Home | 6 ஆம் வகுப்பு | 6வது அறிவியல் | நினைவில் கொள்க

நம்மைச் சுற்றி நிகழும் மாற்றங்கள் | பருவம் 2 அலகு 3 | 6 ஆம் வகுப்பு அறிவியல் - நினைவில் கொள்க | 6th Science : Term 2 Unit 3 : Changes Around Us

6 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 2 அலகு 3 : நம்மைச் சுற்றி நிகழும் மாற்றங்கள்

நினைவில் கொள்க

உலகிலுள்ள அனைத்துமே ஏதோ ஒரு மாற்றத்திற்கு உட்படுத்தப்படுகிறது. இவை இடம், வடிவம், உருவம், நிலை, வண்ணம், வெப்பநிலை மற்றும் இயைபில் நிகழலாம்.

நினைவில் கொள்க

 உலகிலுள்ள அனைத்துமே ஏதோ ஒரு மாற்றத்திற்கு உட்படுத்தப்படுகிறது. இவை இடம், வடிவம், உருவம், நிலை, வண்ணம், வெப்பநிலை மற்றும் இயைபில் நிகழலாம்.

 வேகமான மாற்றம் - குறுகிய கால அளவில் நடைபெறும். மெதுவான மாற்றம் அதிக காலம் எடுத்துக்கொள்ளும்.

 மீள் மாற்றம் - மீண்டும் தன் ஆரம்ப நிலையை அடையும்.

 மீளா மாற்றம் மீண்டும் தன் ஆரம்ப நிலையை அடையாது.

 விரும்பத்தக்க மாற்றம் - சுற்றுச் சூழலுக்குப் பயன் தரக்கூடியது மற்றும் ஆபத்து அற்றது.

 விரும்பத்தகாத மாற்றம்-சுற்றுச் சூழலுக்குப் பயன்தராதது மற்றும் ஆபத்தானது

 இயற்கையான மாற்றம் இயற்கையில் தன்னிச்சையாக நடைபெறக்கூடியது.

 மனிதனால் ஏற்படுத்தப்பட்ட மாற்றம் மனிதன் தன் விருப்பத்திற்காக ஏற்படுத்தியது.

 கரைசல் - கரைபொருளை கரைப்பானில் கரைத்துப் பெறப்படுகிறது.

❖ திண்மத் துகள்கள் தனித்தனி மூலக்கூறுகளாகப் பிரிக்கப்பட்டு, நீர்ம மூலக்கூறுகளுக்கு இடையே விரவுதலை நாம் கரைதல் என்கிறோம்.


இணையச்செயல்பாடு

மீள் மற்றும் மீளா வினை

செயல்பாட்டின் மூலம் பொருள்களின் மீளும் / மீளா வினைகளை அறிவோமா


படி 1: கீழ்க்காணும் உரலி / விரைவுக் குறியீட்டைப் பயன்படுத்தி 'Reversible and irreversible changes's பக்கத்திற்குச் செல்க. பொருள்களைத் தேர்வு செய்ய இரண்டு ஓரங்களிலும் இருக்கும் அம்புக்குறிகளைப் பயன்படுத்தவும்.

படி 2: சுட்டியைப் பயன்படுத்தி பொருளைக் கண்ணாடி குவளைக்குள் இழுத்து, பொருளின் நிலையை உற்று நோக்குக. செயல்பாட்டின் இடையில் உள்ள Dissolving | Reversing என்பதைச் சொடுக்கவும்.

படி 3: மீளாச்செயல்பாட்டிற்குச் சில பொருள்களைக் குளிரூட்டவோ வெப்பமாக்கவோ செய்க. மேலும் சில பொருள்களை வெப்பமூட்டி வடிகட்டத் தேவையான பொத்தானைச் சொடுக்கவும். இந்நிலையில் திரையில் காணும் பொருளைச் சூடாக்கவோ குளிரூட்டவோ தேர்வு செய்து கொள்ளலாம். அவற்றுக்குரிய பொத்தான்களைப் பயன்படுத்தலாம்.

படி 4: Reset என்பதைச் சொடுக்கி மீள்நிலைக்கு வருக.


உரலி:

http://www.bbc.co.uk/schools/scienceclips/ages/10_11/rev_irrev_changes_ fs.shtml

*படங்கள் அடையாளத்திற்காக மட்டுமே.

Tags : Changes Around Us | Term 2 Unit 3 | 6th Science நம்மைச் சுற்றி நிகழும் மாற்றங்கள் | பருவம் 2 அலகு 3 | 6 ஆம் வகுப்பு அறிவியல்.
6th Science : Term 2 Unit 3 : Changes Around Us : Points to remember Changes Around Us | Term 2 Unit 3 | 6th Science in Tamil : 6th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 6 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 2 அலகு 3 : நம்மைச் சுற்றி நிகழும் மாற்றங்கள் : நினைவில் கொள்க - நம்மைச் சுற்றி நிகழும் மாற்றங்கள் | பருவம் 2 அலகு 3 | 6 ஆம் வகுப்பு அறிவியல் : 6 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
6 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 2 அலகு 3 : நம்மைச் சுற்றி நிகழும் மாற்றங்கள்