Home | 9 ஆம் வகுப்பு | 9வது அறிவியல் | நெகிழி மாசுபாட்டை ஒழிப்பதில் மாணவர்களின் பங்கு

9 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 15 : கார்பனும் அவற்றின் சேர்மங்களும்

நெகிழி மாசுபாட்டை ஒழிப்பதில் மாணவர்களின் பங்கு

நெகிழி மாசுபாட்டைக் குறைப்பதில் நீங்கள் முக்கியப் பங்கு வகிக்கிறீர்கள். மேலும், அதனைக் குறைப்பதற்கான திறனைபும் பெற்றுள்ளீர்கள். இந்த வகை நெகிழியானது, நன்மையானதா அல்லது தீமையானதா என்று நீங்களே கேளுங்கள்.

நெகிழி மாசுபாட்டை ஒழிப்பதில் மாணவர்களின் பங்கு

நெகிழி மாசுபாட்டைக் குறைப்பதில் நீங்கள் முக்கியப் பங்கு வகிக்கிறீர்கள். மேலும், அதனைக் குறைப்பதற்கான திறனைபும் பெற்றுள்ளீர்கள். இந்த வகை நெகிழியானது, நன்மையானதா அல்லது தீமையானதா என்று நீங்களே கேளுங்கள். இது தீங்கு விளைவிக்கக்கூடியது இல்லையெனில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடியதா? இப்படிப்பட்ட கேள்விகளும், அறிவியல் சார்ந்த அறிவும் தேவையற்ற நெகிழி மாசுபாட்டைக் குறைப்பதற்கு பெரிதும் உதவும்.

 

1. நெகிழிப் பயன்பாட்டை எவ்வாறு தடுக்கலாம்?

மாணவர்களாகிய நீங்கள் நெகிழி பற்றிய உங்களது அறிவியல் அறிவை, உங்களது பெற்றோர், உறவினர் மற்றும் நண்பர்களுடன் பகிர்ந்துகொண்டு, நெகிழி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தலாம்.

ரெசின் குறியீட்டை அடையாளம் காண்பதன் மூலம் தீமையான நெகிழிகளை எவ்வாறு தடுப்பது என்பதை அவர்களுக்கு கற்பிக்கலாம்.

 புதிய விதிகள் பற்றியும், ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படக் கூடியநெகிழிகளை எவ்வாறு தடுக்கலாம் என்பது பற்றியும் அவர்களுக்கு எடுத்துக்கூறலாம்.

 

2. உங்கள் அன்றாட வாழ்வில் நடைமுறைகள்

நெகிழிகளை வீசி எறிவதன் மூலம் சுற்றுப்புறத்தை மாசுபடுத்தாதீர்கள்.

உங்களுடைய பள்ளியிலுள்ள செயல்திட்டங்களுக்கு தெர்மகோலைப் (ரெசின் குறியீடு 6) பயன்படுத்தாதீர்கள்.

ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படக் கூடிய அல்லது உபயோகித்தபின் தூக்கியெறியப்பட வேண்டிய நெகிழிப் பொருள்களாலான பைகள், குவளைகள், தெர்மகோலால் ஆன தட்டுக்கள், குவளைகள் மற்றும் உறிஞ்சு குழாய்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தாதீர்கள்.

நெகிழிகளை எரிக்காதீர்கள். ஏனெனில் அதனால் வெளியிடப்படும் நச்சுக் காற்றானது, நமது உடலுக்கு தீங்கு விளைவிப்பதோடு பருவநிலை மாற்றத்தையும் ஏற்படுத்தும்.

● PVC நெகிழிகளை எரிப்பதன் மூலம் வெளியாகும் டையாக்சீன் என்ற வேதிப்பொருளானது மனிதர்களுக்கு அதிகக்கேடு விளைவிப்பதாகும்.

நெகிழிப் பைகளில் அடைக்கப்பட்ட சூடான உணவுப் பொருள்களை உண்ணாதீர்கள்.

நெகிழிப் பொருள்களை தனித்தனியே பிரித்து, மறுசுழற்சி செய்யப்படும்படி, சுத்தம் செய்யும் பணியாளர்களிடம் வழங்க வேண்டும்.

ரெசின் குறியீட்டை அடையாளம் காண்பது மற்றும் பயன்படுத்துவதைத் தடுப்பது பற்றி ஒரு நாளைக்கு ஒரு நபருக்காவது விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும். (ரெசின் குறியீடு #3 PVC, #6 PS and #7 ABS/PC).

 


நினைவில் கொள்க

உயிர்களுடன் தொடர்புடைய பிரிக்கமுடியாத வேதிப்பொருள் கார்பன் ஆகும்.

கார்பன் வேதியியலானது, உயிர் வேதியியல் என்றும் அழைக்கப்படுகிறது.

கார்பனானது இயற்கையில் தனித்தும், சேர்ந்தும் காணப்படுகிறது.

 ஃப்ரெட்ரிக் ஹோலர் என்பவர், நவீன கரிம வேதியியலின் தந்தை எனப்படுகிறார்.

சங்கிலித் தொடராக்கம் மூலம் கார்பனானது பிற கார்பனுடன் இணைந்து நீண்ட, கிளைத்த மற்றும் சங்கிலி அமைப்பை உருவாக்குகின்றது.

கரி, கிராஃபைட் மற்றும் வைரம் ஆகியவை கார்பனின் புறவேற்றுமை வடிவங்களாகும்.

வைரத்தில், அணுக்களானவை, தொடர்ச்சியான நான்முகி வடிவில் அமைக்கப்பட்டுள்ளன.

ரெசின் குறியீடு என்பது நெகிழியை உருவாக்கப் பயன்படும் பலபடிமான பொருளைக் குறிக்கிறது. அவை 1 முதல் 7 வரை குறிக்கப்படுகின்றன.

 ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படக்கூடிய நெகிழிகள் தாவரங்கள், விலங்குகள் மற்றும் மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கின்றன.

 

A-Z சொல்லடைவு

புறவேற்றுமை வடிவங்கள் : ஒரு தனிமத்தின் வேறு வடிவங்கள்.

புறவேற்றுமை : ஒரு தனிமம் ஒன்றுக்கு மேற்பட்ட வடிவங்களில் இருக்கும் தன்மை.

சங்கிலித் தொரடாக்கம் : சகப்பிணைப்பின் மூலம் ஒரு தனிமமானது, பிற தனிமங்களுடன் இணைக்கப்படுதல்.

தீங்குவிளைவிக்கும் நெகிழிகள் : நச்சுத் தன்மையுள்ள மற்றும் தீங்கு விளைவிக்கும் நெகிழிகள்.

மாற்றியம் : ஒரே மூலக்கூறு வாய்ப்பாட்டையும், வேறுபட்ட மூலக்கூறு அமைப்பையும் பெற்றுள்ள தன்மை .

மாற்றியங்கள் : ஒரே மூலக்கூறு வாய்ப்பாட்டையும், வேறுபட்ட மூலக்கூறு அமைப்பையும் பெற்ற சேர்மங்கள்.

ஒருமுறை பயன்படுத்தப்படும் நெகிழி : உபயோகித்த பிறகு தூக்கியெறியப்பட வேண்டிய நெகிழிகள்.

கரிம கார்பன் சேர்மங்கள் : உயிருள்ள பொருள்களிலிருந்து பெறப்படும் கார்பன் சேர்மங்கள்.

நெகிழிகள் : ரெசின்கள் எனப்படும் திரவ பலபடிகளால் ஆன சங்கிலியாக்கத் தொடராலான சேர்மங்கள்.

நான்கு இணைதிறன் : கார்பன், தனது நான்கு எலக்ட்ரான்களை மற்ற தனிமங்களுடன் பகிர்ந்துகொள்ளும் தன்மை .

9th Science : Carbon and its Compounds : Role of students in the prevention of plastic pollution in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 15 : கார்பனும் அவற்றின் சேர்மங்களும் : நெகிழி மாசுபாட்டை ஒழிப்பதில் மாணவர்களின் பங்கு - : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 15 : கார்பனும் அவற்றின் சேர்மங்களும்