செல் உயிரியல் | இரண்டாம் பருவம் அலகு 4 | 7 ஆம் வகுப்பு அறிவியல் - மாணவர் செயல்பாடு | 7th Science : Term 2 Unit 4 : Cell Biology
செயல்பாடு :1
நீங்கள், முந்தைய வகுப்பில் படித்ததை நினைவில் வைத்துக் கொள்ளுகிறீர்களா, ஒரு பொருள் உயிருள்ளவை அல்லது உயிரற்றவை என எவ்வாறு அறிவீர்கள் என்பதைப் பற்றி எழுதுங்கள்?
1. ஒரு குழுவை உருவாக்குங்கள், உயிருள்ளவைகளின் செயல்களாக உங்கள் நினைவில் உள்ளவற்றை எழுதுங்கள்
சுவாசித்தல், செரிமானம், உறிஞ்சுதல், இனப்பெருக்கம்
2. ஒரு தனிப்பட்ட செல் உயிரோடு இருப்பதாக நீங்கள் நினைக்கிறீர்களா? உங்கள் பதிலை விளக்குங்கள்
உயிரணுக்கள் சுவாசிக்கின்றன, உணவை எடுத்துக் கொள்கின்றன மற்றும் இனப்பெருக்கம் செய்கின்றன
3. நீங்கள் அறிந்த செல்லின் சில நுண்ணுறுப்புகளைப் பற்றி எழுதுங்கள்
குளோரோபிளாஸ்ட், மைட்டோகாண்டிரியா, லைசோசோம், எண்டோபிளாச வலைப்பின்னல், நியூக்ளியஸ்
செயல்பாடு : 2
மனிதனின் இரத்த ஓட்ட மண்டலத்தில் காணப்படும் உறுப்புகள் மற்றும் அவற்றின் பணிகளை வரிசைப்படுத்துக
இதயம் - இது இரத்தத்தை வெளியேற்றுகிறது
ஆரிக்கிள்ஸ் - இதயத்தின் மேல் அறைகள்
வென்ட்ரிக்கிள்ஸ் - இதயத்தின் கீழ் அறைகள்
தமனிகள் - ஆக்சிஜனேற்றப்பட்ட இரத்தத்தை உடலின் பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்கிறது
நரம்புகள் - ஆக்சிஜன் இல்லாத இரத்தத்தை உடலில் இருந்து இதயத்திற்க்கு கொண்டு செல்கிறது
நுண்குழாய்கள் - திசுக்களுக்கு ஊட்டசத்துக்கள் மற்றும் ஆக்சிஜனைக் கொண்டு வந்து திசுக்களில் இருந்து கழிவுப்பொருட்களை அகற்றுகின்றன.
செயல்பாடு : 3
கீழே உள்ள படங்களைக் கவனி, கொடுக்கப்பட்ட அட்டவணையில் நீங்கள் பார்க்கும் செல்களுக்கிடையே காணக்கூடிய வேறுபாடுகளை எழுதவும்.
தாவர செல்
1. தாவர செல்லில் செல் சுவர் உள்ளது
2. இதில் குளோரோபிளாஸ்ட் உள்ளது
3. சென்ட்ரியோல்கள் இல்லை
4. ஒரு பெரிய மைய வெற்றிடம்
5. லைசோசோம் பொதுவாக தெரியவில்லை. பெரும்பாலான தாவர செல்களில் சிலியா இல்லை
விலங்கு செல்
1. விலங்கு செல்லில் செல் சுவர் இல்லை
2. குளோரோபிளாஸ்ட் இல்லை
3. சென்ட்ரியோல்கள் உள்ளன
4. ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட சிறிய வெற்றிடங்கள்
5. சைட்டோபிளாஸில் லைசோசோம்கள் ஏற்படுகின்றன. சிலியா உண்டு
மூலச் செல்கள் : எந்தவொரு வகை செல்லுக்குள் செல்பிரிதல் அடைந்து பெருக்கம் அடைந்து வளர்ச்சியடையும் திறன் உடையது. ஆனால் மூலச் செல்கள் மிகவும் ஆச்சரியமானவை. கருவிலிருந்து பெறப்படும் மூலச் செல்கள் மிகவும் சிறப்பானது. ஏனெனில் உடலில் உள்ள எந்தவொரு செல்லாகவும் அவை மாறக்கூடியது, அதாவது இரத்த செல்கள், நரம்பு செல்கள், தசை செல்கள் அல்லது சுரப்பி செல்கள். எனவே, அறிவியல் அறிஞர்கள் மற்றும் மருந்துவர்கள், சில நோய்களைக் குணப்படுத்தவும், தடுக்கவும் மூலச் செல்களைப் பயன்படுத்தி வருகின்றனர் உதாரணமாக முதுகுத் தண்டில் ஏற்படும் காயம்.
பாசியில் பசுங்கணிகத்தைக் கண்டறிதல்
குளத்தில் இருந்து சில பாசிகளைச் சேகரித்து பின் அதனை இழைகளாகப் பிரித்து. ஒரு நழுவத்தில் சில இழைகளை வைக்கவும். பின் கூட்டுநுண்ணோக்கின் மூலம் அதை கவனித்து நீங்கள் பார்த்துள்ள பசுங்கணிகத்தின் படத்தை வரையவும்.
பல்வேறு வகையான தாவரங்கள் வெவ்வேறு வண்ணங்களைக்கொண்டுள்ளதற்குக் காரணம் கணிகங்கள் ஆகும். பசுங்கணிகம் பச்சை நிறத்திற்கு காரணம். வண்ணகணிகங்கள் மலர் மற்றும் பழங்களுக்கு வண்ணத்தை அளிக்கிறது. பழங்கள் பழுக்கும்போது, பசுங்கணிகங்கள் வண்ணகணிக்கங்களாக மாறுகின்றன. ஸ்டார்ச் சர்க்கரையாக மாறுகிறது. இது தான் காய் கனியாவதற்கான இரகசியமாகும்.
செயல்பாடு : 4
இந்த அட்டவணையை பூர்த்தி செய்யுங்கள்
1. செல் சவ்வு - சில பொருட்களை செல்லுக்குள் மற்றும் வெளியே செல்ல அனுமதிக்கிறது
2. செல் சுவர் -
3. சைட்டோபிளாசம் - செல் உறுப்புகளின் இயக்க பகுதி
4. மைட்டோகாண்ட்ரியா -
5.நுண்குமிழ் -
6. பசுங்கணிகம் - சூரிய சக்தியில் இருந்து உணவை உற்பத்தி செய்கிறது
7. எண்டோபிளாச வலைப்பின்னல் - புரதம், லிப்பிடுகள் மற்றும் ஸ்டெராய்டுகளை உற்பத்தி செய்து அவற்றை செல்லுக்குள் கடத்திகிறது.
சிவப்புரத்த செல்களில் உட்கரு இல்லை. உட்கருவின்றி இந்த செல்கள் விரைவில் இறக்கின்றன; சுமார் இரண்டு மில்லியன் சிவப்பு செல்கள் ஒவ்வொரு நொடியும் இறக்கின்றன. அதிர்ஷ்ட வசமாக, மனித உடம்பில் புதிய சிவப்பு ரத்த செல்கள் தினமும் தோன்றுகின்றன.