Home | 9 ஆம் வகுப்பு | 9வது அறிவியல் | நினைவில் கொள்க

விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள் | அறிவியல் - நினைவில் கொள்க | 9th Science : Organ Systems in Animals

9 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 20 : விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள்

நினைவில் கொள்க

உறுப்புமண்டலங்கள் அனைத்தும் இணைவாக செயலாற்றி உயிரினத்தின் உடலினை சீரான சமநிலையில் (ஹோமியோஸ்டேசிஸ்) பராமரிக்கிறன. பல உறுப்பு மண்டலங்களுக்கு இடையில் பணிப் பங்கீடு காணப்படுகின்றது.

நினைவில் கொள்க

உறுப்புமண்டலங்கள் அனைத்தும் இணைவாக செயலாற்றி உயிரினத்தின் உடலினை சீரான சமநிலையில் (ஹோமியோஸ்டேசிஸ்) பராமரிக்கிறன. பல உறுப்பு மண்டலங்களுக்கு இடையில் பணிப் பங்கீடு காணப்படுகின்றது.

உணவுப் பாதை ஒரு தசையாலான, சுருண்ட மற்றும் குழாய் வடிவ அமைப்பாகும். இவ்வுணவுப் பாதையில் வாய், வாய்குழி, தொண்டை , உணவுக் குழல், இரைப்பை, சிறுகுடல் (முன்சிறுகுடல், நடுச்சிறுகுடல் மற்றும் பின் சிறுகுடல் உள்ளடங்கியது). பெருங்குடல் (முன்பெருங்குடல், பெருங்குடல் மற்றும் மலக்குடல் உள்ளடங்கியது) மற்றும் மலவாய் போன்ற உறுப்புகள் காணப்படுகின்றன.

நமது உடலில் செரிமானமானது ஐந்து படிகளில் நிகழ்கிறது. அவையாவன: உணவு உட்கொள்ளல், செரித்தல், உட்கிரகித்தல், தன்மயமாதல் மற்றும் மலம் வெளியேற்றுதல்.

சிறுகுடலானது, செரிமானம் மற்றும் உறிஞ்சுதல் ஆகிய இரண்டு செயல்களையும் செய்கிறது.

மனித கழிவுநீக்க மண்டலம் ஓரிணை சிறுநீரகங்களைக் கொண்டுள்ளது. இதிலிருந்து சிறுநீரானது உருவாகிறது.

 மூன்று படிநிலைகளில் சிறுநீரானது உருவாகிறது. கிளாமருலார் வடிகட்டுதல், குழல்களில் மீள உறிஞ்சப்படுதல் மற்றும் குழல்களில் சுரத்தல்.

ஆண் இனப்பெருக்க மண்டலத்தில் விந்தகம் மற்றும் பெண் இனப்பெருக்க மண்டலமானது, அண்டகங்கள் கொண்ட முதன்மை பாலின உறுப்புகளாக வேறுபட்டுக் காணப்படுகின்றன.

 

A-Z சொல்லடைவு

பால்மமாக்கம் : பெரிய கொழுப்புத் துளிகளை சிறியதாக மாற்றுதல்.

நொதிகள் : உயிர்வாழும் உயினங்களால் உருவாக்கப்பட்டு குறிப்பிட்ட உயிர்வேதியியல் வினைகள் நடைபெறுவதற்கு வினையூக்கியாக செயல்படும் பொருள்கள்.

ஹோமியோஸ்டேஸிஸ் (சீர்ச் சமநிலை) : வெளிப்புறத்தில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்தாலும் உடலானது உள் சூழ்நிலையில் ஓர் சமநிலையை ஏற்படுத்த முயலுகின்ற போக்கு ஆகும்.

மெல்லுதல் : உணவானது பற்களினால் நொறுக்கப்படுதல்.

வளர்ச்சிதை மாற்றம் : ஓர் உயிரினத்தில் நிகழும் முழு வேதியியல் மற்றும் ஆற்றல் மாற்றங்கள்.

சவ்வூடு பரவல் சீராக்கல் : நீர் மற்றும் உப்பின் செறிவுகளின் கட்டுப்பாட்டினால் ஓர் உயிரினத்தில் உள்ள திரவத்தில் நிலைத்த சவ்வூடு பரவல் அழுத்தத்தைப் பராமரிப்பது.

எதிர்க்களித்தல் அல்லது வாந்தி : விழுங்கப்பட்ட உணவை மீண்டும் வாய்க்குக் கொண்டு வரும் செயல்.

நச்சுப் பொருள்கள் : உயிர் வாழும் உயிரினங்களின் உடல் நலத்திற்கு தாக்கத்தை ஏற்படுத்தும் அல்லது நச்சுத்தன்மையுடையதாக இருக்கும் பொருள்கள்.

Tags : Organ Systems in Animals | Science விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள் | அறிவியல்.
9th Science : Organ Systems in Animals : Points to Remember Organ Systems in Animals | Science in Tamil : 9th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 20 : விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள் : நினைவில் கொள்க - விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள் | அறிவியல் : 9 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 20 : விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள்