புவியியல் - நிலத்தோற்றம் மற்றும் காலநிலை புள்ளி விவரங்களைக் காட்டும் முறைகள் | 11th Geography : Chapter 10 : Representation of Relief Features and Climatic Data
நிலத்தோற்றம் மற்றும் காலநிலை புள்ளி விவரங்களைக் காட்டும் முறைகள்
அத்தியாயக் கட்டகம்
10.1 அறிமுகம்
10.2 நிலத்தோற்றத்தைக் காட்டும் முறைகள்
10.3 காலநிலை வரைபடங்கள்
10.4 காற்றுப்போக்கு படம்
கற்றல் நோக்கங்கள்
• பலவகையான நிலத் தோற்றங்களை அடையாளம் காணுவதைப்
புரிந்துகொள்ளுதல்.
• நிலஅளவை வகைகளைப் பட்டியலிடுதல்.
• சம உயரக் கோடுகளின் குறுக்குவெட்டுத் தோற்றத்தை
வரைந்து நிலதோற்றத்தைக் கண்டறிதல்.
அறிமுகம்
நிலவரைபடத்தில் பயன்படும் கோட்டுச் சட்டம் மற்றும் அளவையைப் பொறுத்து நிலவரைபடம் ஒரு இடத்தின் அனைத்து தகவல்களையும் தருகிறது. இருபரிமாண நிலவரைபடம் பல்வேறு முறைகளின் மூலம் முப்பரிமாணத் தோற்றத்தை உருவாக்க முடியும். இந்த முறைகள் பண்டைய காலம் முதல் நடைமுறையில் இருந்து வருகிறது.
