Home | 7 ஆம் வகுப்பு | 7வது சமூக அறிவியல் | பயிற்சி வினா விடை

மக்கள் தொகை மற்றும் குடியிருப்புகளும் | முதல் பருவம் அலகு 3 | புவியியல் | 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் - பயிற்சி வினா விடை | 7th Social Science : Geography : Term 1 Unit 3 : Population and Settlement

7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : முதல் பருவம் அலகு -3 : மக்கள் தொகை மற்றும் குடியிருப்புகளும்

பயிற்சி வினா விடை

7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : முதல் பருவம் அலகு -3: மக்கள் தொகை மற்றும் குடியிருப்புகளும் : புத்தக வினாக்களுக்கான கேள்வி பதில்கள்
பயிற்சி 

I. சரியான விடையை தேர்ந்தெடுக்கவும் 

1. காக்கச இனத்தை ------- என்றும் அழைக்கலாம். 

அ) ஐரோப்பியர்கள்

ஆ) நீக்ரோய்டுகள் 

இ) மங்கோலியர்கள்

ஈ) ஆஸ்திரேலியர்கள் 

விடை: அ) ஐரோப்பியர்கள் 


2. இனம் ஆசிய அமெரிக்க இனமாகும். 

அ) காக்கச இனம்

ஆ) நீக்ரோக்கள் 

இ) மங்கோலியர்கள்

ஈ) ஆஸ்திரேலியர்கள் 

விடை: இ) மங்கோலியர்கள் 


3. உலக மக்கள் தொகை தினம் - ஆகும். 

அ) செப்டம்பர் 1

ஆ) ஜூன் 1 

இ) ஜூலை 11

ஈ) டிசம்பர் 2

விடை: இ) ஜூலை 11 


4. கிராமப்புறக் குடியிருப்புகள் அருகில் அமைந்துள்ளது. 

அ) நீர்நிலைகள்

ஆ) மலைப் பகுதிகள் 

இ) கடலோரப் பகுதிகள்

ஈ) பாலைவனப் பகுதிகள்

விடை: அ) நீர்நிலைகள் 


5. அளவின் அடிப்படையில் கீழ்க்காணும் நகர்ப்புற குடியிருப்புகளை வரிசைப்படுத்துக. 

1) நகரம்

2) மீப்பெருநகரம் 

3) தலைநகரம்

4) இணைந்த நகரம் 

அ) 4, 1, 3, 2

ஆ) 1, 3, 4, 2 

இ) 2, 1, 3, 4

ஈ) 3, 1, 2, 4

விடை : ஆ) 1, 3, 4, 2


II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

1. தென் ஆப்பிரிக்காவின் ------- பாலைவனத்தில் புஷ்மென்கள்  காணப்படுகிறது. 

விடை: கலஹாரி

2. மொழியின் பங்கு என்பது ------ குடும்ப பகிர்வு அம்சங்களின் தோற்றம் மற்றும் தொகுப்பாகும். 

விடை:  மொழிக்

3. ------ குடியிருப்பில் மக்கள் பெரும்பாலும் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை செயல்களில் ஈடுபட்டிருப்பார்கள்.

விடை: நகர

4. -------- நகரங்கள் பொதுவாக கிராமப்புற நகர்ப்புற எல்லைக்கு வெளியே அமைந்திருக்கும்.

விடை: செயற்கைகோள்

5. குடியிருப்பானது வழிபாட்டுத்தலங்களைச் சுற்றி அமைந்திருக்கும். 

விடை: யாத்திரைக்


III. அ. பொருத்துக.

ஆ                   ஆ

1. காக்கச இனம் – அ. ஆசிய அமெரிக்கர்கள் 

2 நீக்ரோ இனம்  - ஆ ஆஸ்திரேலியர்கள் 

3 மங்கோலிய இனம் - இ ஐரோப்பியர்கள் 

4. ஆஸ்ட்ரலாய்டு இனம் – ஈ. ஆப்பிரிக்கர்கள்

விடைகள் 

1. காக்கச இனம் – இ. ஐரோப்பியர்கள்

2 நீக்ரோ இனம்  - ஈ. ஆப்பிரிக்கர்கள் 

3 மங்கோலிய இனம் - அ. ஆசிய அமெரிக்கர்கள் 

4. ஆஸ்ட்ரலாய்டு இனம் – ஆ. ஆஸ்திரேலியர்கள்


ஆ. பொருத்துக,

அ        ஆ

1. சட்லஜ் கங்கைச் சமவெளி – அ. சிதறிய குடியிருப்பு

2. நீலகிரி – ஆ. நட்சத்திர வடிவக் குடியிருப்பு 

3. தென் இந்தியா – இ. செவ்வக வடிவ அமைப்பு 

4. கடற்கரை  - ஈ. குழுமிய குடியிருப்பு

5. ஹரியானா  - உ. வட்டக் குடியிருப்பு

விடைகள் 

1. சட்லஜ் கங்கைச் சமவெளி – இ. செவ்வக வடிவ அமைப்பு 

2. நீலகிரி – அ சிதறிய குடியிருப்பு 

3. தென் இந்தியா – ஈ. குழுமிய குடியிருப்பு  

4. கடற்கரை  - உ. வட்டக் குடியிருப்பு  

5. ஹரியானா  - ஆ நட்சத்திர வடிவக் குடியிருப்பு


IV. கீழே கொடுக்கப்பட்டுள்ள வாக்கியத்தை கருத்தில் கொண்டு சரியானதை () செய்யவும் 

1. கூற்று : உலகில் அநேக மொழிகள் பேசப்படுகின்றன.

காரணம் : மொழி வேற்றுமை உலகில் அதிக அளவில் காணப்படுகிறது. 

அ) கூற்றும் காரணமும் சரி, கூற்றைக் காரணம் சரியாக விளக்குகிறது. 

ஆ) கூற்றும் காரணமும் சரி ஆனால் கூற்றைக் காரணம் சரியாக விளக்கவில்லை . 

இ) கூற்று தவறு காரணம் சரி

ஈ) கூற்றும் காரணமும் தவறானவை. 

விடை : அ) கூற்றும் காரணமும் சரி, கூற்றைக் காரணம் சரியாக விளக்குகிறது. 


2. கூற்று : பழனி தமிழ்நாட்டில் யாத்திரைக் குடியிருப்பிற்கு ஒரு எடுத்துக்காட்டு ஆகும். 

காரணம் : அங்கு இரும்பு எஃகு தொழிற்சாலை அமைந்துள்ளது. 

அ) கூற்றும் காரணமும் சரி, கூற்றைக் காரணம் சரியாக விளக்குகிறது. 

ஆ) கூற்றும் காரணமும் சரி ஆனால் கூற்றைக் காரணம் சரியாக விளக்கவில்லை . . 

இ) கூற்று தவறு காரணம் சரி 

ஈ) கூற்றும் காரணமும் தவறானவை. 

விடை : ஆ) கூற்றும் காரணமும் சரி ஆனால் கூற்றைக் காரணம் சரியாக விளக்கவில்லை


V. பொருந்தாதை வட்டமிடுக. 

1. மீன்பிடித்தல், மரம் அறுத்தல், விவசாயம், வங்கி அலுவல் 

2. இமயமலை, ஆல்பஸ், ராக்கி, கங்கை  

3. சென்னை , மதுரை, திருநெல்வேலி, காஞ்சிபுரம்


VI. கீழ்க்காண்பனவற்றிற்கு சுருக்கமாக விடையளிக்கவும் 

1. இனங்களின் வகைகள்யாவை?

இனங்களின் வகைகள்: 

* காக்கசாய்டு (ஐரோப்பியர்கள்) 

* நீக்ராய்டு (ஆப்பிரிக்கர்கள்)

* மங்கோலாய்டு (ஆசியர்கள்) 

* ஆஸ்ட்ரலாய்டு (ஆஸ்திரேலியர்கள்) 


2. மொழி என்றால் என்ன?

மொழி: 

சமுதாய அமைப்பிற்கு மொழி கலாச்சாரத்தைப் பரப்பும் ஒரு பிரதான கருவியாகும். ஒருவர் மற்றொருவருடன் தொடர்பு கொள்வதற்கு (எழுத்து வடிவம் அல்லது ஒலி வடிவம்) பயன்படுத்தப்படுகிறது. 


3. குடியிருப்பு வரையறு. 

குடியிருப்பு: 

குடியிருப்பு என்பது மனித வாழ்விடமாகும். அங்கு விவசாயம், வாணிபம் மற்றும் பொழுதுபோக்கு ஆகிய செயல்களின் மூலம் ஒருவருக்கொருவர் கருத்துப் பரிமாற்றம் செய்துகொள்கின்றனர். 


4. நகர்ப்புற குடியிருப்புகள் எதன் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகின்றன? 

நகர்ப்புற குடியிருப்புகள் வகைப்படுத்தலின் அடிப்படை

* மக்கள் தொகையின் அளவு 

* தொழில் அமைப்பு 

* நிர்வாகம் 


5. பொலிவுறு நகரம் பற்றி சிறு குறிப்பு வரைக. 

பொலிவுறு நகரம்:

* நகர்ப்புறப் பகுதியில் உள் கட்டமைப்பு வசதி, வீட்டுமனை விற்பனை, தொலைத்தொடர்பு, எளிதாகக் கிடைக்கக் கூடிய சந்தை உள்ள இடங்களே பொலிவுறு நகரமாகும். 

* தமிழ்நாட்டில் 12 முக்கிய நகரங்கள் சிறப்புப் பொருளாதார நகரங்களாக மாற்றப்பட உள்ளன.


VII. காரணம் கூறுக

1. மும்பை ஒரு மிகப்பெரிய நகரம். 

மும்பை ஒரு மிகப்பெரிய நகரம். 

ஏனெனில் 

* மும்பை 10 மில்லியனுக்கு மேல் மக்கள் தொகை கொண்ட பெரிய நகரமான மிகப்பெரிய நகரமாகும். 

* மும்பை ஒரு தனித்த தலைநகரமாகவும் செயல்படுகிறது. 


2. இமயமலைப் பகுதியில் சிதறிய குடியிருப்பு காணப்படுகிறது. 

இமயமலைப் பகுதியில் சிதறிய குடியிருப்பு காணப்படுகிறது. 

ஏனெனில் 

* இமயமலைப் பகுதியில் காலநிலை, மலைப்பாதை, அடர்ந்த காட்டுப் பகுதி, புல்வெளிகள், தீவிர சாகுபடி பிரதேசங்கள் காணப்படுகிறது. 

* வீடுகள் இடைவெளி விட்டுக் காணப்படுகிறது.


VIII. வேறுபடுத்துக. 

1. மொழி மற்றும் மதம் 


மொழி

1. சமுதாய அமைப்பிற்கு கலாச்சாரத்தை பரப்பும் ஒரு பிரதான கருவியாகும்.

2. ஒருவர் மற்றொருவருடன் தொடர்பு கொள்வதற்கு எழுத்து வடிவிலோ அல்லது ஒலி வடிவிலோ பயன்படுகிறது.

3. அரசியல், பொருளாதார, சமூக மற்றும் மத செயல்பாடுகளின் கருத்துக்களை பரிமாறிக் கொள்ள வழி வகுக்கிறது.


மதம் 

1. குறிப்பிட்ட நம்பிக்கையும், வழிபாட்டு  முறையும் கொண்டதாகும். 

2. மனிதனை ஒரு மனித சமுதாயத்திற்குள் கொண்டு வரும். 

3. ஒரு குழுவின் அடையாளமாகவும், கலாச்சார புத்துணர்வுப் புள்ளியின் அடையாளமாகவும் திகழ்கிறது.


2. நீக்ரோ இனம் மற்றும் மங்கோலிய இனம் 



நீக்ரோ இனம்

1. நீக்ராய்டு இன மக்கள் ஆப்பிரிக்காவில் பல்வேறு பகுதிகளில் வாழ்ந்து வருகிறார்கள்

2. ஆப்பிரிக்க இனம்

3. கருமை நிறக் கண்கள், கருப்பு நிறத் தோல், கருமையான முடி, அகலமான மூக்கு, நீளமான தலை மற்றும் தடித்த உதடுகளைக் கொண்டவர்கள்

மங்கோலிய இனம் 

1. ஆசியா மற்றும் ஆர்க்டிக் பிரதேசத்தில் காணப்படுகிறார்கள். 

2. ஆசிய அமெரிக்க இனம் 

3. வெளிர் மஞ்சள் முதல் பழுப்பு  நிறத்தோல், நீளமான முடி, தட்டையான முக அமைப்பு, பெரிய தலை மற்றும்  மத்திமமான மூக்கு உடையவர்கள்


3. பெருநகரம் மற்றும் நகரம் 


பெருநகரம்

1. நன்கு வளர்ச்சியடைந்த மத்திய தொழில் மாவட்டத்தைக் கொண்ட, பல்வேறு தொழில்களை உள்ளடக்கிய ஒரு தனித்த குடியிருப்பு

2. ஒரு இலட்சம் மக்கள்தொகைக்கு மேல் அதிகமானோர் உள்ள இடங்களையே மாநகரம் என அழைக்கிறோம்.

நகரம் 

1. செயல்படும் நிகழ்வுகளின் அடிப்படையில் (நிர்வாகம், இராணுவம், கல்வி) பல நகரங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. 

2. 5000க்கும் மேலான மக்கள் இருக்கும் இடம் நகரம் 


4. நகர்ப்புற குடியிருப்பு மற்றும் கிராமப்புறக் குடியிருப்பு 


நகர்ப்புறக்குடியிருப்பு

1. மக்கள் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலைத் நிலைத் தொழில்களில் ஈடுபடுகின்றனர்.

2. தொழிற்சாலை, வாணிபம், வங்கிப் பணிகளில் ஈடுபடுத்திக் கொள்கிறார்கள்.

3. மக்கள்தொகையின் அளவு மற்றும் அடர்த்தி ஆகியவை அதிகமாகக் காணப்படுகின்றது. 

4. நகரம், மாநகரம்  

5. வேகமான, சிக்கல் நிறைந்த வாழ்க்கை

கிராமப்புறக் குடியிருப்பு 

1. சமுதாய மக்கள் முதல் தொழில்களில் ஈடுபடுகின்றனர். 

2. வேளாண்மை , மரம் அறுத்தல், மீன்பிடித்தல், சுரங்கத் தொழிலில் ஈடுபடுத்திக் கொள்கிறார்கள்.

3. மக்கள் தொகையின் அளவு மற்றும் அடர்த்தி ஆகியவை குறைவாகக் காணப்படுகிறது. 

4. சிறு கிராமம், கிராமம் 

5. எளிதான, அமைதியான வாழ்க்கை


IX. பத்தியளவில் விடையளி 

1. நான்கு முக்கிய மனித இனங்களைப் பற்றி விவரிக்கவும். 

நான்கு முக்கிய மனித இனங்கள்:

ஒரே பண்புகள் மற்றும் பழக்க வழக்கங்களைக் காலங்காலமாக பின்பற்றக் கூடிய மக்கள் குழுக்கள் மனித இனம் ஆகும். 

காக்கசாய்டு: 

* ஐரோப்பிய இனத்தவர்கள் 

* யூரேஷியாவில் காணப்படுகிறார்கள். 

* வெள்ளை நிறத்தோல், அடர்பழுப்பு நிறக் கண்கள், அலை போன்ற முடி, நீளமான மூக்கு உடையவர்கள். 

நீக்ராய்டு: 

* ஆப்பிரிக்க இனத்தவர்கள், 

* ஆப்பிரிக்காவில் பல பகுதிகளில் காணப்படுகிறார்கள்.

* கருமை நிறக் கண்கள், கருப்புநிறத் தோல், கருமையான முடி, அகலமான மூக்கு, நீளமான தலை, தடித்த உதடுகள் கொண்டவர்கள். 

மங்கோலாய்டு: 

* ஆசிய அமெரிக்க இனத்தவர்கள் 

* ஆசியா மற்றும் ஆர்க்டிக் பிரதேசத்தில் காணப்படுகிறார்கள்.

* வெளிர் மஞ்சள் முதல் பழுப்பு நிறத்தோல், நீளமான முடி, தட்டையான முக அமைப்பு, பெரிய தலை, மத்திமமான மூக்கு உடையவர்கள். 

ஆஸ்ட்ரலாய்டு: 

* ஆஸ்திரேலிய இனத்தவர்கள். 

* ஆஸ்திரேலியா மற்றும் ஆசியாவில் காணப்படுகிறார்கள். 

* அகலமான மூக்கு, சுருள் முடி, கருப்புநிறத் தோல் மற்றும் குறைவான உயரம் உடையவர்கள், குட்டையானவர்கள். 


2. கிராமப்புறக் குடியிருப்பைக் கட்டுப்படுத்தும் காரணிகள் யாவை?

கிராமப்புறக் குடியிருப்பைக் கட்டுப்படுத்தும் காரணிகள்: 

* இயற்கையான நிலத்தோற்றம் 

* உள்ளூர் தட்பவெப்பநிலை 

* மண்வளம் மற்றும் நீர்வளங்கள் 

* சமூக நிறுவனங்கள்

* பொருளாதார நிலை


3. கிராமப்புறக் குடியிருப்பின் வகைகள் யாவை? ஏதாவது மூன்றினைப் பற்றி விரிவாக எழுதவும். 

கிராமப்புறக் குடியிருப்பின் வகைகள்:

கிராமப்புறக் குடியிருப்புகள் அவற்றின் அமைப்பின் அடிப்படையில் நேர்கோட்டு, செவ்வகமான, வட்டமான, நட்சத்திர வடிவமான கிராமம் என வகைப்படுத்தப்பட்டுள்ளன. 

நேர்கோட்டு குடியிருப்பு: 

சாலைகள், இருப்புப்பாதைகள், ஆறு அல்லது கால்வாய், பள்ளத்தாக்கின் சரிவு ஆகியவற்றிற்கு அருகில் கட்டப்பட்ட வீடுகளின் தொகுப்பு நேர்கோட்டு குடியிருப்பு எனப்படும். 

எடுத்துக்காட்டு: இமயமலை, ஆல்ப்ஸ், ராக்கி மலைத்தொடர். 

செவ்வக வடிவக் குடியிருப்பு: 

இவ்வகைக் குடியிருப்புகள் பெரும்பாலும் செவ்வக வடிவில் நீளமானதாகவும் ஒன்றையொன்று நேர்கோணத்திலும் சந்தித்துக் கொள்ளும். செவ்வக வடிவக் குடியிருப்புகள் சமவெளிப் பகுதிகள், மலைகளுக்கிடையே உள்ள பள்ளத்தாக்குகளில் காணப்படுகின்றன. 

எடுத்துக்காட்டு: சட்லஜ் 

வட்டவடிவக் குடியிருப்பு: 

ஒரு மையப்பகுதியை சுற்றி வட்ட வடிவமாகக் காணப்படும் குடியிருப்புகளை வட்டவடிவக் குடியிருப்புகள் என்கிறோம். இவை ஏரிகள், குளங்களைச் சுற்றிக் காணப்படும்.


X. செயல்முறைகள்

ஆராய்க :


1. நீ எங்கு வசிக்கிறாய்? கிராமம் / நகரம் 

2. நீ வசிக்கும் குடியிருப்பு அமைப்பின் பெயரை எழுதவும் 

3. நீ இருக்கும் இடத்தில் அமைந்துள்ள நீர் நிலைகளைப் பற்றிக் குறிப்பிடுக. 

4. உன் பகுதியில் நடைபெறும் செயல்பாடுகள் சிலவற்றைக் குறிப்பிடுக. 

5. உன் பகுதியில் பயன்படுத்தப்படும் போக்குவரத்து வாகனங்களின் பெயர்களை எழுதுக. 



விடைகள்: 

1. கிராமம்                  

2. வட்ட வடிவ குடியிருப்பு   

3. ஏரி                       

4. வேளாண்மை            

5. மாட்டுவண்டி, இருசக்கர வாகனம், பேருந்து போக்குவரத்து

1. நகரம்

2. மாநகரம்

3. நீர்தேக்கம்

4. தொழிற்சாலை

5. 2, 3, 4 சக்கர வாகனங்கள், பொதுப்போக்குவரத்துகள். இரயில்வே


Tags : Population and Settlement | Term 1 Unit 3 | Geography | 7th Social Science மக்கள் தொகை மற்றும் குடியிருப்புகளும் | முதல் பருவம் அலகு 3 | புவியியல் | 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல்.
7th Social Science : Geography : Term 1 Unit 3 : Population and Settlement : Exercises Questions with Answers Population and Settlement | Term 1 Unit 3 | Geography | 7th Social Science in Tamil : 7th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : முதல் பருவம் அலகு -3 : மக்கள் தொகை மற்றும் குடியிருப்புகளும் : பயிற்சி வினா விடை - மக்கள் தொகை மற்றும் குடியிருப்புகளும் | முதல் பருவம் அலகு 3 | புவியியல் | 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : 7 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : முதல் பருவம் அலகு -3 : மக்கள் தொகை மற்றும் குடியிருப்புகளும்