Home | 2 ஆம் வகுப்பு | 2வது கணிதம் | இருபரிமாண வடிவங்களின் பண்புகள்

வடிவியல் | பருவம்-2 அலகு 1 | 2வது கணக்கு - இருபரிமாண வடிவங்களின் பண்புகள் | 2nd Maths : Term 2 Unit 1 : Geometry

2வது கணக்கு : பருவம்-2 அலகு 1 : வடிவியல்

இருபரிமாண வடிவங்களின் பண்புகள்

ஆசிரியருக்கான குறிப்பு : மூடிய வடிவம் - திறந்த வடிவம் என்ற சொற்களை நன்கு அறிய மாணவர்களுக்கு ஆசிரியர் இக்கதையை விளக்கலாம்.

அலகு 1

வடிவியல்



இருபரிமாண வடிவங்களின் பண்புகள்


பயணம் செய்வோம்

குழந்தைகளை ஒருவருக்கொருவர் கைபிடித்து வட்டமாக நிற்கச் செய்க. அதில் மூவரை (மூன்று பேரை) ஆடாகவும்ஆட்டுக்குட்டியாகவும் நரியாகவும் நடிக்கச் செய்க.


கலைச் சொற்கள் மூடிய வடிவம், திறந்த வடிவம்

நான் தான் நரி. ஆட்டுக்குட்டியை நான் பார்க்க வேண்டும். நீங்கள் ஆட்டுக்குட்டியைப் பார்த்தீர்களா?

பார்த்தோம்! பார்த்தோம்! பார்த்தோம்! அது உள்ளே பத்திரமாக உள்ளது.

கதைவத் திறக்க முடியுமாவழியை விடமுடியுமா?

முடியாது முடியாது முடியாது. நாங்கள் வழிவிடமாட்டோம். கதவை மூடுங்கள் ! மூடுங்கள்! மூடுங்கள்!

நான்தான் ஆடு. என் சிறிய குட்டியைப் பார்த்தீர்களாஅதை நான் வெகுநேரமாகத் தேடிக்கொண்டிருக்கிறேன்.

பார்த்தோம்! பார்த்தோம்! பார்த்தோம்!

நான் உள்ளே வர வழி விடுங்கள்.

ஆம் ஆம் இதோ உங்களுக்கு வழி திறக்கிறது.

 

ஆசிரியருக்கான குறிப்பு

மூடிய வடிவம் - திறந்த வடிவம் என்ற சொற்களை நன்கு அறிய மாணவர்களுக்கு ஆசிரியர் இக்கதையை விளக்கலாம்.  

 

கற்றல்

இருபரிமாண வடிவங்களின் பண்புகள்

இருபரிமாண வடிவங்களின் பண்புகளைக் கற்போம்.


 

சதுரம்

இந்த அஞ்சல் வில்லை சதுர வடிவில் உள்ளது.

சதுரம் ஒரு மூடிய வடிவமாகும். இதற்கு நான்கு பக்கங்கள் உண்டு.

இதற்கு நான்கு முனைகள் உண்டு.

நான்கு பக்கங்களும்  சமம்.

 

செவ்வகம்

ஐம்பது ரூபாய் நோட்டு செவ்வக வடிவில் உள்ளது.

செவ்வகம் ஒரு மூடிய வடிவமாகும். இதற்கு நான்கு பக்கங்கள் உண்டு.

இதற்கு நான்கு முனைகள் உண்டு.

எதிர்ப்பக்கங்கள் சமம்.

 

முக்கோணம்

சாலைக் குறியீடு முக்கோண வடிவில் உள்ளது.

முக்கோணம் ஒரு மூடிய வடிவமாகும். இதற்கு மூன்று பக்கங்கள் உண்டு.

இதற்கு மூன்று முனைகள் உண்டு.

பக்கங்கள் சமமாகவும், சமம் அற்றும் இருக்கும்

 

வட்டம்

நாணயம் வட்ட வடிவில் உள்ளது.

வட்டம் மூடிய வளைவாகும்.

 

பயிற்சி

கொடுக்கப்பட்ட இடங்களின் மூடிய வடிவங்களுக்கு 'மூஎனவும் திறந்த வடிவங்களுக்கு 'தி' எனவும் எழுதுக.



அட்டவணையை நிரப்புக.


 

முயற்சி செய்க

ஜீயோ பலகையை உற்றுநோக்கி அதில் கொடுக்கப்பட்டுள்ள வடிவங்களுக்கு ஒத்த வடிவங்களை அருகிலுள்ள புள்ளியிடப்பட்ட தாளில் பல்வேறு அளவுகளில் வரைக.


ஆசிரியருக்கான குறிப்பு  

ஆசிரியர்மாணவர்கள் ஜியோ பலகையில் நெளிவளையத்தைக் (இரப்பர் பட்டை) கொண்டு இருபரிமாண வடிவங்களை உருவாக்க வழிவகைப்படுத்தலாம்.

 

நீயும் கணிதமேதை தான்

ஜீயோ பலகையில் வட்டத்தை உருவாக்க இயலுமா?

ஆம் முடியும்.

 

Tags : Geometry | Term 2 Chapter 1 | 2nd Maths வடிவியல் | பருவம்-2 அலகு 1 | 2வது கணக்கு.
2nd Maths : Term 2 Unit 1 : Geometry : Properties of 2D shapes Geometry | Term 2 Chapter 1 | 2nd Maths in Tamil : 2nd Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 2வது கணக்கு : பருவம்-2 அலகு 1 : வடிவியல் : இருபரிமாண வடிவங்களின் பண்புகள் - வடிவியல் | பருவம்-2 அலகு 1 | 2வது கணக்கு : 2 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
2வது கணக்கு : பருவம்-2 அலகு 1 : வடிவியல்