பருவம் 2 அலகு 3 | வரலாறு | 6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் - வினா விடை | 6th Social Science : History : Term 2 Unit 3 : From Chiefdoms to Empires

   Posted On :  28.08.2023 05:52 am

6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : பருவம் 2 அலகு 3 : குடித்தலைமையில் இருந்து பேரரசு வரை

வினா விடை

6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : பருவம் 2 அலகு 3 : குடித்தலைமையில் இருந்து பேரரசு வரை : புத்தக வினாக்கள், கேள்வி பதில்கள்

பயிற்சிகள்

 

I சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

 

1 நான்கு மகாஜனபதங்களில் மிகவும் வலிமையான அரசு எது?

அ) அங்கம்

ஆ) மகதம்

இ) கோசலம்

ஈ) வஜ்ஜி

[விடை : ஆ) மகதம்]

 

2. கீழ்க்கண்டவர்களில் கௌதம புத்தரின் சமகாலத்தைச் சேர்ந்தவர் யார்?

அ) அஜாதசத்ரு

ஆ) பிந்துசாரர்

இ) பத்மநாப நந்தா

ஈ) பிருகத்ரதா

[விடை : அ) அஜாதசத்ரு]

 

3 கீழ்க்காண்பனவற்றில் எது மௌரியர் காலத்திற்கான சான்றுகளாகும்?

அ) அர்த்த சாஸ்திரம்

ஆ) இண்டிகா

இ) முத்ராராட்சஷம்

ஈ) இவை அனைத்தும்

[விடை : ஈ) இவை அனைத்தும்]

 

4 சந்திரகுப்த மௌரியர் அறியணையைத் துறந்து ----------- என்னும் சமணத்  துறவியோடு சரவணபெலகோலாவுக்குச் சென்றார்.

அ) பத்ரபாகு

ஆ) ஸ்துலபாகு

இ) பார்ஸவநாதா

ஈ) ரிஷபநாதா

[விடை : அ) பத்ரபாகு]

 

5. செல்யூகஸ் நிகேட்டரின் தூதுவர் ---------------------

ஆ) கௌடில்யர்

இ) செர்சக்ஸ்

ஈ) மெகஸ்தனிஸ்

அ) டாலமி

[விடை : ஈ) மெகஸ்தனிஸ்]

 

6 மௌரிய வம்சத்தின் கடைசி அரசர் யார்?

அ) சந்திரகுப்த மௌரியர்

ஆ) அசோகர்

இ) பிருகத்ரதா

ஈ) பிந்துசாரர்

[விடை : ஈ) பிந்துசாரர்]

 

|| கூற்றைக் காரணத்துடன் பொருத்துக / சரியான விடையைத் தேர்ந்தெடு.

 

1 கூற்று: அசோகர் இந்தியாவின் மாபெரும் பேரரசர் என கருதப்படுகிறார்.

காரணம்: தர்மத்தின் கொள்கையின்படி அவர் ஆட்சி புரிந்தார்

அ) கூற்று காரணம் ஆகிய இரண்டும் சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.

ஆ) கூற்றும் காரணமும் உண்மையானவை, ஆனால் காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமல்ல.

இ) கூற்று சரி ஆனால் காரணம் தவறு

ஈ) கூற்று தவறு ஆனால் காரணம் சரி

விடை : அ) கூற்று காரணம் ஆகிய இரண்டும் சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.

 

2. கீழே கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளில் எது/எவை சரி.

கூற்று 1. ஒட்டுமொத்த இந்தியாவை ஒரே ஆட்சியின் கீழ் இணைந்த முதல் அரசர் சந்திரகுப்த மௌரியர் ஆவார்.

கூற்று 2. மௌரியரின் நிர்வாகம் பற்றிய செய்திகளை அர்த்தசாஸ்திரம் வழங்குகிறது.

அ) 1 மட்டும்

ஆ) 2 மட்டும்

இ) 1, 2 ஆகிய இரண்டும்

ஈ) 1ம் இல்லை 2ம் இல்லை

விடை : இ) 1, 2 ஆகிய இரண்டும்

 

3. கீழே கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளைக் கவனமாக கவனி. அக்கூற்றுகளில் சரியானது எது/எவை எனக் கண்டுபிடி

1. மகதத்தின் முதல் அரசர் சந்திரகுப்த மௌரியர்

2. ராஜகிரிகம் மகதத்தின் தலைநகராய் இருந்தது.

அ) 1 மட்டும்

ஆ) 2 மட்டும்

இ) 1 மற்றும் 2

ஈ) 1ம் இல்லை 2ம் இல்லை

விடை : ஆ) 2 மட்டும்

 

4 கீழ்க்காண்பனவற்றைக் காலக்கோட்டின்படி வரிசைப்படுத்தவும்

அ) நந்தா சிசுநாகா ஹரியங்கா மௌரியா

ஆ) நந்தா சிசுநாகா மௌரியா ஹரியங்கா

இ) ஹரியங்கா சிசுநாகா நந்தா மௌரியா

ஈ) சிசுநாகா மௌரியா நந்தா ஹரியங்கா

விடை : இ) ஹரியங்கா சிசுநாகா நந்தா மௌரியா

 

5. கீழ்க்கண்டவைகளில் எது மகதப் பேரரசின் எழுச்சிக்குக் காரணமாயிற்று

1. முக்கியத்துவம் வாய்ந்த அமைவிடம்

2. அடர்ந்த காடுகள் மரங்களையும், யானைகளையும் வழங்கின

3.கடலின் மீதான ஆதிக்கம்

4. வளமான இரும்புத் தாது கிடைத்தமையால்

அ) 1, 2 மற்றும் 3 மட்டும்

ஆ) 3 மற்றும் 4 மட்டும்

இ) 1, 2 மற்றும் 4 மட்டும்

ஈ) இவையனைத்தும்

விடை : இ) 1, 2 மற்றும் 4 மட்டும்

 

III கோடிட்ட இடங்களை நிரப்புக.


1 ராஜகிரகம் மகதத்தின் தொடக்ககாலத் தலைநகராக இருந்தது.

2. முத்ரராட்சசத்தை எழுதியவர் விசாகதத்தர்

3 அசோகர் பிந்துசாரரின் மகனாவார்.

4 மௌரியப் பேரரசை தோற்றுவித்தவர் சந்திரகுப்த மௌரியர்

5. நாடு முழுவதிலும் தர்மத்தைப் பரப்புவதற்காக தர்ம - மகா மாத்திரர்கள் பணியமர்த்தப்பட்டனர்.

 

IV . சரியா? தவறா?


1 தேவனாம்பியா எனும் பட்டம் சந்திரகுப்த மௌரியருக்கு வழங்கப்பட்டது. விடை: தவறு

2.அசோகர் கலிங்கப்போரில் தோல்வியடைந்த பின்னர் போரைக் கைவிட்டார். விடை: தவறு

3. அசோகருடைய தம்மா பௌத்தக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டவை. விடை : சரி

4 நமது காகிதப் பணத்தில் இடம் பெற்றுள்ள சிங்கங்கள் ராம்பூர்வா தூண்களின் காளை சிகரப் பகுதியிலிருந்து பெறப்பட்டவையாகும். விடை: தவறு

5. புத்தரின் உடல் உறுப்புகளின் எச்சங்கள் ஸ்தூயின் மையத்தில் வைக்கப்பட்டுள்ளன. விடை : சரி

 

V. கீழ்க்கண்டவற்றை பொருத்துக.


1) அர்த்தசாஸ்திரம் அ) கணா

2) மதச் சுற்றுப்பயணம் ஆ) மெகஸ்தனிஸ்

3) மக்கள் இ) சாணக்கியா

4) இண்டிகா ஈ) தர்மயாத்திரை

அ) 3 4 1 2

ஆ) 2 4 3 1

இ 3 1 2 4

ஈ) 2 1 4 3

விடை : அ) 3 4 1 2

 

VI. ஒன்று அல்லது இரண்டு வாக்கியங்களில் விடையளிக்கவும்.

 

1. மௌரியர் காலத்திற்கான இரண்டு இலக்கியச் சான்றுகளைக் குறிப்பிடவும்.

• அர்த்தசாஸ்திரம்

• முத்ராராட்சஷம்

 

2. ஸ்தூபி என்றால் என்ன?

• ஸ்தூபி என்பது அரைக்கோள வடிவமுடைய குவிமாடம் போன்ற அமைப்பு. செங்கல் அல்லது கற்களால் கட்டப்பட்டது.

• புத்தரின் உடல் உறுப்புகளின் எச்சங்கள் ஸ்தூபியின் மையத்தில் வைக்கப்பட்டிருக்கும்.

 

3. மகத அரச வம்சங்களின் பெயர்களைக் குறிப்பிடுக.

• ஹரியங்கா வம்சம் 

• சிசுநாக நம்சம் 

• நந்த வம்சம் 

• மௌரிய வம்சம்

 

4. மௌரியர் காலத்தில் அரசு வருவாய் எவற்றிலிருந்து பெறப்பட்டது?

• நிலங்களே அரசுக்கு அதிக வருவாயை ஈட்டித் தந்தது. நிலவரி (பாகா) மொத்த விளைச்சலில் 1/6 பங்கு.

• கூடுதல் வருவாயாக காடுகள், சுரங்கங்கள், உப்பு மற்றும் நீர்ப்பாசனம் ஆகியவற்றிலிருந்து பெறப்பட்ட வரிகள் அமைந்தன.

 

5. நகரங்களின் நிர்வாகத்தில் ‘நகரிகா' வுக்கு உதவியவர் யார்?

• ஸ்தானிகா

• கோவா

 

6. அசோகரின் இரண்டு மற்றும் பதிமூன்றாம் பாறைப் பேராணைகளிலிருந்து நீங்கள் அறிவதென்ன?

அசோகரின் இரண்டு மற்றும் பதிமூன்றாம் பாறைக் கல்வெட்டுகள் குறிப்பிடும் மூவேந்தர்கள்

• பாண்டியர் 

• சோழர் 

• கேரள புத்திரர் மற்றும் சத்திய புத்திரர்

 

7. மௌரியர்களைப் பற்றிக் குறிப்பிடுகின்ற ஒரு தமிழ் நூல் கூறுக.

மாமூலனாரின் அகநானுற்றுப்பாடல்

 

VII. கீழ்க்காணும் வினாக்களுக்கு விடையளி.


1. பௌத்தத்தைப் பரப்புவதற்கு அசோகர் என்ன செய்தார்? (ஏதேனும் மூன்று)

• அசோகர் தன்னுடைய மகன் மகிந்தாவையும் மகள் சங்கமித்ராவையும் பௌத்தத்தைப் பரப்புவதற்காக இலங்கைக்கு அனுப்பினார்.

• தம்மத்தின் கொள்கைகளைப் பரப்புவதற்காக, சமயப் பரப்பாளர்களை அனுப்பி வைத்தார்.

• பேரரசு முழுவதும் பௌத்தத்தைப் பரப்புவதற்காக தர்ம மகாமாத்திரர்கள் என்றும் புதிய அதிகாரிகளை நியமித்தார்.

 

2. மகதத்தின் எழுச்சிக்கான காரணங்களில் ஏதாவது மூன்றினை எழுதுக.

• மகதம் கங்கைச் சமவெளியின் கீழ்ப்பகுதியில் அமைந்திருந்தது. வளம் மிகுந்த இப்பகுதி வேளாண் விளைச்சலை அதிகரித்தது, இது அரசுக்கு நிலையான வருமானத்தை அளித்தது..

• அடர்ந்த காடுகள் கட்டுமானத்திற்கு மரங்களையும் படைகளுக்கு யானைகளையும் வழங்கியது.

• அதிக அளவிலான இயற்கை வளங்கள் குறிப்பாக இரும்பு, ஆயுதங்கள் செய்யவும் மேம்படுத்திக் கொள்ளவும் உதவியது.

 

VIII. உயர் சிந்தனை வினாக்கள்


1. கலிங்கப்போர் அசோகரது வாழ்வில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது எவ்வாறு?

• கி.மு 261ல் அசோகர் கலிங்கத்தின் மீது போர்தொடுத்து வெற்றி பெற்றார்.

• 13வது பாறைக் கல்வெட்டில் அசோகரே கலிங்கப் போரின் பயங்கரத்தை விவரித்துள்ளார்.

• அப்போருக்குப் பின் அசோகர் ஒரு பௌத்தர் ஆனார்.

• தர்மத்தின் கொள்கையை பரப்புவதற்காக சுற்றுப்பயணங்கள் (தர்மயாத்திரைகள்) மேற்கொண்டார்.

• அவரது கொள்கை அனைத்து மதங்களின் சாரமாகவுள்ள மனிதாபிமானத்தை உள்ளடக்கியது.

• இரக்க உணர்வு, அறக்கொடை, தூய்மை போன்றவைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தார்.

• அசோகர் தன்னுடைய மகன் மகிந்தாவையும் மகள் சங்கமித்ராவையும் பௌத்தத்தைப் பரப்புவதற்காக இலங்கைக்கு அனுப்பினார்.

• தம்மத்தின் கொள்கைகளைப் பரப்புவதற்காக, சமயப் பரப்பாளர்களை அனுப்பி வைத்தார்.

• பேரரசு முழுவதும் பௌத்தத்தைப் பரப்புவதற்காக தர்ம மகாமாத்திரர்கள் என்னும் புதிய அதிகாரிகளை நியமித்தார்.

 

2. நீ அசோகரைப் போன்ற ஒரு அரசராக இருந்தால் மேற்கொள்ளும் ஏதேனும் ஐந்து நலத்திட்டங்களை எழுதுக..

• அனைவருக்கும் இலவசக் கல்வி

• இயலாதவர்களுக்கும், முதியோருக்கும், நோயாளிகளுக்கும் தேவையில் உள்ளோருக்கும் இலவச உணவு.

• அனைத்து குடிமக்களுக்கும் இலவச மருத்துவ சிகிச்சை.

• வீடற்றவர்களுக்கு இலவச தங்குமிடம்.

• அனைவருக்கும் நீதி, பாலினம், மதம், சாதி பாகுபாடின்றி சமத்துவம்.

 

IX. படங்களைப் படிப்போம்.


இது அசோகருடைய பேராணைகள் பற்றிய படம்



அ) பேராணைகள் என்றால் என்ன?

அ) பேராணைகள் என்பது அரசரால் அல்லது உயர் பதவியில் இருப்பவரால் வெளியிடப்பட்ட பிரகடனங்கள் ஆகும்.


ஆ) எவ்வகைகளில் அசோகரது பேராணைகள் பயன்படுகின்றன?

ஆ) அசோகர் அமைதி, நேர்மை, நீதி ஆகியவற்றின் மீது கொண்டிருந்த நம்பிக்கையையும், மக்கள் நலன் மீது கொண்டிருந்த அக்கறையையும் தெரிந்துக் கொள்ள பேராணைகள் பயன்படுகின்றன.


இ) இப்பேராணைகள் எங்கெல்லாம் பொறிக்கப்பட்டுள்ளன?

இ) தூண்களிலும், பாறைகளிலும், குகைச் சுவர்களிலும் இப்பேராணைகள் பொறிக்கப்பட்டுள்ளன.


ஈ) சாஞ்சி கல்வெட்டில் பயன்படுத்தப்பட்டுள்ள எழுத்து முறையின் பெயரென்ன?

ஈ) பிராமி


உ) பாறைப் பேராணைகள் மொத்தம் எத்தனை உள்ளன?

உ) 33 பாறைப் பேராணைகள் உள்ளன.

 

X. நான் யார்.


1. நான் ஹரியங்கா அரச வம்சத்தைச் சேர்ந்தவன். திருமண உறவுகளின் மூலம் எனது பிரதேசங்களை விரிவுபடுத்தினேன். அஜாதசத்ரு எனது மகன், நான் யார்?

விடை : பிம்பிசாரர்

2. சமூகத்தை மாற்றியமைத்ததில் நான் முக்கியப்பங்கு வகித்தேன். கலப்பைக் கொழுமுனை செய்வதற்கு நான் பயன்படுகிறேன். நான் யார்?

விடை : இரும்பு

3. நான் தேவனாம்பிய என அறியப்பட்டேன். நான் அமைதி வழியை தழுவிக் கொண்டேன் நான் யார்?

விடை : அசோகர்

4. நான் இந்தியாவின் முதல் பேரரசை நிறுவினேன், நான் ‘சல்லேகனா' நோன்பிருந்தேன் நான் யார்?

விடை : சந்திரகுப்த மௌரியர்

5. அசோகரின் சிங்கத் தலைப்பகுதி தூணில் நான் காணப்படுகிறேன். நம்முடைய தேசக் கொடியின் மையத்தில் உள்ளேன். நான் யார்?

விடை : அசோக சக்கரம்

 

XI. பொருள்படுத்தி விடையைக் கண்டுபிடி 


1 மகதத்தை ஆண்ட முதல் அரச வம்சம் ஹரியங்கா  (39, 30, 27, 6, 5)

2 மௌரிய  பேரரசு இந்தியாவின் முதல் பெரிய பேரரசாகும். (28,30,27)

3. உதயன் புதிய தலை நகரான பாடலிபுத்திரத்திற்கு அடித்தளமிட்டார் (2, 13, 27, 38)

4 நறுமணப்பொருள் ஒரு முக்கியமான ஏற்று மதிப்பொருள் (17, 38, 24,11, 19, 22, 31, 34)

5 பண்டைய மகத நாட்டில் இருந்த மடாலயம் பின்னர் புகழ்பெற்ற கல்வி நிலையமாக திகழ்ந்தது (18, 35, 16, 14) நாளந்தா

6. நிலவரி பகா  (20, 5)

7 கலிங்கப் போரின் பயங்கரம் பாறைக்கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது (21, 37, 3, 4,32,33, 9, 10)

8 கிரேக்கர்கள் பிந்துசாரரை அமிர்தகதா என்று அழைத்தனர் (1, 25, 28, 13, 4,14)

9 சாரநாத் தூணின் சிகரப்பகுதியில் அமைந்துள்ளது. தர்மச்சக்கரம் (13, 28, 24, 7, 8, 3, 4, 10 29, 23)

10 அமைச்சரவை மந்திரிபரிஷத் என அழைக்கப்பட்டது (24, 16, 15, 30, 20, 30, 40, 12)

 

XII செயல்பாடுகள்

1 களப் பயணமாக அருங்காட்சியகம் செல்லுதல்.

2. அசோகர் சந்திரகுப்தர் ஆகியவர்களோடு தொடர்புடைய திரைப்படங்களைக் காணுதல்.

 

XII. வரைபடப்பணி

1 வரைபடத்தில் அசோகர் பேரரசின் எல்லைகளைக் குறிப்பிடவும்.

2 இந்திய ஆறுகள் வரைபடத்தில் கீழ்க்காணும் இடங்களைக் குறிக்கவும்.

அ) தட்சசீலம்

ஆ) பாடலிபுத்திரம்

இ) உஜ்ஜைனி

ஈ) சாஞ்சி

உ) இந்திரபிரஸ்தம்

 

XIV. வாழ்க்கைத் திறன்


1 அசோகச் சக்கரத்தின் மாதிரி ஒன்றைச் செய்யவும்.

2 சாஞ்சி ஸ்தூபியின் மாதிரி ஒன்றைச் செய்யவும்.

3 நமது தேசியக் கொடியின் படம் வரைந்து வர்ணம் தீட்டவும்.

 

XV. விடைக்கட்டகம்

 

கி.மு.(பொ.ஆ.மு) ஆறாம் நூற்றாண்டில் கங்கைச் சமவெளிப் பகுதிகளில் இருந்த இருவகைப்பட்ட அரசுகளின் பெயர்கள் என்ன?

விடை : கணசங்கங்கள்,  முடியாட்சி அரசர்கள்

நகரத்தை நிர்வகித்தவர்?

விடை : நகரிகா

சுதர்சனா ஏரி வெட்டப்பட்டதைக் குறிப்பிடும் கல்வெட்டு எது?

விடை : ஜூனாகத், கிர்னார்

இரண்டாம் பௌத்த சபையை வைசாலியில் கூட்டியது யார்?

விடை : காலசோகா

மூன்றாம் பௌத்த சபை அசோகரால் எங்கு கூட்டப்பட்டது?

விடை : பாடலிபுத்திரம்

நந்த வம்சத்தின் கடைசி அரசர் யார்?

விடை : தனநந்தர்

கலிங்கத்தின் தற்போதைய பெயர் என்ன?

விடை : ஒடிசா

ஏதேனும் இரண்டு மகாஜனபதங்களின் பெயர்களை கூறு?

விடை : மகதம், அவந்தி

மௌரியர் காலத்தில்  பயன்படுத்தப்பட்ட வெள்ளி நாணயங்களின் பெயர் என்ன ?

விடை : பணம்

Tags : From Chiefdoms to Empires | Term 2 Unit 3 | History | 6th Social Science பருவம் 2 அலகு 3 | வரலாறு | 6 ஆம் வகுப்பு சமூக அறிவியல்.
6th Social Science : History : Term 2 Unit 3 : From Chiefdoms to Empires : Exercises Questions with Answers From Chiefdoms to Empires | Term 2 Unit 3 | History | 6th Social Science in Tamil : 6th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : பருவம் 2 அலகு 3 : குடித்தலைமையில் இருந்து பேரரசு வரை : வினா விடை - பருவம் 2 அலகு 3 | வரலாறு | 6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : 6 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : பருவம் 2 அலகு 3 : குடித்தலைமையில் இருந்து பேரரசு வரை