மனிதனால் ஏற்படும் பேரிடர்கள் - பேரிடர் அபாயக் குறைப்பு விழிப்புணர்வு - புவியியல் - கலைச்சொற்கள் | 12th Geography : Chapter 8 : Man Made Disasters Public Awareness For Disaster Risk Reduction
கலைச்சொற்கள்
1. பேரிடர்: மனிதன் மற்றும் உடைமைகளை உள்ளடக்கிய சமூகத்தின் இயக்கத்தினைத் தீவிரமாக பாதிப்பது பேரிடர். பாதிக்கப்பட்ட சமூகமானது தனது வளங்களைப் பயன்படுத்தி பேரிடரைச் சமாளிக்க முடியாத அளவிற்கு, அதாவது அச்சமூகத்தின் சமாளிப்புத் திறனைக் காட்டிலும் மிக அதிகமான பாதிப்புகளை ஏற்படுத்துவது.
2. பேரிடர் ஆபத்து குறைத்தல்: முறையான முயற்சிகள் மூலம் பேரிடர் ஆபத்துக்களைக் குறைக்கும் பயிற்சி, பேரிடர்களுக்கான காரணங்களை ஆய்வு செய்தல் மற்றும் மேலாண்மை செய்தல்.
3. தணித்தல்: ஆபத்து மற்றும் அது தொடர்பான இடர்களினால் ஏற்படும் மோசமான விளைவுகளைக் குறைத்தல்.
4. தயார்நிலை: பேரிடர்களை சிறப்பாக எதிர் கொள்ளல், தகுந்த நடவடிக்கை எடுத்தல், பாதிப்புகளிலிருந்து வெளி வருதல் போன்ற செயல்களைச் செய்வதற்கான திறன்.
5. தடுத்தல்: ஆபத்து மற்றும் அது தொடர்பான பேரிடர்களின் மோசமான விளைவுகளை முற்றிலுமாக தடுத்தல்.
6. பொது விழிப்புணர்வு: பேரிடர் ஆபத்துகள், பேரிடர்களை ஏற்படுத்தும் காரணிகள், பேரிடர்களின்போது எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பாதிப்புக்குள்ளாவதை குறைத்தல் ஆகியவை பற்றிய பொது அறிவு.
7. மீளும் தன்மை: ஆபத்துக்குள்ளாக்கப்பட்ட சமூகத்தின் எதிர்ப்பு, உட்கிரகித்தல், சூழ்நிலைக்குப் பொருந்துதல் மற்றும் பேரிடர்களிலிருந்து மீள்வதாகும்.
8. Hyogo செயல் கட்டமைப்பு: உலகளவில் 2005- 2015 வரையிலான காலத்தில் பேரிடர் ஆபத்துக் குறைப்பிற்கான முயற்சிகளைப் பற்றிய வரைபடம். இது பேரிடர் ஆபத்துக்குறைப்பினை ஊக்குவிக்கத்தக்க செயல்பாட்டு வழிகாட்டிகளைக் கொண்டது.
இந்த செயல்பாடு மாணவர்களுக்கு மனிதரால் உண்டாகும் பேரழிவின் தாக்கத்தையும் அதை எவ்வாறு எதிர் கொள்ள வேண்டும் என்பதையும் போதிக்கும்.
படி 1: URL அல்லது QR குறியீட்டினைப் பயன்படுத்தி இச்செயல்பாட்டிற்கான இணையப்பக்கத்திற்கு செல்க. அங்கு பக்கம் ஒன்று "Play" என்று திறக்கும்.
படி 2: அதை நாம் தொடும் போது அறிவுறுத்தல்களோடு அடுத்த பக்கம் திறக்கும். அதை தொடும் போது அடுத்த பக்கத்திற்கு செல்லும் அங்கு சில தீ அணைக்கும் வண்டிகள் காணப் படும்.
படி 3: நமக்கு விருப்பமான வண்டியைத் தேர்வு அங்கு கொடுக்கப் படும் அறிவுறுத்தல்கள் படி நாம் விளையாட வேண்டும்
படி 4: கடைசியாக நாம் தீயை அணைக்கும் போது நமது வேலையின் மீது ஒரு திருப்தி உண்டாகும்.
உரலி
https://play.google.com/store/apps/details?
id=com.frosstudio. mytown firerescue
* படங்கள் அடையாளத்திற்கு மட்டுமே.