருக்க வேண்டியதன் அவசியத்தையும் உணர்த்துகிறது.

• தேசிய விழாக்கள் கொண்டாடப்படுவதால் நாம் அனைவரும் ஒரே நாட்டினர் என்ற உணர்வையும், நாட்டுப்பற்றையும் ஏற்படுத்துகின்றன.

• நாம் அனைவரும் இந்தியர்கள் என்ற உணர்வால் ஒரே தேசத்தால் ஒன்றுபட்டுள்ளோம்.

• விடுதலைப் போராட்டங்களும், இந்திய அரசியலமைப்புச் சட்டமும் இந்தியாவின் ஒற்றுமைக்கு சான்றாகத் திகழ்கின்றன.

 

VI. செய்முறைகள் மற்றும் செயல்பாடுகள். (மாணவர்களுக்கானது)


1. ஒரு நில அமைப்பியல் அப்பகுதி மக்களின் தொழில்களை தீர்மானிக்கிறது. உதாரணம் மூலம் இக்கூற்றினை நிரூபி.

2. ஏதேனும் ஒரு மாநிலம் பற்றிய தகவல்களை அறிந்து, அம்மாநில மக்களின் பாரம்பரியம், பண்பாடு குறித்த தகவல்களை ஒரு புகைப்படத் தொகுப்பாக தயார் செய்க.

3. தமிழ் நாட்டின் கலை மற்றும் கட்டிடக்கலை சார்ந்த புகைப்படங்களை தொகுக்க.

 

VII. உயர் சிந்தனை வினா


1. நம் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கொண்டாடப்படும் விழாக்களை வரிசைப்படுத்துக.

மாநிலங்கள் / விழாக்கள்

தமிழ்நாடு  - பொங்கல்

ஆந்திரப் பிரதேசம் - துர்கா பூஜை

கேரளா - ஓணம்

அஸ்ஸாம் - பிஹு

ஒடிசா - மேக பூர்ணிமா

ஹிமாச்சல பிரதேசம் - மகா சிவராத்திரி

கோவா - கோகுல அஷ்டமி

கர்நாடகா - உகடி

மகாராஷ்டிரம் - விநாயகர் சதுர்த்தி

பீஹார் - சாத் பூஜை

பஞ்சாப் - லோரி

சிக்கிம் - லட்சுமி பூஜை

 

VIII. வாழ்வியல் திறன்.


1. உனது பள்ளியில் ஒற்றுமையை நிலை நிறுத்த மேற்கொள்ளும் பரிந்துரைகள் யாவை?

1. பள்ளியில் சீருடை அணிதல்

2. மதம் சார்ந்த விழாக்களை கொண்டாடுவது

அ. - தீபாவளி  

ஆ. - பொங்கல் விழா

இ. - ரம்ஜான் விழா

ஈ. - ஹோலிபண்டிகை

3. சர்வசமய பிரார்த்தனை நடத்துதல்

4. சமபந்தி உணவு ஏற்பாடு செய்தல்.

5. பள்ளி விளையாட்டு விழா, ஆண்டுவிழா, நடத்துதல்.

6. மாணவர்களின் திறனை வெளிக்கொணர கலைவார விழா நடத்துதல்
Tags : Understanding Diversity | Term 1 Unit 1 | Civics | 6th Social Science பன்முகத் தன்மையினை அறிவோம் | பருவம் 1 அலகு 1 | குடிமையியல் | 6 ஆம் வகுப்பு சமூக அறிவியல்.
6th Social Science : Civics : Term 1 Unit 1 : Understanding Diversity : Exercises Questions with Answers Understanding Diversity | Term 1 Unit 1 | Civics | 6th Social Science in Tamil : 6th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : பருவம் 1 அலகு 1 : பன்முகத் தன்மையினை அறிவோம் : வினா விடை - பன்முகத் தன்மையினை அறிவோம் | பருவம் 1 அலகு 1 | குடிமையியல் | 6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : 6 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : பருவம் 1 அலகு 1 : பன்முகத் தன்மையினை அறிவோம்