கல்வி உரிமைகள் | பருவம் 3 அலகு 3 | 5 ஆம் வகுப்பு சமூக அறிவியல் - வினா விடை | 5th Social Science : Term 3 Unit 3 : Educational Rights

   Posted On :  01.09.2023 11:17 pm

5 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : பருவம் 3 அலகு 3 : கல்வி உரிமைகள்

வினா விடை

5 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : பருவம் 3 அலகு 3 : கல்வி உரிமைகள் : புத்தக வினாக்கள், கேள்வி பதில்கள்

மதிப்பீடு

 

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்க.

 

1) ------------------ என்பது, குழந்தையின் வளர்ச்சிக்கான முதல் படியாகும்.

அ) கல்வி

ஆ) ஆய்வு

இ) அகழ்வாராய்ச்சி

விடை: அ) கல்வி

 

2) கல்வி ---------------- விட மேம்பட்டதாகும்.

அ) எண் கணிதம்

ஆ) எழுத்தறிவு

இ) மேலே உள்ள அனைத்தும்

விடை: இ) மேலே உள்ள அனைத்தும்


3) 'கல்வி என்பது மனிதனுள் ஏற்கெனவே இருக்கும் முழுமையின் வெளிப்பாடு" என்பது -------------------- இன் பிரபலமான கூற்று ஆகும்.

அ) மகாத்மா காந்தி

இ) சுவாமி விவேகானந்தர்

ஆ) முனைவர். இராதாகிருஷ்ணன்

விடை : இ) சுவாமி விவேகானந்தர்

 

4) ------------- குழந்தைகளுக்கு இலவச மற்றும் கட்டாயக் கல்வியின் முக்கியத்துவத்தை விவரிக்கிறது.

அ) எழுத்தறிவு உரிமைச் சட்டம்

ஆ) கல்வி உரிமைச் சட்டம்

இ) பள்ளி உரிமைச் சட்டம்

விடை : ஆ) கல்வி உரிமைச் சட்டம்

 

5) கல்வியை மேம்படுத்துவதற்காக இந்திய அரசு ------------------ வடிவமைத்துள்ளது.

அ) தேசிய கல்வி கொள்கை.

ஆ) தொடக்கக் கல்வி தொடர்பான தேசிய கொள்கை

இ) எழுத்தறிவுக்கான தேசிய கொள்கை

விடை: அ) தேசியக் கல்விக் கொள்கை

 

II. பொருத்துக.

1 குருகுலம் - 2009

2 கு.காமராசர் - 2018

3 கல்வி உரிமைச் சட்டம் - ஞானத்தை உருவாக்குகிறது

4 கல்வி- பண்டைய இந்தியக் கல்வி முறை

5 ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டம்  - இலவச மதிய உணவு

 

விடை :

1 குருகுலம் - பண்டைய இந்தியக் கல்வி முறை

2 கு.காமராசர் - 2 இலவச மதிய உணவு

3 கல்வி உரிமைச் சட்டம் - 2009

4 கல்வி - ஞானத்தை உருவாக்குகிறது

5 ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டம்  - 2018

 

III. சரியா தவறா?

 

1. ஒவ்வொரு குழந்தைக்கும் இலவச மற்றும் கட்டாயக் கல்வி கிடைக்க உரிமை உண்டு. (விடை: சரி)

2.  விழிப்புணர்வை அதிகரிக்க கல்வி உதவுகிறது. (விடை: சரி)

3. பள்ளி உரிமை சட்டம் குழந்தைகளுக்கு இலவச மற்றும் விவரிக்கிறது. (விடை: சரி)

4. ஒருவரைக் கல்வி அறிவு உடையவராக மாற்றுவதற்கான முதல்படியாக எண் கணிதம் விளங்குகிறது. (விடை: தவறு)

5. முன்னாள் தமிழக முதலமைச்சர் பெருந்தலைவர் கு.காமராசரால் செயல்படுத்தப்பட்டத் திட்டம் இலவச மதிய உணவுத் திட்டமாகும் (விடை: சரி)

 

IV. பின்வருவனவற்றிற்கு விடையளிக்க.

 

1. கல்வியின் முக்கியத்துவம் பற்றி எழுதுக.

• காரணத்தை ஆய்ந்து அறிதல்.

• வாழ்வியல் திறன்களை வளர்த்தல்.

• எது சரி, எது தவறு என்பதனை அறிதல். 

• ஒழுக்க நெறிகளை கடைபிடித்து வாழ்தல்.

 

2. கல்வி உரிமைகள் குறித்துச் சிறு குறிப்பு வரைக.

• 6 வயது முதல் 14 வயது வரையிலான அனைவருக்கும் இலவச மற்றும் கட்டாயக் கல்வி கிடைக்கச் செய்தல்.

• பாகுபாடின்றி எளிதில் கிடைத்தல்.

• கல்வி தேவை அடிப்படையிலானதாக இருத்தல் வேண்டும். • குழந்தையை மையமானதாக இருத்தல் வேண்டும்.

 

3. அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் பங்கு என்ன?

• 14 வயது வரையிலான குழந்தைகளுக்கு இலவச மற்றும் கட்டாயக் கல்வியைப் பெறச் செய்தல்.

• கல்வியின் தரத்தை மேம்படுத்துதல்.

• ஆரம்பப் பள்ளிகளில் சேர்க்கையை அதிகரித்தல்.

 

4. தேசிய கல்வி கொள்கை பற்றிச் சிறு குறிப்பு வரைக,

• இந்திய மக்களிடையே கல்வியை மேம்படுத்துவதற்காக 2019-ஆம் ஆண்டில், இந்திய அரசு தேசிய கல்வி கொள்கையை (NPE) வடிவமைத்துள்ளது.

• இது தொடக்கக் கல்வி முதல் கல்லூரி வரையிலானது.

 

5. ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் இரண்டு கூறுகளைப் பற்றி எழுதுக.

• தரமான கல்வியை வழங்கி, மாணவர்களின் கற்றல் அடைவுகளை மேம்படுத்துதல்.

• பெண் கல்வியில் கவனம் செலுத்துதல்.

• மின்னணு கல்வியில் கவனம் செலுத்துதல்.

 

V விரிவான விடையளிக்க.

 

1. இந்தியக் கல்வி முறை பற்றி எழுதுக,

• இந்தியாவில் குருகுலக் கல்வியே நடைமுறையில் இருந்துள்ளது.

• குரு என்பவர் ஆசிரியர், ஷிஷ்யா என்பவர் மாணவர்.

• ஏதேனும் ஒரு ஆசிரமத்திற்கச் சென்று கல்வி பயின்றுள்ளனர்.

• மனதை விரிவுபடுத்துவதற்கு உதவியது.

• சமூக மற்றும் அரசியல் பிரச்சனைகள் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க கல்வி உதவுகிறது.

• மேலும் இது ஞானத்தை வளர்க்கிறது.

 

2. கல்வி உரிமைச் சட்டம் பற்றி விரிவாக எழுதுக.

• ஒவ்வொரு குழந்தைக்கும் இலவச மற்றும் கட்டாயக் கல்வி பெறுவதற்கான உரிமை உண்டு.

• 6 முதல் 14 வயது வரையிலானது.

• கல்வி உரிமைச் சட்டம் 2009 இதை விவரிக்கின்றது.

முக்கியக் கூறுகளாவன:

• தொடக்கக் கல்வி முடியும் வரை எந்த மாணவரும் பள்ளியிலிருந்து இடை நில்லாமை.

• பொருளாதாரத்தின் பின்தங்கியவர்களின் குழந்தைகளுக்கு, அனைத்து தனியார் பள்ளிகளிலும் 25% இட ஒதுக்கீடு.

• ஒவ்வொரு மூன்று ஆண்டுக்கும் பள்ளியின் உள்கட்டமைப்பை மேம்படுத்துதல்.

• மாநிலத்திற்கும், மத்திய அரசுக்கும் நிதி பகிரப்படும்.

 

3. ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டம் பற்றி விரிவாக எழுதுக.

2018-ஆம் ஆண்டு முதல் இந்திய அரசு, மழலையர் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை, பள்ளிக் கல்வியை இணைத்து ஒரே திட்டமாக வழங்க முனைவது ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்திட்டமாகும்.

இதன் குறிக்கோள்கள்:

• தரமான கல்வியை வழங்கி, மாணவர்களின் கற்றல் அடைவுகளை மேம்படுத்துதல். 

• கல்வி உரிமைச் சட்டத்தை நடைமுறைப்படுத்த அனைத்து மாநில அரசுகளையும் பெண் கல்வியில் கவனம் செலுத்துதல்.

• மின்னணு கல்வியில் கவனம் செலுத்துதல்.

 

                     

செயல்பாடு

செயல் திட்டம்


Tags : Educational Rights | Term 3 Chapter 3 | 5th Social Science கல்வி உரிமைகள் | பருவம் 3 அலகு 3 | 5 ஆம் வகுப்பு சமூக அறிவியல்.
5th Social Science : Term 3 Unit 3 : Educational Rights : Questions with Answers Educational Rights | Term 3 Chapter 3 | 5th Social Science in Tamil : 5th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 5 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : பருவம் 3 அலகு 3 : கல்வி உரிமைகள் : வினா விடை - கல்வி உரிமைகள் | பருவம் 3 அலகு 3 | 5 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : 5 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
5 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : பருவம் 3 அலகு 3 : கல்வி உரிமைகள்