கனிமங்கள் ஏற்படும் முறை - புவியியல் - கனிம வளங்கள் | 12th Geography : Chapter 3 : Resources
கனிம வளங்கள்
ஒரு வரையறுக்கப்பட்ட வேதியியல் கலவையாக ஒரேவிதமாக இயற்கையில்
காணப்படும் ஒரு பொருளை கனிமம் எனலாம். அவைகளை அவற்றின் இயற் மற்றும் வேதியியல் கூறுகளால்
அடையாளம் காணலாம். கனிமங்கள் அவற்றின் உருவாக்கத்தின் அடிப்படையில் பல்வேறு வகைகளாக
பிரிக்கலாம். மிகச்சிறிய துகள்களில் இருந்து ஒரு பெரிய கட்டடம் அல்லது ஒரு பெரிய கப்பல்
வரை நாம் பயன்படுத்துகின்ற அனைத்துப் பொருள்களையும் உருவாக்க கனிமங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
புவியில் மிகவும் மதிப்பு வாய்ந்த வளங்களில் கனிமமும் ஒன்றாகும். மனிதர்களின் அனைத்து
நிலை முன்னேற்றங்களையும் அல்லது வளர்ச்சிகளையும் கனிமங்களின் பெயர்களிலேயே குறிக்கப்பட்டுள்ளது.
உதாரணமாக கற்காலம், செம்புக்காலம், வெண்கலக்காலம் மற்றும் இரும்புக்காலம்.
கனிமங்கள் தீர்ந்துபோகும் அல்லது புதுப்பிக்க இயலாதவையாகும்.
மேலும் அவைகள் மிகவும் சீரற்ற முறையில் பரவிக் காணப்படுகின்றன. அவைகள் பொதுவாகத்
"தாது" வடிவத்தில் காணப்படுகின்றன. தாதுக்கள் தூய்மையற்ற பொருட்களைக் கொண்டுள்ளன.
பல்வேறுபட்ட செயல் முறைகளைக் கொண்டு தாதுக்களில் இருந்து கனிமங்கள் பிரித்து எடுக்கப்படுகின்றன.
கனிமவளங்களைச் சார்ந்தே ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி உள்ளது.
கனிமங்கள் பல வகையாக இருந்தாலும் அவற்றின் பண்புகள் மற்றும் வணிகப் பயன்பாட்டின் படி
அவைகள் மேலே உள்ளவாறு வகைப்படுத்தப்பட்டுள்ளது.
கனிமங்கள் பொதுவாகத் தாதுக்களாகவே காணப்படுகின்றன. இவை உண்மையில்
மற்ற தனிமங்களுடன் கலந்த ஒரு கனிமக்குவியலே தாது எனப்படும். கனிமங்கள் பொதுவாகப் பலவடிவங்களில்
அமைந்துள்ளன. அவையாவன,
தீப்பாறைகள் மற்றும் உருமாறிய பாறைகளின் விரிசல்கள், வெடிப்புகள்,
பிளவுகள் மற்றும் இணைப்புகளில் கனிமங்கள் பொதுவாக காணப்படுகின்றன. கனிமங்கள் மெல்லியதாக
காணப்பட்டால் அதை இழை வடிவம் என்றும் பெரிதாக காணப்பட்டால் அது லோட்ஸ் என்றும் அழைக்கப்படுகிறது.
உதாரணங்கள்: செம்பு மற்றும் தங்கம் லோட்ஸ் மற்றும் வெய்ன்ஸ் முறையில் அமைந்துள்ளது.
படிதல், குவிதல் மற்றும் செறிதலினால் தோன்றும் கனிமங்கள் பொதுவாக
கிடைமட்ட அடுக்கில் காணப்படுகின்றன. உதாரணம்: நிலக்கரி & பொட்டாஷ் மற்றும் பல.
சிதைவடைந்த பாறைத்துகள்கள் நீரால் அடித்துச் செல்லப்படும் பொழுது
கரையக்கூடிய துகள்கள் அகற்றப்பட்டு மீதமுள்ள பாறைத் துகள்கள் கொண்டுள்ள தாதுக்களை எஞ்சிய
துகள்கள் என அழைக்கிறோம். உதாரணம்: அலுமினியத்தாது.
பள்ளத்தாக்கு மற்றும் மலை அடிவாரத்தில் உள்ள மணல் படிவுகளே வண்டல்
படிவுகள் ஆகும். இப்படிவுகளில் தங்கம், வெள்ளி, பிளாட்டினம் போன்ற கனிமங்கள் உள்ளன.