எனது அருமைத் தாய்நாடு | பருவம்-3 அலகு 2 | 2வது EVS சுற்றுச்சூழல் அறிவியல் - பதில்களுடன் கூடிய கேள்விகள் | 2nd EVS Environmental Science : Term 3 Unit 2 : My Beloved Motherland
எனது அருமைத் தாய்நாடு (பருவம்-3 அத்தியாயம் 2 | 2வது EVS சுற்றுச்சூழல் அறிவியல்)
1. கொடுக்கப்பட்ட தேதிகளுக்கு உரிய தேசிய நாள்களின்
பெயர்களை எழுதுக.
விடை :
ஆகஸ்ட் 15 : சுதந்திர தினம்
நவம்பர் 14 : குழந்தைகள் தினம்
ஜனவரி 26 : குடியரசு தினம்
அக்டோபர் 2 : காந்தி ஜெயந்தி
2. பொருந்தாததை வட்டமிடுக.
அ. மாம்பழம் வங்காளப் புலி ஆலமரம் பலாப்பழம்
ஆ. பனைமரம் வரையாடு தாமரை மரகதப்புறா
இ. காவி பச்சை சிவப்பு வெள்ளை
ஈ. ஜனவரி 26 ஆகஸ்ட் 15
அக்டோபர் 2 நவம்பர் 12
(டாக்டர். இராஜேந்திர பிரசாத், பண்டித ஜவஹர்லால் நேரு, மாநிலப் பழம், மகாத்மா காந்தி, வரையாடு )
அ. இந்தியாவின் முதல் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு.
ஆ. இந்தியாவின் முதல் குடியரசுத்தலைவர் டாக்டர். இராஜேந்திர பிரசாத்.
இ. நம் தேசத்தந்தை மகாத்மா காந்தி.
ஈ. தமிழ்நாட்டின் மாநில விலங்கு வரையாடு.
உ. பலாப்பழம் நம் மாநிலப் பழம்.
* என்னால் சில தேசிய நாள்கள், தேசத் தலைவர்களின் பெயர்களைக் கூற முடியும்.
* என்னால் தேசிய மற்றும் மாநிலச் சின்னங்களை அடையாளம் காண முடியும்.
* நான் பொதுச் சொத்துகளைப் பாதுகாப்பேன்.