Home | 1 ஆம் வகுப்பு | 1வது தமிழ் | தோரணம் செய்வோமா!

பருவம் 3 இயல் 7 | 1 ஆம் வகுப்பு தமிழ் - தோரணம் செய்வோமா! | 1st Tamil : Term 3 Chapter 7 : Thoranam seivoma

1 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 இயல் 7 : தோரணம் செய்வோமா!

தோரணம் செய்வோமா!

1 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 இயல் 7 : தோரணம் செய்வோமா!

இயல் 7

தோரணம் செய்வோமா?

தோரணம் செய்வோமா!

வண்ணத்தாள் வாங்கிவருகிறேன்

அம்மா, கடைக்குப் போய் வண்ணத்தாள் வாங்கி, வரட்டுமா?

சரி, பொன்மணி போர்வையை தாத்தாவிடம் கொடு

தாத்தா, என்ன தேடுகிறீர்கள்?

மோதிரம் தொலைந்துவிட்டது

தாத்தா, இதோ உங்கள் மோதிரம்!

கிடைத்துவிட்டதா? நன்றி

'வண்ணத்தாள்' கொடுங்கள் ஐயா

இதோ தருகிறேன்

ம்....

சுவரில் தொங்க விடுவோமா?

அழகாக இருக்கும்


பெயரைச் சொல்வேன்: எழுத்தை அறிவேன்


படமும் சொல்லும்


கொடி மொட்டு தொலைபேசி

பொரி மொட்டு வானொலி

எழுத்தை எடுப்பேன்; பெயரைச்சொல்வேன்


 

எழுத்துகளைக் கண்டுபிடிப்போம்: வட்டமிடுவோம்


 

படிப்போம்

சுவரொட்டி

கொசு

பொருட்காட்சி

சொட்டுமருந்து

தொடாமல் பார்க்கவும்


 

பாட்டொன்று பாடலாம்


மலையொன்றின் அருகிலே

கதிரொளியும் வந்ததே

குயிலொன்று கூவவே

எதிரொலியும் கேட்டதே

அவ்வொலியைக் கேட்டுமே

மயிலும் அங்கே ஆடுதே


எழுதிப் பழகுவேன்



படிப்பேன் வரைவேன்


 

இணைத்து எழுதுவேன்


விடை

1. கொடி

2. நொடி

3. பொடி

 

1. மொட்டு

2. கொட்டு

3. சொட்டு

விடை

1. பெரிய தொப்பி

2. மீன் தொட்டி

3. கொசு வலை


வேறுபாடுகளைக் கண்டுபிடித்து எழுதுவேன்


 

வண்ணத்துப்பூச்சி


தோட்டமெல்லாம் சுற்றிவரும்

வண்ணத்துப்பூச்சி - உன்னைத்

தொட்டுப் பார்க்க வேண்டுமே

வண்ணத்துப்பூச்சி

 

பட்டுப்போலப் பளபளக்கும்

வண்ணத்துப்பூச்சி

பறக்கும் பூவைப் போலிருக்கும்

வண்ணத்துப்பூச்சி

 

சின்னப் பாப்பா கேட்கிறேனே

வண்ணத்துப்பூச்சி - நீ

திரும்பி என்னைப் பார்த்திடுவாய்

வண்ணத்துப்பூச்சி,


பெயரைச் சொல்வேன்: எழுத்தை அறிவேன்


படமும் சொல்லும்


கோதுமை சோறு

போர்வை மோதிரம்

தோரணம் தொலைநோக்கி

எழுத்தை எடுப்பேன்: பெயரைச் சொல்வேன்


 

எழுத்துகளைக் கண்டுபிடிப்போம்; வட்டமிடுவோம்


 

படிப்போம்

தோப்பு

பூஞ்சோலை

நோய்தடுப்பு

பேச்சுப்போட்டி

கோடை விடுமுறை


 

பாட்டொன்று பாடலாம்


கடலோரம் போகலாம்

அலையோசை கேட்கலாம்

நண்டோடு ஓடலாம்

மணலோடு ஆடலாம்

 

சோலைக்குள்ளே போகலாம்

தென்றலோடு நடக்கலாம்

வண்டோடு பறக்கலாம்

மலர்களோடு சிரிக்கலாம்


எழுதிப் பழகுவேன்


படிப்போம் எழுதுவோம்

தோகை சோலை பெற்றோர்

கோலம் கோட்டை போட்டி

கத்தரிக்கோல் குயிலோசை


 

படிப்பேன் வரைவேன்

தொலைநோக்கி

தோரணம்

மோதிரம்

கோடரி


 

இணைத்து எழுதுவேன்

 

கோழி தோழி

மோர் போர்

சோழன் தோழன்

விடை

1. கோழி முட்டை

2. நெய் முறுக்கு

3. மயில் தோகை

4. தொங்கும் தோரணம்

 

கண்டுபிடிப்பேன்:வட்டமிடுவேன்



 

கண்ணாடியில் கண்டுபிடிப்பேன்


விடை

கோலம்

தொலைபேசி

வானொலி

சோளம்

 

நிரப்புவேன்

(பொம்மை கோடரி தோரணம் தொலைக்காட்சி)


 

தோட்டத்திற்கு வந்தது யார்

முட்டையிலிருந்து வருவேன்:

முற்றத்திலே திரிவேன். நான் யார் ?

விடை : கோழி

ஒற்றைக்காலில் நிற்பேன்: குளத்தில்

உணவு தேடுவேன். நான் யார்?

விடை : கொக்கு

வெள்ளை நிறத்தில் இருப்பேன்:

காற்றிலே பறப்பேன். நான் யார்?.

விடை : பஞ்சு

வட்டத்தில் உள்ள எழுத்துகளை எழுதினால் தெரிந்துவிடும்

கோழிக்குஞ்சு


எதுவும் வீண் இல்லை


ஏன் கவலையோடு இருக்கிறாய்?

நானோ ஓட்டைப்பானை

நீர் வீணாகக் கொட்டுகிறதே

வருத்தம் கொள்ளாதே. எதுவுமே வீண் இல்லை

என்னால் உங்களுக்குப் பயன் இல்லையே!

நாள்தோறும் நீ வரும் வழியைப் பார்க்கவில்லையா?.

ஆமாம், எதுவுமே வீண் இல்லை

 

ஒளிந்துப்பவர்கள் யார் யார்?

படத்தில் மறைந்துள்ள பறவைகள்...

கழுகு, ஆந்தை, காகம், கிளி, கொக்கு, புறா, கோழி


Tags : Term 3 Chapter 7 | 1st Tamil பருவம் 3 இயல் 7 | 1 ஆம் வகுப்பு தமிழ்.
1st Tamil : Term 3 Chapter 7 : Thoranam seivoma : Thoranam seivoma Term 3 Chapter 7 | 1st Tamil in Tamil : 1st Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 1 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 இயல் 7 : தோரணம் செய்வோமா! : தோரணம் செய்வோமா! - பருவம் 3 இயல் 7 | 1 ஆம் வகுப்பு தமிழ் : 1 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
1 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 இயல் 7 : தோரணம் செய்வோமா!