பருவம்-1 அலகு 1 | 2வது EVS சுற்றுச்சூழல் அறிவியல் - பதில்களுடன் கூடிய கேள்விகள் | 2nd EVS Environmental Science : Term 1 Unit 1 : Our Environment
நமது
சுற்றுச்சூழல் (பருவம்-1 அத்தியாயம் 1 | 2வது
EVS சுற்றுச்சூழல் அறிவியல்)
மதிப்பீடு
1. பொருத்துக.
அ.
பாலைவனம்
- சிங்கம்
ஆ.
சமவெளி - ஒட்டகம்
இ.
காடு - மீன்
ஈ. குளம் - பசு
விடை :
அ. பாலைவனம் - ஒட்டகம்
ஆ. சமவெளி - பசு
இ. காடு -
சிங்கம்
ஈ. குளம் -
மீன்
2. நில அமைப்புகளை அவற்றின் பெயர்களோடு கோடிட்டு
இணைக்க.
3. சரியானவற்றை 'ச' என்றும் தவறானவற்றை 'த' என்றும்
குறிக்க.
அ.
குன்றுகளில் படிவிவசாயம் நடைபெறுகிறது. (ச)
ஆ.
குதிரையைப் பாலைவனக் கப்பல்' என அழைக்கிறோம். (த)
இ.
சிங்கமும் புலியும் காட்டில் காணப்படும். (ச)
ஈ.
காட்டில் மணற்குன்றுகள் இருக்கும். (த)
4. வகைப்படுத்துக.
(ஒட்டகம், வாத்து, புலி,
கள்ளிச்செடி, மணல், யானை,
நீர், தாமரை, மான்,
மீன், மரம்)
காடு : புலி, யானை, மான், மரம்
குளம் : வாத்து, மீன், நீர், தாமரை
பாலைவனம் : ஒட்டகம், கள்ளிச்செடி,
மணல்
5. அடைப்புக் குறிக்குள் உள்ள சொற்றொடர்களைப் பயன்படுத்தி
தொடர்களை முழுமையாக்குக.
(அதிக அளவு நீரை ஒரே நேரத்தில் பருகும், மரங்கள்
நிறைந்தது, படிவிவசாயம் நடைபெறுகிறது, உப்பு
நீரைக் கொண்டது, ஏரியைவிடச் சிறியது)
அ.
காடு மரங்கள்
நிறைந்தது
ஆ.
கடல் உப்பு
நீர் உள்ளது
இ.
ஒட்டகம் ஒரே
நேரத்தில் நிறைய தண்ணீர் குடிக்கும்
ஈ.
குளம் ஏரியை
விட சிறியது
உ.
குன்றில் படி
பண்ணைகள் உள்ளன
தன் மதிப்பீடு
* பல்வேறுபட்ட சுற்றுச்சூழலை என்னால் அடையாளம் காண முடியும்
* என் சுற்றுச்சூழலை என்னால் பாதுகாக்க முடியும்