Home | 3 ஆம் வகுப்பு | 3வது தமிழ் | ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு

பருவம் 2 இயல் 2 | 3 ஆம் வகுப்பு தமிழ் - ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு | 3rd Tamil : Term 2 Chapter 2 : OndruPattal undu valvu

3 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 2 : ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு

3 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 2 : ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு

2. ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு


ஒரு காட்டில் மரங்களுக்கும் விலங்குகளுக்கும் விவாதம் நடந்தது

நாங்கதான் எல்லாருக்கும் அதிகமாகப் பயன்படுகிறோம். ஆகவே, உங்களைவிட நாங்கள்தான் உயர்ந்தவர்கள்

எங்களால்தான் நீங்கள் பாதுகாப்பாக வளர்கிறீர்கள்! ஆகவே, நாங்கள்தான் உயர்ந்தவர்கள்

யார் உயர்ந்தவர் என ஒரு போட்டி வைத்துப் பார்த்துவிடுவோமா?

ஓ! நாங்கள் தயார். என்ன போட்டி? சொல்லுங்கள்.

ஒரு மாதத்திற்கு நீங்கள் எல்லாம் இந்தக் காட்டைவிட்டு வெளியே சென்று வசிக்கவேண்டும்.

சரி, இப்போட்டிக்கு நாங்கள் ஒத்துக்கொள்கிறோம்

எல்லா விலங்குகளும் பாலைவனம் நோக்கிச் சென்றன.

.மரங்கள் இல்லாமல் குளிர்ச்சி இல்லையே ஒரே வெப்பமாக இருக்கிறதே

எனக்கும் எந்தக் கிழங்கும் காயும் கிடைக்கவில்லையே

திடீரென ஒருநாள் பாலைவனத்தில் வேட்டைக்காரர்கள் வந்து விலங்குகளை

வேட்டையாடுகின்றனர்.

ஐயோ! நாங்கள் எப்படி தப்பிப்பது?

வேட்டைக்காரர்கள் வேட்டையாடிய விலங்குகளைத் தூக்கிச்செல்கின்றனர்

மீதி விலங்குகள் ஒன்று கூடின. நாம் பாதுகாப்பான காட்டை விட்டு வந்தது தவறு மீண்டும் காட்டுக்குச் செல்வோம் என்று முடிவெடுத்தன

விலங்குகள் இல்லாத நேரத்தில் காட்டுக்குள் புகுந்த மனிதர்கள் மரங்களை வெட்டினர்

வெட்டிய மரங்களை எடுத்துச்சென்றனர்

வெட்டப்பட்ட மரங்களைப் பார்த்து திரும்பி வந்த விலங்குகள் அதிர்ச்சி அடைந்தன

மரங்களே, உங்களுக்கு என்னவாயிற்று?

நீங்கள் இல்லாத நேரத்தில் சில மரங்களை மனிதர்கள் வெட்டி எடுத்துச்

சென்றுவிட்டனர்

எங்கே சில நண்பர்களை காணோம்

பாலைவனத்தில் இருந்தபோது எங்களுள் சிலரை வேட்டையாடிச் சென்றுவிட்டனர்

எங்களுக்கு உணவு தண்ணீர் பாதுகாப்பு எல்லாமும் காட்டில்தான் கிடைக்கிறது

ஆமாம் நண்பர்களே நீங்கள் இருந்தால்தான் எங்களுக்கும் பாதுகாப்பு

இங்கு யாரும் உயர்ந்தவர் தாழ்ந்தவர் இல்லை. அனைவரும் சமமானவர்களே! எல்லோரும் ஒற்றுமையாக வாழ்வோம்

திறன்: பண்புகளை வளர்த்தல்

நீதிக் கருத்து : ஒற்றுமையே வலிமை


படம் பார்ப்போம்! பேசி மகிழ்வோம்!


பறவைகள், விலங்குகள், மரங்கள் ஆகியவற்றின் படங்களை வகுப்பின் எண்ணிக்கைக்கு ஏற்பத் தேர்ந்தெடுத்து அட்டைகளில் ஒட்டிக்கொள்ள வேண்டும். அந்த அட்டைகளை மேசையின் மேல் கவிழ்த்து வைக்கவேண்டும். வகுப்பிலுள்ள ஒவ்வொரு மாணவரையும் அழைத்து ஓர் அட்டையை எடுக்கச் செய்யவேண்டும். அந்த அட்டையில் என்ன படம் வருகிறதோ, அதனைப்பற்றி மூன்று தொடராவது பேசச் சொல்லவேண்டும். அவரை வகுப்பிலுள்ள மற்ற மாணவர்கள் பாராட்ட வேண்டும்.


Tags : Term 2 Chapter 2 | 3rd Tamil பருவம் 2 இயல் 2 | 3 ஆம் வகுப்பு தமிழ்.
3rd Tamil : Term 2 Chapter 2 : OndruPattal undu valvu : OndruPattal undu valvu Term 2 Chapter 2 | 3rd Tamil in Tamil : 3rd Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 3 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 2 : ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு : ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு - பருவம் 2 இயல் 2 | 3 ஆம் வகுப்பு தமிழ் : 3 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
3 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 2 : ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு