Home | 11 ஆம் வகுப்பு | 11வது விலங்கியல் | பின்வரும் வினாக்களுக்கு சுருக்கமாக விடையளி

சுவாசம் | விலங்கியல் - பின்வரும் வினாக்களுக்கு சுருக்கமாக விடையளி | 11th Zoology : Chapter 6 : Respiration

   Posted On :  07.01.2024 08:42 am

11 வது விலங்கியல் : பாடம் 6 : சுவாசம்

பின்வரும் வினாக்களுக்கு சுருக்கமாக விடையளி

பின்வரும் வினாக்களுக்கு சுருக்கமாக விடையளி : பின்வரும் வினாக்களுக்கு சுருக்கமாக விடையளி, புத்தக வினாக்களுக்கான கேள்வி பதில்கள்

17. தட்டைப்புழு மண்புழு மீன், இறால், கரப்பான் பூச்சி மற்றும் பூனை ஆகியவற்றின் சுவாச உறுப்புகளின் பெயர்களைக் கூறு.

தட்டைப்புழு - உடல் பரப்பு

மண்புழு - உடல் பரப்பு

மீன் - செவுள்கள்

இறால் - செவுள்கள்

கரப்பான் பூச்சி - மூச்சுக்குழல் அல்லது டிரக்கியா

பூனைநுரையீரல்


18. இரத்தச் சிவப்பணுக்களில் பைகார்பனேட் உற்பத்தியை ஊக்குவிக்கும் நொதியின் பெயரைக் கூறு.

கார்பானிக் அன்ஹைட்ரேஸ்


19. காற்றானது நாசியிலிருந்து மூச்சுக்குழாயை அடையப் பல உறுப்புகளைக் கடந்து செல்கிறது. அவ்வுறுப்புகளின் பெயர்களை வரிசைப்படுத்துக.

புறநாசித்துளைகள்நாசிக்குழி, → தொண்டைகுரல்வளை, → மூச்சுக்குழல்மூச்சுக்கிளைக்குழல்கள், → மூச்சுக்கிளை நுண்குழல்கள் -→ காற்று நுண்ணறை.


20. உணவு விழுங்கப்படும்போது குரல் வளையை மூடும் சுவாச அமைப்பு எது

குரல்வளை மூடி


21. மூச்சுக்குழாயில் காற்று செல்லும் வழியில் எதிர்ப்புத்திறன் மிகவும் குறைவு ஏன்? ஏதேனும் இரண்டு காரணங்களைக் கூறுக

குருத்தெலும்பு வளையங்கள் மூச்சுக்குழலை எப்பொழுதும் திறந்தநிலையில் வைத்திருக்கிறது. மூச்சுக்குழலின் சுவரில் குருத்தெலும்பாலான 'C' வடிவக் குருத்தெலும்பு வளையங்கள் சுவாசத்தின் போது ஏற்படும் அழுத்த மாறுபாடுகளால் குழல் வெடித்து விடாமலும் பாதுகாக்கிறது.

காற்று செல்லும் போது சிதைந்துவிடாமலும் மூச்சுக்குழலின் தடித்த சுவர் பாதுகாப்பதால் காற்று எந்த எதிர்ப்புமில்லாமல் செல்லுகிறது. 


22. கடல் மட்டத்திற்கு மேல் அதிக உயரத்தில் நீண்டநாள் வாழ ஒருவரின் உடல் எவ்வாறு சரி செய்து கொள்கிறது?

கடல் மட்டத்திற்கு மேல் அதிக உயரத்திற்கு செல்லும் பொழுது வளிமண்டல அழுத்தம் ஆக்சிஜன் பகுதி அழுத்தமும் குறைவாக இருப்பதால் ஆக்சிஜன் ஹீமோகுளோபினோடு குறைவாக இணைகிறது.

இது நீண்ட நாள் அங்கு வாழக் கூடிய சூழலில் சிறுநீரகங்களிலிருந்து அதிக அளவு எரித்ரோபாய்டின் ஹார்மோன் உற்பத்தி செய்யப்பட்டு எலும்பு மஜ்ஜை தூண்டப்பட்டு அதிக இரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்கிறது.


23. வாயுக்களின் ஊடுருவல் நுண் காற்றுப்பை பகுதிகளில் மட்டுமே நடைபெறுகிறது. சுவாசமண்டலத்தின் வேறு எந்தப் பகுதியிலும் இது நடைபெறுவதில்லை விவாதிக்கவும்

சுவாசப்பாதையின் மற்ற உறுப்புகள் காற்றை எடுத்துச் செல்லும் வேலையைச் செய்கிறது 

உண்மையான சுவாசம் காற்றுப்பைகளுக்கும் இரத்தத் தந்துகிகளுக்கும் இடையே நடைபெறுகிறது.

காற்றுப்பைகள் மூன்று அடுக்குகளால் ஆனது 

1. மெல்லிய தட்டை எபிதீலியச் செல்கள்

2. காற்றுப்பையின் இரத்த நுண்நாளங்களின் எண்டோதீலியல் செல்கள்

3. இவற்றிற்கிடையேயுள்ள அடிப்படை பொருட்கள்

காற்றுப்பையின் இச்செல்கள் மிக மெல்லியதாக இருப்பதால் இதன் மூலம் வாயு பரிமாற்றம் விரவல் முறையில் துரிதமாக நடைபெறுகிறது.


24. சுவாசப் பாதையை விளக்கும் தொடர் விளக்க வரைபடத்தை (flow chart) வரைக.

புறநாசித்துளைகள்நாசிக்குழிதொண்டையை அடைகிறது. கடத்தல்குரல்வளை -→ மூச்சுக்குழல் முதல் நிலை மூச்சுக் கிளைக்குழல் → 2ம் நிலை மூச்சுக்கிளை குழல் → 3ம் நிலை மூச்சுகிளைக் குழல்சிறிய மூச்சுக் கிளைக் குழல்மூச்சுக் கிளை நுண் குழல்முடிவு மூச்சுக்கிளைக் குழல்சுவாச மூச்சுக் கிளைக் குழல் → (காற்று நுண்ணறை ).


25. நிமோனியா ஏன் ஒரு ஆபத்தான நோயாக கருதப்படுகின்றது?

நுரையீரல் வீங்கிய இந்நோயால் சிறிய நுண் காற்றுப்பைகளான அல்வியோலஸ் பாதிப்படைகின்றது மற்றும் கோழைப் பொருள் உற்பத்தி மூக்கடைப்பு மூச்சுத்திணறல் தொண்டைப்புண் ஏற்படுவதால் ஆபத்தான நோயாக கருதப்படுகின்றது.


26. எந்தவொரு நிலையில் ஆக்சிஜன் கடத்தலில் சிக்கல் ஏற்படுகின்றது என்பதை விளக்குக.

ஒரு மனிதன் கடல் மட்டத்திலிருந்து 8000 அடி உயரத்தில் உள்ள இடத்திற்குச் செல்லும் போது அங்கு வளிமண்டல அழுத்தமும் ஆக்சிஜன் பகுதி அழுத்தமும் குறைவாக இருப்பதால் அம்மனிதனுக்கு தலைவலி, குறைசுவாசம், குமட்டல் மற்றும் தலைசுற்றல் போன்ற உடனடி மாலை நோய்க்கான அறிகுறிகள் ஹீமோகுளோபின் ஆக்சிஜனுடன் குறைவாக இணைவதால் ஏற்படுகின்றது.

ஒரு மனிதன் கடலின் ஆழத்திற்குச் செல்லும்போது அம்மனிதனைச் சூழ்ந்துள்ள நீரின் அழுத்தம் அதிகரிப்பதால் நுரையீரலின் கொள்ளளவு குறைகின்றது. நுரையீரலுக்குள் உள்ள வாயுக்களின் பகுதி அழுத்தம் அதிகரிக்கிறது.

அதிகளவு ஆக்சிஜன் இரத்தத்தில் கலக்கிறது. இதனால் நைட்ரஜனும் அதிக அளவு இரத்தத்தில் கலப்பதால் நைட்ரஜன் நார் கோஸிஸ் என்ற நிலை ஏற்படுகிறது.

அவன் மேலே வரும் பொழுது அழுத்தமீட்சி நோய் ஏற்படுகின்றது. பெரிய குமிழ்கள் இரத்தத்தில் தோன்றி இரத்த ஓட்டத்தை தடுக்கவோ நரம்பு முனைகளில் அழுத்தத்தையோ ஏற்படுத்தலாம். அறிகுறிகள் :- மூட்டுத் தசை வலி, பக்கவாதம்

Ppppppppppppppppppppppppppppppp

Tags : Respiration | Zoology சுவாசம் | விலங்கியல்.
11th Zoology : Chapter 6 : Respiration : Answer the following questions Respiration | Zoology in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது விலங்கியல் : பாடம் 6 : சுவாசம் : பின்வரும் வினாக்களுக்கு சுருக்கமாக விடையளி - சுவாசம் | விலங்கியல் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது விலங்கியல் : பாடம் 6 : சுவாசம்