பேணத் தகுந்த மேம்பாடு - புவியியல் - கலைச்சொற்கள் | 12th Geography : Chapter 7 : Sustainable Development

   Posted On :  27.07.2022 06:12 pm

12 வது புவியியல் : அலகு 7 : பேணத் தகுந்த மேம்பாடு

கலைச்சொற்கள்

புவியியல் : பேணத் தகுந்த மேம்பாடு: புவியியல்

கலைச்சொற்கள்

1. கடற்கரையோர மண்டலங்கள் (Coastal zone): நிலத்தில் உள்ள உயர் ஓத குறியிலிருந்து கண்டத்திட்டு வரை உள்ள பகுதி. இது கண்டத்தின் அமிழ்பகுதியாகும்

2. புவி உச்சி மாநாடு (Earth summit): 1992 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ரியோ டி ஜெனிரோ யோ, பிரேசிலில் புவியின் சுற்றுச்சூழல் மீதான அனைத்து நாடுகளின் அரசாங்களுக்கு இடையே நடைபெற்ற உயர்நிலை கூட்டங்கள்

3. புவிவெப்பமயமாதல் (Global Warming): கதிர்வீச்சை உறிஞ்சும் வாயுக்களை அளவுக்கு அதிகமாக வெளியிடுவதால் மெதுவாக உயரும் புவி வெப்பநிலையைக் குறிப்பது.

4. உள்நாட்டு அதிகாரம் (Local Authority): அதிகாரபூர்வமான ஒரு நிர்வாகம் அதிக அதிகாரமுடைய நிர்வாகத்தின் வழிகாட்டல்படி பொறுப்பேற்று உள்மட்டத்தில் நிர்வாக மற்றும் நலத்திட்ட பணிகள் செய்யும் ஒரு அமைப்பு உதாரணம். பஞ்சாயத்துக்கள்

5. ஆரோக்கியம் (Health): உடல் நோயற்றும் மனம் கவலையற்றும் இருக்கும் ஒரு நிலை

6. வளிமக்கரைசல் (Aerosol): நுண்ணிய திரவத்துளிகள், திண்மம் அல்லது வாயுக்கள் வளிமண்டலத்தில் சில குறிப்பிட்ட காலத்திற்கு கலந்து நிற்பது. 7. கல்லி (Gully): நீரின் செயலால் உருவாகும் ஒரு பள்ளத்தாக்கு 8.உயிரி எரிப்பொருள் (Biomass) : எரிபொருளாக பயன்படுத்தப்படும் கரிமப்பொருட்கள் குறிப்பாக மின்சார உற்பத்திக்கு பயன்படுத்தப்படுகிறது


இணையச் செயல்பாடு

 

பேணத் தகுந்த மேம்பாடு

 

இந்த செயல்பாடு மூலம் மாணவர்கள் இயற்கையின் கொடையாகிய வளங்களைப் பேணிப் பாதுகாக்க வேண்டிய தேவையை புரிந்து கொள்வார்கள். மூன்று Rகளை பயன்படுத்தி எவ்வாறு இயற்கை வளங்களை பாதுகாக்க முடியும் என்பதையும் அறிந்து கொள்வார்கள்


 

படிகள்


படி 1: URL அல்லது QR குறியீட்டினைப் பயன்படுத்தி இச்செயல்பாட்டிற்கான இணையப்பக்கத்திற்கு செல்க. அங்கு பக்கம் ஒன்று . "Instructions and Play game" என இரு விருப்பத் தேர்வுகளுடன் திறக்கும்.


படி 2: செயல் பாட்டை ஆரம்பிக்கும் முன் வழிகாட்டலை நன்கு படிக்க.


படி 3: அநேக பொருட்கள் திரையில் தோன்றும். அவற்றை ஒரு பொம்மையின் உதவியுடன் சேகரித்து அவற்றை வகைப் படுத்த வேண்டும்.


படி 4: அதன் பிறகு அவற்றை அவற்றிற்கென்று கொடுக்கப் பட்ட மூன்று தொட்டிகளில் சேகரிக்க வேண்டும்.


படி 5: இதற்கான நேரம் மூன்று நிமிடங்கள் மட்டுமே. விளையாட்டின் முடிவில் உங்களின் மதிப்பெண் தெரியும்.

 

உரலி

http://images.nationalgeographic.com/wpf/media-

content/richmedia/1/1143/ project/dist/desktop.html


*படங்கள் அடையாளத்திற்கு மட்டுமே.

Tags : Sustainable Development | Geography பேணத் தகுந்த மேம்பாடு - புவியியல்.
12th Geography : Chapter 7 : Sustainable Development : Glossary Sustainable Development | Geography in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 வது புவியியல் : அலகு 7 : பேணத் தகுந்த மேம்பாடு : கலைச்சொற்கள் - பேணத் தகுந்த மேம்பாடு - புவியியல் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 வது புவியியல் : அலகு 7 : பேணத் தகுந்த மேம்பாடு