காட்சித் தொடர்பியல் | மூன்றாம் பருவம் அலகு 6 | 7 ஆம் வகுப்பு அறிவியல் - வினா விடை | 7th Science : Term 3 Unit 6 : Visual Communication

   Posted On :  17.05.2022 12:58 am

7 ஆம் வகுப்பு அறிவியல் : மூன்றாம் பருவம் அலகு 6 : காட்சித் தொடர்பியல்

வினா விடை

7 ஆம் வகுப்பு அறிவியல் : மூன்றாம் பருவம் அலகு 6 : காட்சித் தொடர்பியல் : புத்தக வினாக்களுக்கான கேள்வி பதில்கள்
மதிப்பீடு 

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 

1. தேர்ந்தெடுத்த உரையை நகலெடுக்க __________ விசைப்பலகைக் குறுக்குவழி பயன்படுகிறது. 

அ) Ctrl + c 

ஆ) Ctrl + v 

இ) Ctrl + x 

ஈ) Ctrl + A

விடை : அ) Ctrl + c 


2. தேர்ந்தெடுத்த உரையை வெட்ட __________ விசைப்பலகைக் குறுக்குவழி பயன்படுகிறது. 

அ) Ctrl + c 

ஆ) Ctrl + v 

இ) Ctrl + x 

ஈ) Ctrl + A

விடை : இ) Ctrl + x 


3. லிபெர் ஆபிஸ் ரைட்டரில் எத்தனை வகையான பக்க அமைவுகள் உள்ளன? 

அ) 1

ஆ) 2 

இ) 3

ஈ) 4 

விடை : ஆ) 2 


4. திரையில் ரூலர் தெரியாவிட்டால் __________ கிளிக் செய்ய வேண்டும். 

அ) View Ruler 

ஆ) View Task 

இ) File Save 

ஈ) Edit Paste

விடை : அ) View Ruler 


5. ஆவணத்தைச் சேமிக்க மெனு பயன்படுகிறது. 

அ) File Open 

ஆ) File Print 

இ) File Save  

ஈ) File Close 

விடை : இ) File Save



II. கீழ்க்காணும் வினாக்களுக்கு விடையளிக்கவும் 

1. உரை ஆவண மென்பொருளின் பயன்கள் யாவை?

எழுத்தாற்றல், புத்தகங்கள், அறிக்கைகள், செய்திமடல்கள், கையேடுகள், மற்றும் பிற ஆவணங்களைத் தோற்றுவிப்பதற்கு உரை ஆவணம் (Word செயலி) பயன்படுகிறது. 


2. உரையை தேர்ந்தெடுத்தல் என்றால் என்ன?

• உரையை தேர்ந்தெடுக்க சுட்டி அல்லது விசைப்பலகையை பயன்படுத்தலாம். 

• உரைகளை தேர்ந்தெடுத்த பின்னால் தேவையான மாற்றங்களை செய்து கொள்ளலாம்.

• உரையை நகர்த்தவும், நகல் எடுக்கவும், தடிப்பாக்கவும் முடியும். 


3. ஒரு ஆவணத்தை மூடலாம்?

ஒரு ஆவணத்தில் வேலை முடிந்தவுடன் அந்த கோப்பினை மூட விட File close என்ற கட்டளையை பயன்படுத்தலாம்.


4. வலது இசைவு என்பது என்ன?

Word இல் பத்திகளை வலதுபக்கம் ஒழுங்குபடுத்தலாம், அதனால் வலது பக்கம் சமச்சீராக இருக்கும். இது வலது இசைவு (Right Alignment) எனப்படுகிறது. 


5. ஏற்கனவே உள்ள ஒரு ஆவணத்தை திறப்பது எப்படி?

சேமிக்கப்பட்டு மூடப்பட்ட ஒரு ஆவணத்தை திறக்க, பின்வரும் முறைகளில் ஏதேனும் ஒன்றை செய்யலாம். 

• மெனு பட்டியில் உள்ள திறந்த கோப்பு (Open) பொத்தானை அழுத்தவும். 

• File Open என்ற கட்டளையை பயன்படுத்தவும் 

• விசைப்பலகையில் Ctrl + O விசைகளை அழுத்தவும். 

திறந்த உரையாடல் பெட்டி தோன்றும். கோப்பை தேர்ந்தெடுத்து திறக்க (open) பொத்தானை அழுத்தவும்.


Tags : Visual Communication | Term 3 Unit 6 | 7th Science காட்சித் தொடர்பியல் | மூன்றாம் பருவம் அலகு 6 | 7 ஆம் வகுப்பு அறிவியல்.
7th Science : Term 3 Unit 6 : Visual Communication : Questions Answers Visual Communication | Term 3 Unit 6 | 7th Science in Tamil : 7th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 7 ஆம் வகுப்பு அறிவியல் : மூன்றாம் பருவம் அலகு 6 : காட்சித் தொடர்பியல் : வினா விடை - காட்சித் தொடர்பியல் | மூன்றாம் பருவம் அலகு 6 | 7 ஆம் வகுப்பு அறிவியல் : 7 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
7 ஆம் வகுப்பு அறிவியல் : மூன்றாம் பருவம் அலகு 6 : காட்சித் தொடர்பியல்