Home | 12 ஆம் வகுப்பு | 12வது புவியியல் | எல்லைப்புறம் மற்றும் எல்லைக்கோடு

அரசியல் புவியியல் - எல்லைக்கோடுகளின் மரபுசார்ந்த வகைப்பாடு - எல்லைப்புறம் மற்றும் எல்லைக்கோடு | 12th Geography : Chapter 5 : Cultural and Political Geography

   Posted On :  27.07.2022 05:55 pm

12 வது புவியியல் : அலகு 5 : கலாச்சார மற்றும் அரசியல் புவியியல்

எல்லைப்புறம் மற்றும் எல்லைக்கோடு

வெவ்வேறு இறையான்மைகளுக்கு உட்பட்ட நிலப்பகுதி, ஆறுகள் மற்றும் ஏரிகள் போன்றவற்றால் சர்வதேச எல்லைப்புறம் மற்றும் எல்லைக் கோடுகள் பிரிக்கப்படுகின்றன.

எல்லைப்புறம் மற்றும் எல்லைக்கோடு

எல்லைப்புறம் (Frontiers)

வெவ்வேறு இறையான்மைகளுக்கு உட்பட்ட நிலப்பகுதி, ஆறுகள் மற்றும் ஏரிகள் போன்றவற்றால் சர்வதேச எல்லைப்புறம் மற்றும் எல்லைக் கோடுகள் பிரிக்கப்படுகின்றன. 1900ல் இருந்த எல்லைப்புறங்களில் பெரும்பாலானவை கிட்டத்தட்ட காணாமல் போய்விட்டன. அவை கோடுகளை கொண்ட எல்லைக் கோடுகளாக மாற்றப்பட்டு விட்டன. ஒரு எல்லைப்புறம் என்பது ஒரு அரசியல் புவியியல் பகுதியாகும். இது ஒரு அரசியல் குழுவால் வரையறுக்கப்பட்ட எல்லைகளுக்கு அப்பால் விரிவடைந்து காணப்படும்.


எல்லைக்கோடுகள் (Boundaries)

ஒரு எல்லைக்கோடு என்பது ஜனநாயகத்தால் அங்கீகரிக்கப்பட்டு நிறுவப்படும் அரசியல் பிரிவின் நிர்வாக பிரதேசம் அல்லது புவியியல் பிரதேசத்தின் அங்கீகரிக்கப்பட்ட வரம்பைக்குறிக்கும் ஒரு கோடு ஆகும். உதாரணம்: மாநிலம், நாடு அல்லது மாவட்டம்.

'மிக அதிகமான அண்டை  நாடுகளின் எல்லைகளைக்  கொண்ட நாடு சீனா ஆகும். அதன் எல்லைகளில் அமைந்துள்ள 14 நாடுகள்: இந்தியா, பாகிஸ்தான், தஜிகிஸ்தான், கிர்கிஸ்தான், கஜகஸ்தான், மங்கோலியா, ரஷ்யா, வட கொரியா, வியட்நாம், லாவோஸ், மியான்மர், பூட்டான் மற்றும் நேபாளம் ஆகும்.

"கனடா உலகின் இரண்டாவது பெரிய நாடு ஆகும். இது அமெரிக்காவுடன் மிக நீண்ட சர்வதேச எல்லைப் பகுதியை பகிர்ந்து கொள்கிறது. கனடா- அமெரிக்க நில எல்லைக்கோடு 8,893 கிலோ மீட்டர் நீளம் உடையதாகும்.


எல்லைக் கோடுகளின் வகைகள்

கலாச்சார நிலப் பரப்புடன் உள்ள தொடர்பின் அடிப்படையில் எல்லைக் கோடுகள் வகைப்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள மக்களால் நிரந்தரமாக ஆக்கிரமிக்கப்படுவதற்கு முன்னதாகவே சில எல்லைக்கோடுகள் நிறுவப்பட்டன. சில சந்தர்ப்பங்களில் குடியிருப்புகள் ஏற்கெனவே வளர்ந்து கொண்டே இருந்ததால், இறுதியாக நிறுவப்பட்ட எல்லையானது சம்பந்தப்பட்ட பகுதிகளின் கலாச்சார உண்மைகளுக்கு மாறான ஒரு தொடர்பைக் கொண்டுள்ளது. இந்த வகைப்பாடு எல்லைக் கோடுகள் செயல்பாட்டு அல்லது மரபுசார்ந்த வகைப்பாடு என அறியப்படுகிறது.


எல்லைக்கோடுகளின் மரபுசார்ந்த வகைப்பாடு

1. முந்தைய எல்லைக்கோடுகள்

இந்த எல்லைக் கோடுகள் அரசியல் - கலாச்சார ஆட்சிப் பகுதிக்கு முன் வரையப்பட்டவை.

இத்தகைய எல்லைக்கோடுகள் சர்ச்சைக்குரியவை அல்ல.

எ.கா. ஆப்பிரிக்கா மற்றும் அமெரிக்க நாடுகளின் எல்லைக்கோடுகள்

2. பின் தொடரும் எல்லைக்கோடுகள்

கலாச்சார ஆட்சிப் பகுதி முழு வளர்ச்சியுற்ற போது அரசியல் எல்லைக்கோடுகள் சர்ச்சைக்கு ரியவை. இத்தகைய எல்லைக்கோடுகள் ஒழுங்கற்ற அல்லது வடிவமில்லாத எல்லைக் கோடுகளாகும்.

எ.கா. ஐரோப்பிய நாடுகள்

3. அடுக்கமைவு எல்லைக்கோடுகள்

ஒரு அரசியல் எல்லை கோட்டின் ஒருங்கிணைந்த கலாச்சாரப் பகுதியைப் பிரிக்கும் போது, எல்லைகளுக்கு அப்பால் அதே இனத்தை சார்ந்த மக்கள் காணப்படுவார்கள்.

எ.கா. பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீர் பகுதி

4. எஞ்சிய எல்லைக்கோடுகள்

புத்தகங்களில் மட்டுமே காணப்படும் வரலாற்று எல்லைக்கோடுகள்.

எ.கா.பெர்சியா, கிழக்கு மற்றும் மேற்கு ஜெர்மனிக்கு இடையே இருந்த எல்லைக்கோடுகள்

Tags : Political Geography - Concept of Nation and State அரசியல் புவியியல் - எல்லைக்கோடுகளின் மரபுசார்ந்த வகைப்பாடு.
12th Geography : Chapter 5 : Cultural and Political Geography : Frontiers and Boundaries Political Geography - Concept of Nation and State in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 வது புவியியல் : அலகு 5 : கலாச்சார மற்றும் அரசியல் புவியியல் : எல்லைப்புறம் மற்றும் எல்லைக்கோடு - அரசியல் புவியியல் - எல்லைக்கோடுகளின் மரபுசார்ந்த வகைப்பாடு : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 வது புவியியல் : அலகு 5 : கலாச்சார மற்றும் அரசியல் புவியியல்