அறிவியல் ஆய்வக சோதனைகள் - திருகு அளவி ஒரு இரும்பு ஆணியின் தடிமனைக் கணக்கிடுதல் | 9th Science : Practical experiments
2. திருகு அளவி ஒரு இரும்பு ஆணியின் தடிமனைக் கணக்கிடுதல். 
நோக்கம்: 
கொடுக்கப்பட்ட ஒரு இரும்பு ஆணியின் தடிமனைக் காணல். 
தேவையான பொருள்கள்: 
திருகு அளவி மற்றும் இரும்பு ஆணி. 
சூத்திரம்:
i)
மீச்சிற்றளவு
(LC) = புரியிடைத்தூரம் / தலைக்கோலின் மொத்தப்பிரிவுகளின் எண்ணிக்கை 
ii)
தடிமன்
(t) = புரிக்கோல் அளவு(P.S.R) + (தலைக்கோல் ஒன்றிப்பு(HSC)
 × மீச்சிற்றளவு(L.C))
± சுழித்திருத்தம்
t
= P.S.R + (H.S.C × LC) ± Z.C 
பிழை: 
i)
நேர்ப்பிழை
: நேர்ப்பிழை
5 புள்ளிகள்
எனில், சுழித் திருத்தம் 5 புள்ளிகள் கழிக்க வேண்டும்.
t
= PSR + (HSC × LC) - ZC
t
= PSR + (HSC × LC) - 5 
ii)
எதிர்ப்பிழை
: எதிர்ப்பிழை
95 புள்ளிகள்
(100 - 95 = 5 புள்ளிகள்)
எனில், சுழித் திருத்தம் 5 புள்ளிகள் கூட்ட வேண்டும். 
t
= PSR + (HSC × LC) + ZC
t
= PSR + (HSC × LC) + 5 
iii)
சுழிப்பிழை
: எந்தவித
சுழித்திருத்தமும் இல்லையெனில் t
= PSR + (HSC× 0.01) + 0 
செய்முறை: 
•
திருகு அளவியின் மீச்சிற்றளவு (LC) = 0.01 மி.மீ ஆகும். 
•
திருகு அளவியின் இரு முகங்கள் S1, S2 இணைந்திருக்கும் பொழுது மேற்கண்ட முறையில் சுழிப்பிழை மற்றும் சுழித்திருத்தம் காண வேண்டும் 
•
திருகு அளவியின் இரு முகங்களுக்கிடையே இரும்பு ஆணியை வைத்து, புரிக்கோல் அளவையும், புரிக்கோல் அச்சோடு (P.S.R) பொருந்தும் தலைக்கோல் ஒன்றிப்பையும் (H.S.C) காண வேண்டும் 
இரும்பு ஆணியின் தடிமன் t = P.S.R + (H.S.C ×
LC) + ZC 
இதைப்போல, இரும்பு ஆணியின் வெவ்வேறு பகுதிகளை திருகு அளவியில் பொருத்தி, சோதனையைத் திரும்பவும் செய்யவும். அளவீடுகளை கீழ்க்கண்ட அட்டவணையில் நிரப்புக. 
சுழித்திருத்தம்: (ZC) இல்லை .
மீச்சிற்றளவு: 0.01மி.மீ 

முடிவு: கொடுக்கப்பட்ட இரும்பு ஆணியின் தடிமன்= 4.63.மி.மீ