பாய்மங்கள் - மிதத்தல் விதிகள் | 9th Science : Fluids
மிதத்தல் விதிகள்
மிதத்தல் விதிகளாவன:
1. பாய்மம் ஒன்றின்மீதுமிதக்கும் பொருளொன்றின் எடையானது,
அப்பொருளினால் வெளி யேற்றப்பட்ட பாய்மத்தின் எடைக்குச் சமமாகும்.
2. மிதக்கும் பொருளின் ஈர்ப்பு மையமும் மிதப்பு விசையின் மையமும் ஒரே நேர்கோட்டில் அமையும்.
மிதப்புவிசை செயல்படும் புள்ளியே மிதப்பு விசை மையம் எனப்படுகிறது. இது படம் 3.14-இல் காட்டப்பட்டுள்ளது
❖ அழுத்தத்தை ஏற்படுத்தும் விசை உந்துவிசை எனப்படுகிறது. இதன் SI
அலகு நியூட்டன் ஆகும்.
❖ ஓரலகு பரப்பிற்கு செங்குத்தாக செயல்படும் உந்து விசையே அழுத்தம் எனப்படுகிறது. இதன் SI
அலகு பாஸ்கல் ஆகும்.
❖ வளிமண்டலவாயுக்களால் அதன்சுற்றுப்புறத்தின் மீதும் பூமியின் மீதும் ஏற்படும் அழுத்தம் வளிமண்டல அழுத்தம் எனப்படும்.
❖ 76 செ.மீ உயரம் கொண்ட பாதரசத் தம்பம் ஏற்படுத்தும் அழுத்தம் 1atm
ஆகும்.
❖ காற்றழுத்தமானி என்பது வளிமண்டல அழுத்தத்தை அளவிட உதவும் கருவி ஆகும்.
❖ பொருளானது பகுதியளவோ அல்லது முழுமையாகவோ மூழ்கும்போது உணரப்படும் மேல்நோக்குவிசையானது மேல்நோக்கு உந்துவிசை அல்லது மிதப்பு விசை எனப்படும்.
❖ கார்ட்டீசியன் மூழ்கி ஆய்வானது மிதப்பு விசையின் தத்துவத்தையும், நல்லியல்பு வாயு விதியையும் சோதனை மூலம் விளக்குகிறது.
❖ பாஸ்கல் விதி என்பது நிலையாக உள்ள திரவத்தில் ஏதேனும் ஒரு புள்ளியில் அதிகப் படியாக அளிக்கப்படும் அழுத்தமானது மற்ற அனைத்துப் புள்ளிகளுக்கும் அனைத்துத் திசைகளிலும் சமமாக பகிர்ந்தளிக்கப்படுகிறது என்பதாகும்.
❖ "ஒரு பொருளானது பாய்மங்களில் மூழ்கும் போது,
அப்பொருள் இடப்பெயர்ச்சி செய்த பாய்மத்தின் எடைக்குச் சமமான செங்குத்தான மிதப்பு விசையை அது உணரும்"
என்று ஆர்க்கிமிடிஸ் தத்துவம் கூறுகிறது.
❖ அடர்த்தி என்பது நிறை /
ஓரலகு பருமன் ஆகும். இதன் SI
அலகு கி.கி/மீ
❖ ஒரு பொருளின் அடர்த்திக்கும், நீரின் அடர்த்திக்குமிடையே உள்ள விகிதம் ஒப்படர்த்தி எனப்படும். ஒப்படர்த்தி என்பது ஒரு எண் ஆகும். இதற்கு அலகு இல்லை .
❖ நீரியல்மானி என்பது ஒரு திரவத்தின் ஒப்படர்த்தியைக் கணக்கிட உதவுகிறது. இது ஆர்க்கிமிடிஸ் தத்துவத்தின் அடிப்படையில் செயல்படுகிறது.
❖ பால்மானி என்பது ஆர்க்கிமிடிஸ் தத்துவத்தைப் பயன்படுத்தி பாலின் அடர்த்தியைக் கணக்கிடுவதன் மூலம் அதன் தூய்மையைக் காட்டும் கருவி ஆகும்.
A-Z சொல்லடைவு
குத்துயரம்
: மேல் நோக்கிய செங்குத்துத் தொலைவு.
விண்வெளி வீரர்
: விண்வெளிப் பயணம் செய்வதற்கு சிறப்புப் பயிற்சி பெற்ற நபர்.
கோடாரி
: மரத்தை வெட்டவும், செதுக்கவும் பயன்படும் கருவி.
உருக்குலைவு
: விசை அல்லது விசைகளின் தொகுப்பினால் பொருளின் வடிவம் அல்லது அமைப்பில் ஏற்படும் மாற்றம்.
புதைபடிவ நீர் : பாதுகாக்கப்பட்ட நீர்.
பனிப்பாறை
: நீரில் மிதக்கக்கூடிய பெரிய பனிக்கட்டி.
நீரியல் அமைப்பு
: பாய்மங்களைப் பயன்படுத்தி பாய்ம அழுத்தத்தினால் வால்வுகளை இயக்கும் கருவி.
அழுத்தமுறா
: அழுத்தம் கொடுக்கப்படும் பொழுதும் அதன் பருமனில் மாற்றம் ஏற்படாமல் இருப்பது.
வானிலை ஆய்வு : வானிலை நிலவரம்.
பிஸ்டன்
: உருளையின் உள்ளே இருக்கும் நகரும் தட்டு.
உந்தி
: காற்றாடி சுற்றுவதன் மூலம் உந்துவிசையைச் செலுத்தும் அமைப்பு.
சிரிஞ்ச்
: திரவங்களை உள்ளே செலுத்தவும் வெளியே எடுக்கவும் பயன்படும் பிளாஸ்டிக் அல்லது கண்ணாடியால் செய்யப்பட்ட கருவி.
தெரபி : சிகிச்சை
திசைவேகம் : திசையுடன் கூடிய வேகம்