அறிவியல் ஆய்வக சோதனைகள் - மெழுகின் உருகுநிலை | 9th Science : Practical experiments
3. மெழுகின் உருகுநிலை 
நோக்கம் : 
குளிர்ச்சி வளைவு வரைபடத்தைப் பயன்படுத்தி மெழுகின் உருகுநிலையைக் கண்டறிதல் 
தத்துவம் : 
உருகுநிலையானது தன் உள்ளுறை வெப்பத்தின் அடிப்படையில் அமைகிறது என்பதனைக் கண்டறிதல். தன் உள்ளுறை வெப்பம் என்பது ஓரலகு நிறையை (1 கிராம்) ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு அதன் வெப்பநிலை மாறாத வண்ணம் மாற்ற தேவைப்படும் வெப்பத்தின் அளவாகும். 
தேவையான பொருட்கள் : 
முகவை, பர்னர், வெப்பநிலைமானி, கொதிநிலை குழாய், பற்றியுடன் கூடிய தாங்கி, முக்காலித் தாங்கி, மெழுகு, நிறுத்தற்கடிகாரம்,
கம்பி வலை மற்றும் மணல் அடங்கிய பாத்திரம். 
செய்முறை : 
•
ஒரு கொதிநீர் கலனில் வைத்து மெழுகினை உருக்கவும். 
•
மெழுகு முற்றிலும் உருகும்போது, கலனில் இருந்து அதை அகற்றி, உலர்த்தி பின்னர் மணலில் புதைக்கவும். 
•
திரவம் திடமாக மாறும் போது ஒவ்வொரு 30 விநாடிக்கும் வெப்பநிலையைப் பதிவு செய்யவும். 
•
அதே நேரத்தில் எந்த நிலையான வெப்பநிலையில் திரவ மற்றும் திட நிலையில் மெழுகு உள்ளது எனப் பார்க்கவும். 
மெழுகின் வெப்பநிலை = ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு மேலுள்ள மாறாத வெப்பநிலை

கூர்நோக்கல் மற்றும் பட்டியலிடுதல் : 

புள்ளி M இல் வெப்பநிலை மெழுகின் உருகு நிலையைக் குறிக்கிறது.
முடிவு : மெழுகின் உருகுநிலை = 56.7 °C
பரிந்துரை : ICT பக்கத்தின் உதவியுடன் மெழுகின் உருகிநிலைக்கான இந்த சோதனையின் காணொலியை www.kau.edu.sa என்ற இணைய தளத்தின் மூலம் காண்பிக்கலாம்.