பன்முகத் தன்மையினை அறிவோம் | பருவம் 1 அலகு 1 | குடிமையியல் | 6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் - மீள்பார்வை, கலைச்சொற்கள் | 6th Social Science : Civics : Term 1 Unit 1 : Understanding Diversity
மீள்பார்வை
❖ இந்தியா "வேற்றுமையில் ஒற்றுமை" நிறைந்த
நாடு.
❖ பன்முகத்தன்மை என்பது ஒருவரிடமிருந்து ஒருவர் மாறுபட்டு இருப்பினும் ஒற்றுமையாக வாழ்தல்.
❖ நிலஅமைப்பும் காலநிலையும் பன்முகத்தன்மையின் மீது
பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
❖ ஒரு பகுதியின் பொருளாதார நடவடிக்கைகளை அதன் நிலவியல்
கூறுகளும் காலநிலைகளும் பெரிதும் தீர்மானிக்கிறது.
❖ நில அமைப்புகளில் காணப்படும் பன்முகத்தன்மை அங்குள்ள
தாவரங்கள் மற்றும் உயிரினங்களின் தோற்றத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
❖ இந்தியாவில் மொழி, மதம், சமூக மற்றும் பண்பாடுகளில்
பன்முகத்தன்மை பரந்து காணப்படுகிறது.
❖ ஒரு கண்டத்திற்குரிய அனைத்து கூறுகளும்கொண்டிருப்பதால்
இந்தியாவை ஒரு துணைக்கண்டம் என்கிறோம்.
❖ இந்தியாவின் 2001 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி,
இந்தியா 122 முக்கிய மொழிகளையும், 1599 பிற மொழிகளையும் கொண்டுள்ளது.
❖ ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் நடைமுறைகள் மற்றும்
பழக்க வழக்கங்களை பண்பாடு எனும் சொல் குறிப்பிடுகிறது.
❖ இந்தியாவின் செவ்வியல் மற்றும் நாட்டுப்புற நடனங்கள்
நமது வளமான பண்பாட்டு பன்முகத் தன்மையினை பறைசாற்றுகின்றன.
கலைச் சொற்கள்
பன்முகத்தன்மை - பல்வேறு இன மக்களின் அல்லது பொருட்களின் பண்பு
சார்ந்து இருத்தல் -
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மக்கள்ஒருவரை ஒருவர் சார்ந்திருத்தல்
சக வாழ்வு - ஒற்றுமையாகவும்;
அமைதியாகவும் ஒன்றிணைந்து வாழ்தல்
மொழியியல் - மொழி பற்றிய அறிவியல் படிப்பு
இணைய வளங்கள
1. wikipedia.org/wiki/unity_in_diversity
2. www.yourarticlelibrary.com
3. www.readmeindia.com
4. www.indiaculture.nic.in
இணையச் செயல்பாடு
பண்முகத்தன்மையை ஏற்றுக்கொள்ளுதல்
இந்தியாவின்
கலை, கலாச்சாரம் மற்றும் நிலத்தோற்றங்களை அறியலாமா
படிநிலைகள்:
❖ இணைய உலாவியில் கீழே கொடுக்கப்பட்டுள்ள உரலியை தட்டச்சு
செய்யவும் அல்லது துரித துலங்கல் குறியீட்டை ஸ்கேன் செய்யவும். அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள
செல்பேசி செயலியை தரவிறக்கம் செய்து நிலைநிறுத்தவும்.
❖ வலது மேல் பக்கத்தில் உள்ள தேடு பொறியில் மாநிலத்தின்
பெயரை தட்டச்சு செய்து தேடி அதன் தனித்தன்மைகளை ஆராய்ந்து அறியவும்.
❖ அந்த பக்கத்தை துலாவி "Explore in 360'
" என்ற தேர்வினை பயன்படுத்தி புகழ்பெற்ற கட்டிடக்கலைகளை 360° கோணத்தில் கண்டுகளிக்கலாம்.
❖ உங்களுக்கு தேவையான நிலத்தோற்றங்களை தேடுபொறியில்
தேடி ஆராயவும்.
உரலி:https://www.google.com/culturalinstitute/beta/
திறன்பேசி செயலியின் உரலி:
https://play.google.com/store/apps/details? id=com.google.android.apps.cultural&hl=en