Home | 9 ஆம் வகுப்பு | 9வது அறிவியல் | ஒரு மதிப்பெண் கேள்வி பதில்கள்

பாய்மங்கள் | இயற்பியல் | அறிவியல் - ஒரு மதிப்பெண் கேள்வி பதில்கள் | 9th Science : Physics : Fluids

9 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 3 : பாய்மங்கள்

ஒரு மதிப்பெண் கேள்வி பதில்கள்

9 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 3 : பாய்மங்கள் : புத்தகத்தில் உள்ள முக்கிய வினாக்கள் l. சரியான விடையைத் தேர்வு செய்க II. கோடிட்ட இடங்களை நிரப்புக III. சரியான கூற்றைத் தேர்வு செய்க IV. பொருத்துக V. சுருக்கமான விடை தருக Vl விரிவான விடையளிக்கவும் : ஒரு மதிப்பெண் கேள்வி பதில்கள்

இயற்பியல்

அலகு - 3

பாய்மங்கள்


புத்தக வினாக்கள்


I. சரியான விடையைத் தேர்ந்தெடு

1. நீரில் மூழ்கியிருக்கும் காற்றுக்குமிழி மேலே எழும்பும் போது, அதன் அளவு

அ) குறையும்

ஆ) அதிகரிக்கும்

இ) அதே அளவில் இருக்கும்

ஈ) குறையும் அல்லது அதிகரிக்கும்.

விடை:

ஆ) அதிகரிக்கும்


2. வளிமண்டலத்தில் மேகங்கள் மிதப்பதற்கு அவற்றின் குறைந்த .......... ... காரணமாகும்.

அ) அடர்த்தி

ஆ) அழுத்தம்

இ) திசைவேகம்

ஈ) நிறை

விடை:

அ) அடர்த்தி


3. அழுத்த சமையற்கலனில் (Pressure cooker) உணவு விரைவாக சமைக்கப்படுவதற்குக் காரணம், அதனுடைய

அ) அதிகரிக்கப்பட்ட அழுத்தம் கொதி நிலையைக் குறைக்கிறது.

ஆ) அதிகரிக்கப்பட்ட அழுத்தம் கொதி நிலையை உயர்த்துகிறது.

இ) குறைக்கப்பட்ட அழுத்தம் கொதி நிலையை உயர்த்துகிறது.

ஈ) அதிகரிக்கப்பட்ட அழுத்தம் உருகு நிலையைக் குறைக்கிறது.

விடை:

ஆ) அதிகரிக்கப்பட்ட அழுத்தம் கொதி நிலையை உயர்த்துகிறது.


4. நீருள்ள வாளியில், காற்றுப் புகாத அடைப்பானால் மூடப்பட்ட காலி பிளாஸ்டிக் பாட்டில் ஒன்று கீழ்நோக்கி அழுத்தப்படுகிறது. பாட்டில் கீழ்நோக்கி தள்ளப்படும்போது, அதன் அடிப்பகுதியில் செயல்படும் விசையானது அதிகரிக்கிறது. இதற்கான காரணம் என்ன?

அ) அதிக பருமனுள்ள நீர் வெளியேற்றப்படுகிறது.

ஆ) அதிக எடையுள்ள நீர் வெளியேற்றப்படுகிறது.

இ) ஆழம் அதிகரிக்கும் போது அழுத்தம் அதிகரிக்கின்றது.

ஈ) மேலே கூறிய யாவும்

விடை:


இ) ஆழம் அதிகரிக்கும் போது அழுத்தம் அதிகரிக்கின்றது.

 

II. கோடிட்ட இடங்களை நிரப்பு.

1. பொருளானது திரவத்தில் மூழ்கியிருக்கும் போது உணரப்படும் எடையானது அதன் உண்மையான எடையை விட ……………….. ஆகத் தோன்றும்.

விடை:

குறைவாகத்

2. வளிமண்டல அழுத்தத்தை அளவிடப் பயன்படும் கருவி ………………… ஆகும்.

விடை:

காற்றழுத்தமானி

3. திரவத்தில் மூழ்கியுள்ள பொருளின் மீது செயல்படும் மிதப்பு விசையின் எண் மதிப்பு திரவத்தின் …………………. ஐப் பொறுத்தது.

விடை:

அடர்த்தி

4. பழரசம் அருந்தப் பயன்படும் உறிஞ்சு குழல் …………………………. மூலம் வேலை செய்கிறது.

விடை:

அழுத்தம்

 

III. சரியா? தவறா? தவறெனில் திருத்துக

1. இடப்பெயர்ச்சி செய்யப்பட்ட நீரின் எடை மிதப்பு விசையைத் தீர்மானிக்கிறது.

விடை:

 

சரி

 

2. ஒருபொருளின்வடிவம் அப்பொருள் மிதக்குமா இல்லையா என்பதைத் தீர்மானிக்கிறது.

ஒரு பொருளின் அடர்த்தி அப்பொருள் மிதக்குமா இல்லையா என்பதைத்

தீர்மானிக்கிறது.

விடை:

தவறு

 

3. மிக உயரமான கட்டடங்களின் அடிப்பாகம் அகலமாக இருப்பதால், கட்டடம் அதிக  அழுத்தத்தை புவியின் மீது செலுத்துகிறது.

மிக உயரமான கட்டடங்களின் அடிப்பாகம் அகலமாக இருப்பதால், கட்டடம் குறைந்த அழுத்தத்தை புவியின் மீது செலுத்துகிறது.

விடை:

தவறு

 

4. ஆர்க்கிமிடிஸ் தத்துவம் வாயுக்களுக்கும் பொருந்தும்.

விடை:

சரி

 

5. நீரியல் அழுத்தி எண்ணெய் வித்துக்களிலிருந்து எண்ணெய் எடுக்க பயன்படுகிறது.

விடை:

சரி

 

IV. பொருத்துக

1. அடர்த்தி - hpg

2. 1 கிராம் எடை - பால்

3. பாஸ்கல் விதி - நிறை / பருமன்

4. பாய்மம் ஏற்படுத்தும் அழுத்தம் - அழுத்தம்

5. பால்மானி - 980 டைன்

விடை:

1. அடர்த்தி - நிறை / பருமன்

2. 1 கிராம் எடை - 980 டைன்

3. பாஸ்கல் விதி - அழுத்தம்

4. பாய்மம் ஏற்படுத்தும் அழுத்தம் - hpg

5. பால்மானி - பால்

Tags : Fluids | Physics | Science பாய்மங்கள் | இயற்பியல் | அறிவியல்.
9th Science : Physics : Fluids : One Mark Questions Answers Fluids | Physics | Science in Tamil : 9th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 3 : பாய்மங்கள் : ஒரு மதிப்பெண் கேள்வி பதில்கள் - பாய்மங்கள் | இயற்பியல் | அறிவியல் : 9 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 3 : பாய்மங்கள்