Home | 9 ஆம் வகுப்பு | 9வது அறிவியல் | ஒரு மதிப்பெண் கேள்வி பதில்கள்

ஒலி | இயற்பியல் | அறிவியல் - ஒரு மதிப்பெண் கேள்வி பதில்கள் | 9th Science : Physics : Sound

9 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 8 : ஒலி

ஒரு மதிப்பெண் கேள்வி பதில்கள்

9 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 8 : ஒலி : புத்தகத்தில் உள்ள முக்கிய வினாக்கள் l. சரியான விடையைத் தேர்வு செய்க II. கோடிட்ட இடங்களை நிரப்புக III. சரியான கூற்றைத் தேர்வு செய்க IV. பொருத்துக V. சுருக்கமான விடை தருக Vl விரிவான விடையளிக்கவும் : ஒரு மதிப்பெண் கேள்வி பதில்கள்

இயற்பியல்

அலகு - 8

ஒலி


புத்தக வினாக்கள்


I. சரியான விடையைத் தேர்ந்தெடு

1. இசைக் கச்சேரிகளில் ஜால்ரா எனும் இசைக்கருவியை இசைக்கும் போது எது அதிர்வடையும்?

அ) நீட்டிக்கப்பட்ட கம்பி

ஆ) காற்றுத்தம்பம்

இ) நீட்டிக்கப்பட்ட சவ்வு

ஈ) உலோகத் தகடு

விடை:

ஈ) உலோகத் தகடு


2. காற்றில் எப்பொழுது ஒலி பயணிக்கும்?

அ) காற்றில் ஈரப்பதம் இல்லாதபோது

ஆ) துகள்கள் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு நகரும்போது

இ) துகள்களும் அதிர்வுகளும் ஒரு இடத்திலிருந்து வேறிடத்திற்கு நகரும்போது.

ஈ) அதிர்வுகள் நகரும்போது.

விடை:

ஈ) அதிர்வுகள் நகரும்போது


3. ஒரு இசைக் கருவி உண்டாக்கும் தொடர் குறிப்புகளை சாதாரண செவித்திறன் கொண்ட ஒருவரால் உணர முடியவில்லையெனில், இக்குறிப்புகள் கீழ்கண்டவற்றுள் எதன் உள்ளே புகுந்து செல்ல முடியும்?

அ) மெழுகு

ஆ) வெற்றிடம்

இ) நீர்

ஈ) வெறுமையான பாத்திரம்

விடை:

ஆ) வெற்றிடம்


4. செவியுணர் ஒலியினால் ஏற்படும் அதிர்வுகளின் பெரும வேகம், கீழே கொடுக்கப்பட்டுள்ள எவற்றில் பயணிக்கும் போது ஏற்படும்?

அ) கடல் நீர்

ஆ) கண்ணாடி

இ) உலர்ந்த காற்று

ஈ) மனித இரத்தம்

விடை:

இ) உலர்ந்த காற்று


5. ……………………….. ல் ஒலி வேகமாக பயணிக்கும்.

அ) திரவங்களில்

ஆ) வாயுக்களில்

இ) திடப்பொருளில்

ஈ) வெற்றிடத்தில்

விடை:

இ) திடப்பொருளில்

 

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

1. ஒலி என்பது …………………. அலை. எனவே ஒலி ஊடுருவ ஊடகம் தேவை.

விடை:

நெட்ட

2. ஒரு விநாடியில் உருவாகும் அதிர்வுகளின் எண்ணிக்கை …………………….

எனப்படும்.

விடை:

அதிர்வெண்

3. திடப்பொருளில் ஒலியின் திசை வேகமானது, திரவத்தில் உள்ள திசை வேகத்தைவிட  …………………..

விடை:

அதிகம்

4. அதிர்வுரும் பொருட்கள்  ………………………. உருவாக்கும்.

விடை:

ஒலியை

5. ஒலிச் செறிவானது …………………….. ன் இரு மடங்கிற்கு நேர்த்தகவில் உள்ளது. 6. உடலில் ஏற்படும் ஒலிகளை உணர பயன்படுத்தப்படும் மருத்துவக் கருவி ………………………. .

விடை:

இதயத்துடிப்பளவி

7. ஒலியை நீட்டிக்கும் தொடர் எதிரொலித்தலுக்கு …………………… என்று பெயர்.

விடை:

எதிர் முழக்கம்

 

III. பொருத்துக.

1. இசைக்கலவை - காற்றின் அடர்த்தி அதிகமாக உள்ள புள்ளி

2 ஒலி - சமநிலையில் இருந்து ஏற்படும் பெரும இடப்பெயர்ச்சி

3 அழுத்தங்கள் - 20000ஐ விட அதிகமாக அதிர்வெண் கொண்ட ஒலி

4. வீச்சு - நெட்டலைகள்

5. மீயொலி - ஒலியின் உற்பத்தி

விடை:

1. இசைக்கலவை - ஒலியின் உற்பத்தி

2 ஒலி - நெட்டலைகள்

3 அழுத்தங்கள் - காற்றின் அடர்த்தி அதிகமாக உள்ள புள்ளி

4. வீச்சு - சமநிலையில் இருந்து ஏற்படும் பெரும இடப்பெயர்ச்சி

5. மீயொலி - 20000ஐ விட அதிகமாக அதிர்வெண் கொண்ட ஒலி

Tags : Sound | Physics | Science ஒலி | இயற்பியல் | அறிவியல்.
9th Science : Physics : Sound : One Mark Questions Answers Sound | Physics | Science in Tamil : 9th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 8 : ஒலி : ஒரு மதிப்பெண் கேள்வி பதில்கள் - ஒலி | இயற்பியல் | அறிவியல் : 9 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 8 : ஒலி