பருவம் 3 அலகு 1 | 5 ஆம் வகுப்பு சமூக அறிவியல் - வினா விடை | 5th Social Science : Term 3 Unit 1 : Forts and Palaces

   Posted On :  01.09.2023 11:12 pm

5 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : பருவம் 3 அலகு 1 : அலகு 1 : கோட்டைகளும் அரண்மனைகளும்

வினா விடை

5 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : பருவம் 3 அலகு 1 : அலகு 1 : கோட்டைகளும் அரண்மனைகளும் : புத்தக வினாக்கள், கேள்வி பதில்கள்

மதிப்பீடு

 

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்க

 

1) --------------------- கோட்டை விஜயநகர மன்னர்களால் கட்டப்பட்டது.

அ) உதயகிரி

ஆ) வேலூர்

இ) செஞ்சி

விடை : ஆ) வேலூர்

 

2) திருமலை நாயக்கர் அரண்மனை ----------------- யில் அமைந்துள்ளது.

அ) சேலம்

ஆ) திருமலை

இ) மதுரை

விடை : இ) மதுரை

 

3) உலகின் இடைக்கால கையெழுத்துப் பிரதி நூலகங்களில்---------------------- மஹால் ஒன்றாகும்.

அ) சரஸ்வதி

ஆ) லட்சுமி

இ) துர்கா

விடை : அ) சரஸ்வதி

 

4) பத்மநாபபுரம் அரண்மனை -------------------- யில் அமைந்துள்ளது.

அ) ஊட்டி

ஆ) கன்னியாகுமரி

இ) சென்னை

விடை : ஆ) கன்னியாகுமரி

 

5) -------------------------- கோட்டை, டேனிஷ் கோட்டை என்று அழைக்கப்படுகிறது.

அ) திண்டுக்கல்

ஆ) செஞ்சி

இ) தரங்கம்பாடி

விடை : இ) தரங்கம்பாடி

 

II. பொருத்துக

1 செஞ்சிக் கோட்டை புதுக்கோட்டை

2  டேனிஷ் கோட்டை - சென்னை

3 தமுக்கம் அரண்மனை - விழுப்புரம்

4 திருமயம் கோட்டை - மதுரை

5 புனித ஜார்ஜ் கோட்டை – தரங்கம்பாடி

 

விடை :

1 செஞ்சிக் கோட்டை விழுப்புரம்

2  டேனிஷ் கோட்டை - தரங்கம்பாடி

3 தமுக்கம் அரண்மனை - மதுரை

4 திருமயம் கோட்டை - புதுக்கோட்டை

5 புனித ஜார்ஜ் கோட்டை - சென்னை

 

III. சரியா தவறா?

 

1) தமிழகம் மன்னர் பலரால் குறிப்பாக சேர, சோழ, பாண்டிய பல்லவ மன்னர்களால் ஆட்சி செய்யப்பட்டுள்ளது. (விடை : சரி)

2) வேலூர்க் கோட்டையில் ஐந்து மஹால்கள் உள்ளன. (விடை : சரி)

3) திண்டுக்கல் கோட்டை மதுரை நாயக்கர்களால் கட்டப்பட்டது. (விடை : சரி)

4) ஊமையன் கோட்டை என்பது செஞ்சிக் கோட்டையின் மற்றொரு பெயராகும். (விடை : தவறு)

5) பத்மநாபபுரம் அரண்மனை கன்னியாகுமரியில் திருவாங்கூர் ஆட்சியாளரால் கட்டப்பட்டது. (விடை : சரி)

 

IV. பின்வருவனவற்றிற்கு விடையளிக்க.


1) தமிழகத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத் தளங்கள் யாவை?

• பத்மநாபபுரம் அரண்மனை. 

• தஞ்சாவூர் மராத்திய அரண்மனை.

• திருமலைநாயக்கர் அரண்மனை.

• வேலூர் கோட்டை.

• செஞ்சிக் கோட்டை.

• தரங்கம்பாடி கோட்டை.

• திண்டுக்கல் கோட்டை.

 

2) தரங்கம்பாடி கோட்டையைப் பற்றிச் சிறு குறிப்பு வரைக.

• வங்காள விரிகுடாவின் கரையில் தமிழ்நாட்டில் தரங்கம்பாடியில் அமைந்துள்ளது.

• சரிவக வடிவத்தில் மூன்று அறைகளைக் கொண்டது.

• கோட்டையின் மையப்பகுதியில் நான்கு குவிமாடங்கள் உள்ளன. 

 

3) செஞ்சிக் கோட்டையின் சில சிறப்பு அமைவுகள் யாவை?

• திருமண மண்டபம்,

• கோவில்கள்,

• ஆனைக்குளம்,

• களஞ்சியங்கள் மற்றும்

• கண்கானிப்புக் கோபுரம்.

 

4) திருமலை நாயக்கர் அரண்மனை குறித்துச் சிறு குறிப்பு வரைக.

• மதுரை நகரில் அமைந்துள்ளது.

• நாயக்கர் அரச மரபால 17 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.

• தொல்பொருள் அருங்காட்சியகத்தைக் கொண்டுள்ளது.

• தமிழ்நாட்டின் முக்கிய சுற்றுலாத் தலங்களுள் ஒன்றாகும்

 

5) தஞ்சாவூர் மராத்திய அரண்மனையைக் கட்டியவர் யார்? அதன் சிறப்பமைவுகள் சிலவற்றைக் குறிப்பிடுக.

தஞ்சாவூர் மராத்திய அரண்மனை, தஞ்சாவூர் நாயக்கர் ஆட்சியாளர்களால் கட்டப்பட்டது.

சிறப்பமைவுகள்: 

இது ஒரு சுற்றுலாத் தலமாகும்.

இதில் அரண்மனை, கலைக்கூடம் மற்றும் கையெழுத்துப் பிரதி நூலகம் (சரஸ்வதி மஹால்) ஆகிய மூன்றும் அமைந்துள்ளன.

 

V விரிவான விடையளிக்க.


1) வேலூர்க் கோட்டையின் கட்டமைப்பை விவரி.

• 16-ஆம் நூற்றாண்டில் விஜயநகர மன்னர்களால் கட்டப்பட்டது.

• ஆழமான மற்றும் அகலமான அகழியால் சூழப்பட்டுள்ளது. • இராணுவக் கட்டடக் கலைக்கு சிறந்த ஒர் எடுத்துக்காட்டாகும்.

• இரட்டைக் கோட்டைகளாக உருவாக்கப்பட்டது.

• வெளிப்புறக் கோபுரங்கள், உட்புறக் கோபுரங்களைவிட தாழ்வாக உள்ளன.

• 1806 ஆம் ஆண்டில் வேலூர் கோட்டையில் ஆங்கியலருக்கு எதிரான முதல் கிளர்ச்சி நடைபெற்றது.

 

2) திண்டுக்கல் கோட்டை பற்றி விரிவாக எழுதுக.

• திண்டுக்கல் கோட்டை 17-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகும். இது 18 ஆம் நூற்றாண்டில் மைசூர் அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது.

• இது மதுரை நாயக்கர்களால் கட்டப்பட்டது.

• இதை இந்திய தொல் பொருள் ஆய்வு நிறுவனம் பராமரிக்கிறது.

• இது கனரக பீரங்கிகளைத் தாங்கும் வகையில் கோட்டை இரட்டைச் சுவர்களால் பலப்படுத்தப்பட்டிருந்தது


3) பத்மநாபபுரம் அரண்மனையின் கட்டடக்கலையையும் அதன் பல்வேறு பிரிவுகளையும் விவரிக்க.

• பத்மநாபபுரம் அரண்மனை கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள அழகான வரலாற்று சின்னமாகும்.

• கேரள கட்டடக் கலையைக் கொண்டு மரத்தால் உருவாக்கப்பட்டதாகும்.

• கலை மற்றும் கைவினைத்திறனுக்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

• திருவாங்கூர் ஆட்சியாளர்களால் கட்டப்பட்ட அழகான அரண்மனை.

• இராஜமாதா அரண்மனை, சபை, தெற்கு அரண்மனை போன்ற பல பிரிவுகள் உள்ளன.

 

செயல்பாடு

செயல் திட்டம்

ஏதேனும் ஒரு கோட்டை அல்லது அரண்மனையின் மாதிரியை உருவாக்குக.

செயல்பாடு    

பின்வரும் படங்களுக்கு பெயரிடுக.

(அரசர், அரசி, இளவரசர், இளவரசி)



செயல்பாடு


(வில் மற்றும் அம்பு )

வான்

சிம்மாசனம்

கேடயம்

கிரீடம்

Tags : Forts and Palaces | Term 3 Chapter 1 | 5th Social Science பருவம் 3 அலகு 1 | 5 ஆம் வகுப்பு சமூக அறிவியல்.
5th Social Science : Term 3 Unit 1 : Forts and Palaces : Questions with Answers Forts and Palaces | Term 3 Chapter 1 | 5th Social Science in Tamil : 5th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 5 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : பருவம் 3 அலகு 1 : அலகு 1 : கோட்டைகளும் அரண்மனைகளும் : வினா விடை - பருவம் 3 அலகு 1 | 5 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : 5 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
5 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : பருவம் 3 அலகு 1 : அலகு 1 : கோட்டைகளும் அரண்மனைகளும்