பருவம் 3 அலகு 2 | புவியியல் | 6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் - புவி மாதிரி | 6th Social Science : Geography : Term 3 Unit 2 : Globe

   Posted On :  30.08.2023 10:46 pm

6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : பருவம் 3 அலகு 2 : புவி மாதிரி

புவி மாதிரி

கற்றல் நோக்கங்கள் • நான்கு அடிப்படை திசைகள் பற்றி அறிதல். • புவியின் வடிவம் பற்றி அறிந்து கொள்ளல். • புவி மாதிரியைப் பற்றி புரிந்து கொள்ளல். • அட்சக்கோடுகள் மற்றும் தீர்க்கக்கோடுகள் பற்றி தெரிந்து கொள்ளுதல் மற்றும் அவற்றின் பயன்களை அறிதல். • உலகில் திட்டநேரம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது என்பதை தெரிந்து கொள்ளுதல்

அலகு 2

புவி மாதிரி


 

கற்றல் நோக்கங்கள்

• நான்கு அடிப்படை திசைகள் பற்றி அறிதல்.

• புவியின் வடிவம் பற்றி அறிந்து கொள்ளல்.

• புவி மாதிரியைப் பற்றி புரிந்து கொள்ளல்.

• அட்சக்கோடுகள் மற்றும் தீர்க்கக்கோடுகள் பற்றி தெரிந்து கொள்ளுதல் மற்றும் அவற்றின் பயன்களை அறிதல்.

•  உலகில் திட்டநேரம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது என்பதை தெரிந்து கொள்ளுதல்


திருநன்றியூர் என்னும் அழகிய கிராமத்தில், வடக்கு தெருவில் வசிக்கும் பூவேந்தனும், தெற்கு தெருவில் வசிக்கும் சூர்யாவும் ஆறாம் வகுப்பு படிக்கும் தோழர்கள். தினந்தோறும் இருவரும் பள்ளிக்கு ஒன்றாகச் சேர்ந்து சென்று வருவது வழக்கம், அப்பொழுது ஒரு நாள்.....


சூர்யா: பூவேந்தா, ஏன் இவ்வளவு தாமதமாக வருகிறாய்?

பூவேந்தன்: சற்றுப் பொறுத்துக்கொள்ள வேண்டும் சூர்யா. இதோ வந்து விட்டேன்.

சூர்யா: நீ இவ்வளவு தாமதமாக வருவதற்கு என்ன காரணம்?

பூவேந்தன் : நீ வசிப்பது தெற்குத் தெரு. நான் தொலைவில் உள்ள வடக்குத் தெருவில் வசிக்கிறேன். தொலைவிலிருந்து வருகின்றேன் அல்லவா? அதனால்தான் தாமதமாகிவிட்டது.

சூர்யா: சரி நாம் எந்தத் தெருவில் வசித்தால்என்ன? நாம் அனைவரும் புவியில்தான் வாழ்கிறோம். நினைவிருக்கிறதா?

பூவேந்தன்: ஆமாம்! ஆமாம்! நம் பொன்னி டீச்சர் சூரியகுடும்பம் பற்றி பாடம் நடத்தும்போது கூறியது நினைவிருக்கிறது.

சூர்யா: ஆனாலும் எனக்கு ஒரு சந்தேகம்

பூவேந்தன்: என்ன சந்தேகம்?

சூர்யா: நாம் வசிக்கின்ற வீடு, நமது மக்கள், பயன்படுத்தும் பொருட்கள், விலங்குகள் மற்றும் பறவைகள் எல்லாவற்றையும் நாம் முழுவதுமாகப் பார்க்க முடிகின்றது. ஆனால் டீச்சர் கூறிய புவியை மட்டும் நம்மால் முழுவதுமாகப் பார்க்க முடியவில்லையே!

பூவேந்தன்: நீ பார்க்கவில்லையா?

சூர்யா: இல்லையே, நீ எப்போதாவது பார்த்திருக்கிறாயா?

பூவேந்தன் : ஆம், நமது பள்ளியில்தான் பார்த்திருக்கிறேன்.

சூர்யா: நமது பள்ளியிலா?

பூவேந்தன்: ஆமாம்! நம் பொன்னி டீச்சர் மேசையின் மேல் பெரியதாக உருண்டையாக உள்ளதே அதுதான்.

சூர்யா: ஆமாம். பந்து மாதிரி ஒரு ஸ்டேண்டுல இருக்கே.

பூவேந்தன்: சரியாகக் கூறினாய். அது தான் புவியின் மாதிரி.

சூர்யா: ஆனால் புவி பால்வெளி விண்மீன்திரள் மண்டலத்தில் உள்ளது என்று டீச்சர் சொன்னாங்க. நீயோ மேசை மேல் உள்ளது என்று சொல்கின்றாய்! எனக்கு ஒரே குழப்பமா இருக்கு. சரி நாம் இருவரும் டீச்சரிடம் சென்று கேட்போம். இருவரும் பேசிக்கொண்டே பள்ளிக்கூடம் வந்தனர். பள்ளியில் மணி அடிக்கும் சத்தம் கேட்டது. பின்னர் காலை வழிபாட்டுக் கூட்டம் முடிந்து வகுப்புக்குச் சென்றனர். சமூக அறிவியல் பாட வேளையில் பொன்னி டீச்சரிடம் சென்று சூர்யா தனது சந்தேகத்தைக் கேட்டான்.

சூர்யா : வணக்கம் டீச்சர்

டீச்சர்: வணக்கம்

சூர்யா : டீச்சர், நீங்கள் அன்று சூரியகுடும்பம் பாடம் நடத்தும்போது நாம் வாழ்கின்ற புவி, பால்வெளி விண்மீன்திரள் மண்டலத்தில் இருக்கின்றது என்று தானே கூறினீர்கள்? ஆனால் பூவேந்தன் உங்கள் மேசையின் மீது இருக்கிறது என்கிறான்.

டீச்சர்: ஆமாம். அது உண்மைதான், ஆனால் மேசையின் மேல் உள்ளது புவியின் மாதிரி.

சூர்யா : புவி மாதிரியா? எனக்கு விளக்கமாகச் சொல்லுங்கள் டீச்சர்.

டீச்சர்: கட்டாயம் சொல்கிறேன்.

உடனே மாணவர்கள் அனைவரையும் அமரச் செய்து கீழ்க்கண்டவாறு விளக்கினார்.

 

திசைகள் (Directions)

புவியில் திசைகளைச் சுட்டிக்காண்பிக்கும் பொழுது வடக்கு திசையை அடிப்படையாகக் கொள்ளவேண்டும். ஒருவர் வடக்கு திசையை நன்கு அறிந்திருந்தால் மற்ற திசைகளான தெற்கு, கிழக்கு, மேற்கு ஆகியனவற்றை எளிதாக அறிந்து கொள்ள இயலும். மேற்கண்ட நான்கு திசைகளும் அடிப்படை திசைகளாகும்.


சூரியன் கிழக்கில் தோன்றி, மேற்கில் மறைவதை நாம் அறிந்திருக்கின்றோம். நாம் காலையில் சூரியனை நோக்கி நின்றால், அது கிழக்கு திசையாகும். நமக்கு பின்னால் இருக்கும் திசை, மேற்கு ஆகும். இவ்வாறு நிற்கும்போது நமது இடது கை வடக்கு நோக்கியும் வலது கை தெற்கு நோக்கியும் இருக்கும் என்பதை முதலில் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.


புவி மாதிரி (Globe)


சூரியக்குடும்பத்தில் உள்ள கோள்களில் சூரியனிடமிருந்து மூன்றாவதாக உள்ள கோளான புவியில் நாம் வாழ்கின்றோம். இது மிகப்பெரிய அளவில் இருப்பதாலும், இதன் மேற்பரப்பின் மிகச் சிறிய பகுதியில் நாம் வசிப்பதாலும், புவியின் உருவத்தை நம்மால் முழுமையாகப் பார்த்துணர முடியாது. அவ்வாறு பார்க்க வேண்டுமெனில், விண்வெளிக்குச் சென்று முழுமையாகப் பார்க்கலாம். எனவே, புவியை முழுமையாகப் பார்த்துணரவும், அதிலுள்ள சிறப்பம்சங்களை அறியவும் புவியைப் போன்று கற்பனையாக முப்பரிமாணத்தில், குறிப்பிட்ட அளவையில் உருவாக்கப்பட்டதே புவி மாதிரி (Globe) ஆகும்.

உங்களுக்கு தெரியுமா?

புவி 510.1 மில்லியன் சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டதாகும்.

புவியானது துருவப் பகுதிகளில் தட்டையாகவும், நிலநடுக்கோட்டுப் பகுதியில் சற்றுப் பருத்தும், கோள (Spherical) வடிவமாக காணப்படுகிறது. ஆனாலும் புவியின் வடிவத்தை எந்த வடிவியல் உருவத்துடனும் ஒப்பிட முடியாது. எனவே, இதன் வடிவம் புவிவடிவம் (Geoid) என்று அழைக்கப்படுகிறது.

புவி தனது அச்சில் 23/2 • சாய்ந்த நிலையில், மேற்கிலிருந்து கிழக்காகத் தன்னைத்தானே சுற்றிக்கொண்டு, சூரியனையும் சுற்றி வருகின்றது.

இந்தச் சாய்ந்த நிலையை அச்சாகக் கொண்டு புவிமாதிரி (Globe) அமைக்கப்பட்டுள்ளது. இந்த அச்சு ஒரு கற்பனையே, இதுபோல் உண்மையான அச்சு நமது புவியில் இல்லை.

உங்களுக்கு தெரியுமா?

• உலகில் முதன்முதலாக புவி மாதிரியை (Globe) கி.பி.(பொ.ஆ) 150-ஆம் ஆண்டில் கிரேக்கர்கள் உருவாக்கியுள்ளனர்.

• இந்திய வானியல் அறிஞர் முதலாம் ஆரியபட்டர் அவர்கள் எழுதிய சித்தாந்தம்" என்ற "ஆர்யபட்ட நூலில் விண்மீன்கள் வானில் மேற்குப்புறமாக நகர்வது போன்ற தோற்றம், புவி தன்னுடைய அச்சில் தன்னைத்தானே சுற்றிக் கொள்வதால் விளைகிறது" என்று குறிப்பிட்டுள்ளார்

 

புவிமாதிரியின் மீது கோடுகள் (Lines on the Globe)

புவியில் ஓர் இடம் எங்கு அமைந்துள்ளது என்பதை மிகத் துல்லியமாக அறிந்து கொள்ளவும், தூரம், நேரம் ஆகியவைகளைக் கணக்கிடவும், புவியின் மீது கிடைமட்டமாகவும் செங்குத்தாகவும் கற்பனையாகக் கோடுகள் வரையப்பட்டுள்ளன. இவை அட்சக்கோடுகள் மற்றும்  தீர்க்கக் கோடுகள் என்று அழைக்கப்படுகின்றன.

 

உங்களுக்கு தெரியுமா?


கிரேக்க ரோமானிய கணித வல்லுநர், வான் ஆய்வாளர் மற்றும் புவியியல் ஆய்வாளராகிய தாலமி (Ptolemy) என்பவர் முதன் முதலில் நில வரைபடத்தில் அட்ச தீர்க்கக் கோடுகளை வரைந்தவராவார்.

இவருடைய 'Geographia' என்ற நூலில் புவியின் அளவும், அதன் மேற்பரப்பைக் குறித்த விவரங்களும், அட்சக்கோடுகள் மற்றும் தீர்க்கக் கோடுகளின் அடிப்படையில் அமைந்த பல்வேறு இடங்களின் பட்டியலும் இடம் பெற்றுள்ளது.

 

அட்சக்கோடுகள் (Latitudes)

புவியின்மீது கிழக்கிலிருந்து மேற்காக கிடைமட்டமாக வரையப்பட்டுள்ள கற்பனைக் கோடுகள், அட்சக்கோடுகள் எனப்படும்.

புவியின் மையத்தில் காணப்படும் O° அட்சக்கோடு நிலநடுக்கோடு எனப்படும். இது அட்சக்கோடுகளின் தொடக்கமாகும். இக்கோட்டிலிருந்து வடக்கிலும் தெற்கிலும் 90° வரை இணையான கோடுகளாக சமதூர இடைவெளியில் வரையப்பட்டுள்ளன. ஒவ்வொரு அட்சக்கோட்டிற்கும் இடைப்பட்ட நிலப்பரப்பு தூரம் 111 கி.மீ. ஆகும்.


புவி (Geiod) வடிவத்துடன் காணப்படுவதால், 90° வடக்கு மற்றும் தெற்கு நோக்கி செல்லச்செல்ல அட்சக்கோடுகளின்நீளம் குறைந்துக் கொண்டே செல்கின்றது. இவை 90° வடக்கு 90° தெற்குப் பகுதியில் கோடாக இல்லாமல், புள்ளியாகக் காணப்படுகின்றன. இவை வடதுருவம் மற்றும் தென்துருவம் என அழைக்கப்படுகின்றன.

நிலக்கோட்டிலிருந்து வடதுருவம் வரை வட அரைக் கோளத்தில் கிடைமட்டமாக வரையப்பட்டுள்ள அட்சக்கோடுகள் 'வட அட்சக்கோடுகள்' (Northern Latitudes) எனவும், தென் அரைக் கோளத்தில் வரையப்பட்டுள்ள அட்சக்கோடுகள் தென் அட்சக்கோடுகள்' (Southern Latitudes) எனவும் அழைக்கப்படுகின்றன.

வட அரைக்கோளத்தில் 89 அட்சக்கோடுகளும் தென் அரைக்கோளத்தில் 89 அட்சக்கோடுகளும், இடையில் ஒரு நிலநடுக்கோடும், இரு துருவங்களிலும், கோடுகள் புள்ளியாகவும் என, மொத்தம் 181 அட்சக்கோடுகள் புவியில் வரையப்பட்டுள்ளன.

 

உங்களுக்ளுக்கு தெரியுமா?

புவியின் நடுவில் வரையப்பட்டுள்ள நில நடுக்கோடு (Equator) மற்ற அட்சக் கோடுகளை விட நீளமாகக் காணப்படுகிறது. எனவே, இக்கோடு 'பெருவட்டம்' (Great Circle) என்று அழைக்கப்படுகிறது.

 

செயல்பாடு :


ஒரு தாளில் வட்டம் ஒன்று வரைக. அதன் மையத்தில் கிடைமட்டமாக ஒரு கோடு வரைந்து, அவ்வட்டத்தினைச் சம பாகங்களாகப் பிரிக்கவும். இக்கோட்டினை 0° என்று கருதிக்கொண்டு பாகைமானி உதவியுடன் இரு பாகங்களிலும் 90°வரை 15° இடைவெளியில் கோடுகள் வரைக. உன்னால் இப்பொழுது வரையப்பட்ட கோடுகளே அட்சக் கோடுகளாகும்.



 

வட அரைக்கோளம் (Northern Hemisphere)


0°நிலநடுக்கோட்டிலிருந்து 90°வடதுருவம் வரையுள்ள புவிப்பரப்பு பகுதி வட அரைக்கோளம் (Northern Hemisphere) எனப்படும்.

 

தென் அரைக்கோளம் (Southern Hemisphere)


0° நிலநடுக்கோட்டிலிருந்து 90° தென் துருவம் வரையுள்ள புவிப்பரப்பு பகுதி தென் அரைக்கோளம் (Southern Hemisphere) எனப்படும்.

மேற்கண்ட அரைக்கோள முறை அடிப்படையிலேயே ஒரு நாடு அல்லது ஒரு இடம் எந்த அரைக்கோளத்தில் அமைந்துள்ளது என்பதை அறிகிறோம்.

 

உயர் சிந்தனை வினா :

அட்சக்கோட்டின் அடிப்படையில் இந்தியா எந்த அரைக்கோளத்தில் அமைந்துள்ளது?

 

முக்கிய அட்சக்கோடுகள் (Important lines of latitudes)

புவி தனது அச்சில் 23° சாய்ந்த நிலையில் தன்னைத்தானே சுற்றிக் கொண்டு, சூரியனையும் சுற்றி வருகின்றது. அவ்வாறு சுற்றி வரும்போது சூரியக்கதிர்கள் புவியில் விழுகின்ற கோணத்தின் அடிப்படையில், கீழ்க்கண்ட அட்சக்கோடுகள் முக்கியத்துவம் பெறுகின்றன. அவைகள்,


 

உங்களுக்கு தெரியுமா?

• 0° அட்சக் கோட்டிலிருந்து 23° ½ வடக்கு மற்றும் தெற்கு பகுதியில் வரையப் பட்டுள்ள அட்சக்கோடுகள் 'தாழ் அட்சக்கோடுகள்' Low Latitudes எனவும்

• 23½ %° வடக்கு முதல் 66½ ° வடக்கு வரையிலும், 23½ ° தெற்கு முதல் 66° தெற்கு வரையிலும் வரையப்பட்டுள்ள அட்சக்கோடுகள் 'மத்திய அட்சக் கோடுகள் Middle Latitudes எனவும்

• 66% வடக்கு முதல் 90° வடக்கு வரையிலும், 66%° தெற்கு முதல் 90° தெற்கு வரையிலும் வரையப்பட்டுள்ள அட்சக் கோடுகள் ‘உயர் அட்சக்கோடுகள்' High Latitudes, எனவும் அழைக்கப்படுகின்றன.

(ஆதாரம்: A Dictionary of Geography - Susan Mayhew, Oxford University Press, Fifth Edition -2015) 

சூரியக்கதிர்கள் புவியின் மீது விழுகின்றபோது, கதிர்கள் அனைத்து இடங்களிலும் சமமாக விழுவதில்லை. மாறாக, நிலநடுக்கோட்டுப் பகுதியில் செங்குத்தாகவும், துருவம் நோக்கிச் செல்லச் செல்ல சாய்ந்த நிலையிலும் விழுகின்றன. இதனால், புவி முழுவதும் சீரான வெப்பநிலை காணப்படுவதில்லை. அடிப்படையில் பல எனவே புவி மண்டலங்களாக சூரியனிடமிருந்து பெறுகின்ற வெப்பத்தின் பிரிக்கப்படுகிறது. இஃது அட்சக்கோடுகளின் அடிப்படையில் பல மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.



வெப்பமண்டலம் (Torrid Zone)

நிலநடுக்கோட்டிலிருந்து (0) வடக்கில் கடகரேகை (23° 61) வரை மற்றும் தெற்கில் மகரரேகை (23½%° தெ) வரை சூரியக்கதிர்கள் செங்குத்தாக விழுவதால் இப்பகுதி அதிக வெப்பமடைகிறது. இதனால் புவியின் மற்ற பகுதிகளை விட இங்கு அதிக வெப்பநிலை நிலவுகிறது. எனவே, இப்பகுதி 'வெப்பமண்டலம்' என அழைக்கப்படுகிறது.

மிதவெப்ப மண்டலம் (Temperate Zone)

வட அரைக்கோளம் கடகரேகை (23½%° வ) முதல் ஆர்க்டிக் வட்டம் (66%°வ) வரையிலும், தென் அரைக்கோளம் (23/½° தெ) மகரரேகை முதல் (66½%° தெ) அண்டார்டிக் வட்டம் வரையுள்ள பகுதிகளில் சூரியக்கதிர்கள் சாய்வாக விழுவதால் இங்கு மிதமான வெப்பநிலை நிலவுகிறது. எனவே இப்பகுதி 'மித வெப்பமண்டலம்' என்று அழைக்கப்படுகிறது.

குளிர் மண்டலம் (Frigid Zone)

வட அரைக்கோளம் ஆர்க்டிக் வட்டம் (66½° வ) முதல் வடதுருவம் (90° வ) வரையிலும், தென் அரைக்கோளம் அண்டார்டிக் வட்டம் (66½ தெ) முதல் தென்துருவம் (90° தெ) வரையுள்ள பகுதிகளில் சூரியக் கதிர்கள் ஆண்டு முழுவதும் மிகவும் சாய்ந்த நிலையில் விழுவதால், இங்கு மிக மிக குறைவான வெப்பநிலை நிலவுகிறது. எனவே இப்பகுதி 'குளிர்மண்டலம்" அழைக்கப்படுகிறது.

 

உங்களுக்கு தெரியுமா?

அட்சரேகை (Latitude)- அகலாங்கு

தீர்க்கரேகை (Longitude) - நெட்டாங்கு

பூமத்தியரேகை (Equator) - நிலநடுவரை

கடகரேகை (Tropic of Cancer) - கடகவரை

மகரரேகை (Tropic of Capricorn) - மகரவரை எனவும் தமிழில் அழைக்கப்படுகின்றன.

(ஆதாரம் - அறிவியல் களஞ்சியம், தமிழ்ப் பல்கலைக்கழகம்).

 

தீர்க்கக்கோடுகள் (Longitudes)

புவியின் மீது வடக்கு தெற்காக, செங்குத்தாக வரையப்பட்டுள்ள கற்பனைக் கோடுகள் தீர்க்கக் கோடுகள் அல்லது மெரிடியன்கள் எனப்படும். இக்கோடுகள் வட துருவத்திலிருந்து தென் துருவம் வரை அரைவட்டக் கோடுகளாக உள்ளன.

தீர்க்கக்கோடுகளில் 0° தீர்க்கக்கோடு முதன்மை தீர்க்கக்கோடு (Prime Meridian) என்று அழைக்கப்படுகிறது. இங்கிருந்து கிழக்காக 180° வரை 180 கோடுகளும், மேற்காக 180°வரை 180 கோடுகளும் மொத்தம் 360 கோடுகள் வரையப்பட்டுள்ளன. இக்கோடுகள் அனைத்தும் துருவப்பகுதிகளில் ஒன்றிணைகின்றன.


O° யிலிருந்து கிழக்காக உள்ள 180° தீர்க்கக்கோடும், மேற்காக உள்ள 180° தீர்க்கக்கோடும் வெவ்வேறான கோடுகள் அல்ல. இருகோடுகளும் ஒன்றே.

O° யிலிருந்து 180° கிழக்கு வரை வரையப்பட்டுள்ள தீர்க்கக்கோடுகள் 'கிழக்கு தீர்க்கக்கோடுகள்' (Eastern Longitudes) எனவும் 180° மேற்கு வரை காணப்படும் தீர்க்கக்கோடுகள் 'மேற்கு தீர்க்கக்கோடுகள்' (Western Longitudes) எனவும் அழைக்கப்படுகின்றன. அரைவட்டமாக எதிரெதிரே காணப்படும் தீர்க்கக் கோடுகள் இணையும்பொழுது ஒரு 'பெருவட்டம்' உருவாகிறது.

 

உங்களுக்கு தெரியுமா?

தீர்க்கக்கோடுகள் புவியில் நிலநடுக்கோட்டுப்பகுதியில் 11 கி.மீ. இடைவெளியிலும், 45° அட்சப்பகுதிகளில் 79கி.மீ. இடைவெளியிலும், துருவப்பகுதிகளில் இடைவெளியின்றியும் காணப்படுகின்றன.

 

செயல்பாடு


ஒரு பந்தினை எடுத்துக் கொள்ளவும். அப்பந்தினை ஒரு இரும்புக் கம்பியினால் ஒரு நடுமையத்திலிருந்து நேர் எதிர் மையம் வரை துளையிடவும். பின்பு கம்பியை எடுத்துவிடவும். மேல்முனையை ஒரு புள்ளியாகவும் கீழ்முனையை குறிக்கவும். மேல்முனையை வடதுருவம் என்றும், கீழ்முனையை தென்துருவம் எனவும் பெயரிடுக. பின்னர் வடதுருவத்தைச் சுற்றி ஒரு வட்டமிடவும். வட்டத்தின் சுற்றளவு 360° ஆகும். பாகைமானி உதவியுடன் 15°இடைவெளியில் வடதுருவத்திலிருந்து தென்துருவத்திற்குக் கோடுகள் வரைக. இப்பொழுது நீ வரைந்த கோடுகள் தீர்க்கக் கோடுகளாகும்.


 

கிழக்கு அரைக்கோளம் (Eastern Hemisphere)

0° தீர்க்கக்கோட்டிலிருந்து 180° கிழக்கு தீர்க்கக்கோடு வரை காணப்படும் புவிப்பரப்பு பகுதி 'கிழக்கு அரைக்கோளம்' என அழைக்கப்படுகிறது.


 

மேற்கு அரைக்கோளம் (Western Hemisphere)


0° தீர்க்கக் கோட்டிலிருந்து 180° மேற்கு தீர்க்கக் கோடுவரை காணப்படும் புவிப்பரப்பு பகுதி 'மேற்கு அரைக்கோளம்' என அழைக்கப்படுகிறது.

 

செயல்பாடு

தீர்க்கக்கோட்டின் அடிப்படையில் நாம் வாழும் இந்தியா எந்த அரைக்கோளத்தில் அமைந்துள்ளது என்பதை புவிமாதிரியில் கண்டறிந்து கூறுக.

 

முக்கிய தீர்க்கக்கோடுகள் (Significant Lines of Longitude)

கிரீன்விச் தீர்க்கக்கோடு (Greenwich Meridian)


இங்கிலாந்து நாட்டின் இலண்டனுக்கு அருகிலுள்ள கிரீன்விச் என்னுமிடத்தில் 'இராயல் வானியல் ஆய்வுமையம்' (Rayal Astronomical observatory) அமைந்துள்ளது. 

இம்மையத்தின் வழியே செல்லும் தீர்க்கக் கோட்டினைத் தீர்க்கக் கோடுகளின் தொடக்கக் கோடாக வைத்துக் கொள்வதென, 1884ஆம் ஆண்டு அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் நடந்த பன்னாட்டு கருத்தரங்கில் அனைத்து நாடுகளும் ஒப்புக்கொண்டன. எனவே இக்கோடு 0° என் வரையறுக்கப்பட்டது. இக்கோடு 'முதன்மை தீர்க்கக்கோடு' (Prime Meridian) எனவும், கிரீன்விச் வழியே செல்வதால்'கிரீன்விச் தீர்க்கக்கோடு' (Greenwich Meridian) எனவும் அழைக்கப்படுகிறது.

 


பன்னாட்டு தேதிக்கோடு (International Date Line)

தீர்க்கக் கோடுகளில் 180° தீர்க்கக்கோடானது பன்னாட்டு தேதிக்கோடாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


இது பசிபிக் பெருங்கடலில் அலாஸ்காவிற்கும், இரஷ்யாவிற்கும் இடையில் பேரிங் நீர்ச்சந்தி வழியாக செல்கின்றது. ஒருவர் மேற்கிலிருந்து கிழக்காக இக்கோட்டுப் பகுதியைக் கடந்தால் ஒருநாள் குறையும். மாறாக, கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி கடந்தால் ஒருநாள் கூடும். இக்கோட்டினை அடிப்படையாகக் கொண்டு உலகில் அனைத்துப் பகுதிகளிலும் தேதி நிர்ணயிக்கப்படுகிறது. 

 

உங்களுக்கு தெரியுமா?

பன்னாட்டு தேதிக்கோடு வளைந்து செல்வதற்குக் காரணம், இது நேராகச் சென்றால், ஒரே நாட்டிற்குள் இரண்டு தேதிகள் அமையும். இந்த குழப்பத்தினைத் தவிர்ப்பதற்காகவே இக்கோடு வளைத்து வரையப்பட்டுள்ளது.


 

புவி வலைப்பின்னல் (Earth Grid)

புவியின் மீது கற்பனையாக வரையப்பட்டுள்ள அட்சக்கோடுகள் மற்றும் தீர்க்கக்கோடுகளின் ஒருங்கிணைந்த அமைப்பு "புவி வலைப்பின்னல் (Earth Grid or Geographic Grid)" என அழைக்கப்படுகிறது.


புவியில் ஓர் இடத்தின் அமைவை மிகத் துல்லியமாகத் தெரிந்து கொள்ள அட்சக் கோட்டுப்பரவலும், தீர்க்கக் கோட்டுப்பரவலும் தேவைப்படுகின்றன.

 

தீர்க்கக்கோடுகளும் நேரமும் (Longitude and Time)

வடதுருவத்தையும், தென்துருவத்தையும் இணைத்து 360 தீர்க்கக்கோடுகள் புவியின் மீது வரையப்பட்டுள்ளன. இதில் 180° கிழக்கு அரைக்கோளம் வரையிலும் 180° மேற்கு அரைக்கோளம் வரையிலும் இக்கோடுகள் காணப்படுகின்றன. இத்தீர்க்கக்கோடுகளை அடிப்படையாகக் கொண்டு நேரம் கணக்கிடப்படுகிறது.

 

தகவல் பேழை

• புவி தன் அச்சில் ஒருமுறை தன்னைத்தானே சுற்றிக் கொள்ளும் கால அளவு ஒரு நாள்

• 1 நாள் = 24 மணி நேரம்

• 1 மணி நேரம் =60 நிமிடங்கள்

•  24 மணி நேரத்திற்கு = 24 x 60 = 1440 நிமிடங்கள்

• புவி கோளத்தின் சுற்றளவு = 360°

•  360° = 360 தீர்க்கக்கோடுகள்

•  360° = 1440 நிமிடங்கள்

•  1° யின் நேரம் = 1440/360 =  4 நிமிடங்கள்

1°யை கடக்க புவி எடுத்துக்கொள்ளும் கால அளவு = 4 நிமிடங்கள்

• 60 நிமிடங்கள் 4 நிமிடங்கள் = 60/4 = 15

• 1மணிநேரத்தில்15°தீர்க்கக்கோடுகளைப் புவி கடக்கிறது.

 

தல நேரம் (Local Time)

ஒவ்வொரு தீர்க்கக்கோட்டிற்கும் நேராக சூரியன் உச்சியில் வரும் பொழுது அக்கோட்டிலுள்ள எல்லா இங்களிலும் நேரம் நண்பகல் 12 மணி, இதுவே தல நேரம் எனப்படும்.

ஒவ்வொரு தீர்க்கக்கோட்டிற்கு நேராக ஒரு நாளில் ஒருமுறைதான் சூரியன் நேர் உச்சிக்கு வரமுடியும். எனவே தலநேரம் ஒவ்வொரு தீர்க்கக் கோட்டிற்கும் மாறுபடும்.

0° கிரீன்விச் தீர்க்கக்கோட்டிற்குச் சூரியன் உச்சநிலையில் வரும் நண்பகல் 12 மணி இந்த இடத்திற்குத் தலநேரம் ஆகும். மேலும் பன்னாட்டுத் திட்ட நேரம் இங்கிருந்து கணக்கிடப்படுகிறது. இது GMT (Greenwich Mean Time) என அழைக்கப்படுகிறது.

எடுத்துக்காட்டாக, கிரீன்விச் தீர்க்கக்கோட்டில் நண்பகல் 12 மணி என்றால் அங்கிருந்து, கிழக்கு தீர்க்கம் 1 பாகையில் பிற்பகல் 12:04மணி எனவும், மேற்கு தீர்க்கம்1பாகையில் முற்பகல் 11:56 ஆகவும் இருக்கும். எனவே எந்த

ஒரு தீர்க்கக்கோட்டிலிருந்தும் கிழக்கே செல்லச் செல்ல நேரம் கூடும், மேற்கே செல்லச் செல்ல நேரம் குறையும்

 

உங்களுக்கு தெரியுமா?

1. மெரிடியன் (Meridian) என்ற சொல் 'மெரிடியானஸ்'  (Meridianus) என்ற இலத்தீன் மொழிச் வந்ததாகும். சொல்லிலிருந்து இதற்கு நண்பகல் Midday (Medius - middle, dies = day) எனப் பொருள். எனவே Meridian என்பது சூரியன் ஓர் இடத்தின் நேர் மேலே உச்சியில் உள்ளதைக் குறிக்கிறது.

2. a.m என்பது 'anti - meridiem' (anti = before) நண்பகலுக்கு முன்னதாக எனப் பொருள்படும்.

3.p.m என்பது 'post - Meridiem' (Post = after or later) நண்பக லுக்குப் பிறகு எனப் பொருள்படும்.

 

திட்டநேரம் (Standard Time)

ஒவ்வொரு தீர்க்கக்கோட்டிற்கும் நேராக சூரியன் உச்சியில் வரும்பொழுது தலநேரம் அமையும் எனக் கணக்கிட்டோம். இதன்படி ஒரு நாட்டின் வழியே பல தீர்க்கக்கோடுகள் செல்லக்கூடும். இவ்வாறு கணக்கிட்டால் ஒரு நாட்டிற்குப்பலவித நேரம்அமைந்துவிடும்.எனவே ஒரு நாட்டிற்கு ஒரே மாதிரியான நேரக்கணக்கீடு இருக்கவேண்டும் என்பதற்காகக் குறிப்பிட்ட ஒரு தீர்க்கக்கோட்டினை ஆதாரமாகக் கொண்டு பொதுவான நேரத்தை அமைத்துக்கொள்வது திட்டநேரம் எனப்படும்.

ஒரு நாட்டின் திட்டநேரத்தினைக் கணக்கிட அந்நாட்டின் வழியாகச் செல்லும் ஒரு குறிப்பிட்ட தீர்க்கக்கோடு பயன்படுத்தப்படுகிறது. இது திட்ட தீர்க்கக்கோடு (Standard Meridian) எனப்படுகிறது. இது 15° அல்லது 74° யின் மடங்குகளாக இருக்கும் விதமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

இதற்கான காரணம், அந்நாட்டின் திட்ட நேரத்திற்கும், கிரீன்விச் திட்ட நேரத்திற்கும் உள்ள வேறுபாட்டினை ஒரு மணி நேரம் அல்லது அரை மணி நேரம் என்ற கணக்கீட்டில் அறியலாம்.

 

இந்திய திட்டநேரம் (Indian Standard Time)

இந்தியாவின் தீர்க்கக் கோடுகளின் பரவல் 68° 7 கிழக்கு முதல் 97 25 கிழக்கு வரை உள்ளது. இதனடிப்படையில், சுமார் 29 தீர்க்கக்கோடுகள் இந்தியாவின் வழியே செல்கின்றன. ஆகவே, இந்தியாவிற்கு 29 திட்டநேரங்கள் கணக்கிடுவது நடைமுறைக்கு சாத்தியமற்றது. எனவே, இந்தியாவின் மையத்தில் செல்லும் 82° கிழக்கு தீர்க்கக்கோட்டினை ஆதாரமாகக்கொண்டு இந்திய திட்டநேரம் IST (Indian standard time) கணக்கிடப்படுகிறது.



தகவல் பேழை

இந்தியா கிடைமட்டப்பரவலில் மேற்கில் குஜராத்தில் உள்ள கெளர்மோட்டா (Ghuar Mota) என்ற இடத்திற்கும், கிழக்கில் அருணாச்சல பிரதேசத்திலுள்ள கிபித்து (Kibithu) என்ற இடத்திற்கும் சமதூர இடைவெளியில், உத்திரப்பிரதேச மாநிலம் அலகாபாத்தில் உள்ள மிர்சாபூர் (Mirzapur) என்ற இடத்தின் வழியே 822° கிழக்கு தீர்க்கக்கோடு செல்கிறது.

 

உலக நேர மண்டலம் (Time Zones)

உலகளவில் 24 நேர மண்டலங்கள் உள்ளன. சில நாடுகள் நீண்ட பரப்பளவில் காணப்படுவதால் ஒன்றுக்கும் மேற்பட்ட தல நேரங்களை கொண்டுள்ளன. உதாரணமாக ரஷ்யா நாட்டிற்கு 7 நேர மண்டலங்கள் உள்ளன.


 

செயல்பாடு :

(உலக நேர மண்டல வரைபடத்தை உற்று நோக்கவும்)

1. கிரீன்வீச் திட்டநேரத்திற்கும் மொழிச் வந்ததாகும். திட்டநேரத்திற்கும் உள்ள நேர இடைவெளி எவ்வளவு?

2. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் காலை 5 மணியாக இருக்கும்போது இந்தியாவின் தலைநகரமான புதுடெல்லியின் நேரம் என்ன?

3. இலண்டனில் நள்ளிரவு 12 மணியாக இருக்கும்போது, இந்தியாவில் நேரம்

என்ன?

4. கிரீன்வீச் திட்டநேரத்திலிருந்து ஆஸ்திரேலியாவின் சிட்னி நகர் ------------------ மணிநேர வித்தியாசத்தில் காணப்படுகிறது.

5. செந்தமிழ் என்பவர் சென்னையில் இருந்து காலை 9 மணிக்கு புறப்படும் விமானத்தில் இலண்டன் நகருக்கு பயணிக்கிறார். 12 மணி நேர பயணத்திற்குப் பின் அங்குள்ள நேரப்படி, எத்தனை மணிக்கு அவர் இலண்டன் சென்றடைந்திருப்பார்?

 

நாம் காணும் இப் புவிமாதிரியில் அட்சக்கோடுகள் மற்றும் தீர்க்கக்கோடுகள் பற்றிப் பார்த்தோம். மேலும் இதில்நிலப்பரப்புகள், கடல்கள், பேராழிகள், நாடுகள் மற்றும் பல சிறப்பம்சங்கள் இதில் காணலாம்.

 

நினைவில் நிறுத்துக

1. புவி மாதிரி மற்றும் நிலவரைபடத்தில் கிடைமட்டமாக, கிழக்கு மேற்காக வரையப்பட்டுள்ள கற்பனைக் கோடுகள் அட்சக்கோடுகள் எனப்படும்.

2. புவி மாதிரி மற்றும் நிலவரைபடத்தில் செங்குத்தாக, வடக்கு தெற்காக வரையப்பட்டுள்ள கற்பனைக் கோடுகள் தீர்க்கக்கோடுகள் எனப்படும்.

3. 0° அட்சக்கோடு நிலநடுக்கோடு எனப்படுகிறது.

4. 0°தீர்க்கக்கோடு 'கிரீன்விச்தீர்க்கக்கோடு' மற்றும் முதன்மை தீர்க்கக்கோடு (Prime Meridian) எனப்படுகிறது.

5.நிலநடுக்கோட்டிலிருந்து 90° வடதுருவம் வரையுள்ள பகுதி 'வடக்கு அரைக்கோளம்' (Northern Hemisphere) எனவும், 90° தென்துருவம் வரையுள்ள பகுதி 'தென் அரைக்கோளம்' (Southern Hemisphere) எனவும் அழைக்கப்படுகிறது.

6. 0° கிரீன்விச் தீர்க்கக்கோட்டிற்கு வலப்புறம் 180° கிழக்கு தீர்க்கக்கோடு வரை பரவியுள்ள பகுதி கிழக்கு அரைக்கோளம்' (Eastern Hemisphere) எனவும், இடப்புறம் 180° மேற்கு தீர்க்கக்கோடு வரையுள்ள பகுதி 'மேற்கு அரைக்கோளம்' (Western Hemisphere) எனவும் அழைக்கப்படுகின்றன.

7. அட்சக்கோடுகள் வட்ட வடிவத்தில் தோராயமாக 111 கி.மீ. இடைவெளியில் வரையப்பட்டுள்ளன. துருவப்பகுதியில் இவை புள்ளியாக உள்ளன.

8. தீர்க்கக்கோடுகள் அரை வட்டக் கோடுகளாகும். நில நடுக் கோட்டுப் பகுதியில் 111 கி.மீ இடைவெளியிலும், 45° அட்சப் பகுதிகளில் 79கி.மீ இடைவெளியிலும், துருவப்பகுதியில் இடைவெளியின்றியும் வரையப்பட்டுள்ளன.

9. அட்சக்கோடுகள் இணைவதில்லை. தீர்க்கக் கோடுகள் அனைத்தும் துருவப்பகுதியில் இணையும்.

10. தீர்க்கக்கோடுகளை அடிப்படையாகக் கொண்டே நேரம் கணக்கிடப்படுகிறது. 180° தீர்க்கக்கோடு தேதிக்கோடாகும்.

 

கலைச் சொற்கள்

1. புவி மாதிரி (Globe) -  புவியைப்போன்ற கற்பனை உருவாக்கம்

2. அட்சக்கோடு(Latitude)  - கிடைமட்டமாக, கிழக்கு மேற்காக வரையப்பட்டுள்ள கற்பனைக்கோடு

3. தீர்க்கக்கோடு (Meridian) - செங்குத்தாக, வடக்கு தெற்காக வரையப்பட்டுள்ள கற்பனைக் கோடு

4. ஜியாய்டு (Geoid) - புவியின் வடிவம்

5. அரைக்கோளம் (Hemisphere)  - 0°அட்ச மற்றும் தீர்க்கக் கோட்டினையும் திசையினையும் அடிப்படையாக வைத்து புவியை பாகங்களாகப் பிரித்து காட்டுவது.

6. நிலநடுக்கோடு(Equator))  - புவியின் மையத்தில் கிடைமட்டமாகச் செல்லும் O° அட்சக்கோடு.

7. கடகரேகை (Tropic of Cancer) -231/20வட  அட்சக்கோடு.

8. மகரரேகை - (Tropic of Capricorn) 231/2 0 தென் அட்சக்கோடு

9. ஆர்க்டிக் வட்டம் (Arctic Circle) - 661/2 0 வட அட்சக்கோடு

10. அண்டார்டிக் வட்டம் (Antarctic Circle) – 661/2 0 தென் அட்சக்கோடு


இணையச் செயல்பாடு

புவி மாதிரி

இச்செயல்பாட்டின் மூலம் புனி மாதிரியின் முப்பரிமாண அமைப்பை பற்றியும் உள்ளடுக்குகளைப் பற்றியும் அறிய முடியும்.


படிநிலைகள்:

படி -1 கொடுக்கப்பட்ட உரலியைப் பயன்படுத்தி செயல்பாட்டு தளத்திற்கு செல்லலாம்.

படி -2 அங்கு சிவப்பு நிற "hot spot" என்ற அமைப்பை சொடுக்கி புவியில் உள்ள முக்கிய நிலத்தோற்றங்களை காண முடியும்.

படி -3 "Core" என்ற அமைப்பை சொடுக்கி புவியின் உள்ளடுக்குக ளை காண முடியும்.

படி -4 புவிக்கோளத்தை சுட்டியின் உதவியுடன் இழுப்பதன் மூலம் சுழல வைக்க முடியும்.


உரலி :

https://solarsystem.nasa.gov/planets/earth/overview/

* படங்கள் அடையாளத்திற்கு மட்டுமே.

தேவையெனில் Adobe Flash யை அனுமதிக்க.

Tags : Term 3 Unit 2 | Geography | 6th Social Science பருவம் 3 அலகு 2 | புவியியல் | 6 ஆம் வகுப்பு சமூக அறிவியல்.
6th Social Science : Geography : Term 3 Unit 2 : Globe : Globe Term 3 Unit 2 | Geography | 6th Social Science in Tamil : 6th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : பருவம் 3 அலகு 2 : புவி மாதிரி : புவி மாதிரி - பருவம் 3 அலகு 2 | புவியியல் | 6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : 6 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : பருவம் 3 அலகு 2 : புவி மாதிரி