Home | 9 ஆம் வகுப்பு | 9வது அறிவியல் | பின்வரும் கேள்விகளுக்கு விடையளிக்க

அமிலங்கள், காரங்கள் மற்றும் உப்புகள் | வேதியியல் | அறிவியல் - பின்வரும் கேள்விகளுக்கு விடையளிக்க | 9th Science : Chemistry : Acids, Bases and Salts

   Posted On :  18.09.2023 03:23 am

9 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 14 : அமிலங்கள், காரங்கள் மற்றும் உப்புகள்

பின்வரும் கேள்விகளுக்கு விடையளிக்க

9 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 14 : அமிலங்கள், காரங்கள் மற்றும் உப்புகள் : புத்தக வினாக்கள் மற்றும் முக்கிய கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள், சிறுவினா, நெடு வினா, தன்மதிப்பீடு

II. சுருக்கமாக விடையளி

1. சோடியம் ஹைட்ராக்சைடுடன் வினைபுரியாத இரண்டு உலோகங்களைக் கூறுக.

விடை :

i) காப்பர் (Cu)

ii) வெள்ளி (Ag)

iii) குரோமியம் (Cr)

 

2. அமிலங்களின் பயன்கள் நான்கினை எழுதவும்.

விடை :

1) கந்தக அமிலம் (H2SO- வேதிப் பொருள்களின் அரசன்) பல சேர்மங்கள் தயாரிப்பதற்கும் மற்றும் வாகன மின்கலன்களிலும் பயன்படுகிறது.

2) ஹைட்ரோ குளோரிக் அமிலம் (HCl) கழிவறைகளைத் தூய்மைப்படுத்தப் பயன்படுகிறது

3) சிட்ரிக் அமிலம் உணவுப் பொருள்களைப் பதப்படுத்தப் பயன்படுகிறது.

4) கார்பானிக் அமிலம் காற்று அடைக்கப்பட்ட பானங்களில் பயன்படுகிறது.

 

3. விவசாயத்தில் மண்ணின் pH மிக முக்கியமானது. சிட்ரஸ் பழங்கள், அரிசி மற்றும் கரும்பு விளைய தேவைப்படும் மண்ணின் தன்மையை எழுதவும்.

விடை :

சிட்ரஸ் பழங்கள் - காரத் தன்மையுடைய மண்

அரிசி - அமிலத் தன்மையுடைய மண்

கரும்பு - நடுநிலைத் தன்மையுடைய மண்

 

4. அமில மழை எப்பொழுது ஏற்படும்?

விடை :

1. வளிமண்டல வாயுவானது கந்தக மற்றும் நைட்ரஜனின் ஆக்சைடுகளால் மாசு அடையும் பொழுது அவை நீரில் கரைந்து நீரின் pH மதிப்பை 7-க்கும் குறைவாக மாற்றி வருகின்றன.

2. pH மதிப்பு 7 - விட குறையும் போது அது அமிலமழை எனப்படுகிறது.

 

5. பாரிஸ் சாந்தின் பயன்களைக் கூறு.

விடை :

முறிந்த எலும்புகளை ஒட்ட வைப்பதற்குப் பயன்படுகிறது.

சிலைகளுக்கான வார்ப்புகளைச் செய்யப் பயன்படுகிறது.

 

6. A மற்றும் B என இரண்டு அமிலங்கள் உன்னிடம் கொடுக்கப்படுகின்றன. A நீர்க்கரைசலில் ஒரு மூலக்கூறு அமிலத்திற்கு ஒரு ஹைட்ரஜன் அயனியையும், B இரு ஹைட்ரஜன் அயனிகளையும் தருகின்றன.

i) A மற்றும் B ஐக் கண்டுபிடி.

விடை :

i) A. ஹைட்ரோ குளோரிக் அமிலம் (HCI)

B. கந்தக அமிலம் (H2SO4)

ii) வேதிப்பொருள்களின் அரசன் எனப்படுவது எது?

விடை :

ii) கந்தக அமிலம் (H2SO4)

 

7. இராஜ திராவகம் - வரையறு.

விடை :

மூன்று பங்கு அடர் ஹைட்ரோ குளோரிக் அமிலம், ஒரு பங்கு அடர் நைட்ரிக் அமிலம் கலந்த கலவை.

இதன் மோலார் விகிதம் 3:1. இது தங்கம் மற்றும் சில கடின உலோகங்களையும், அதிக அளவில் அரிமானம் செய்யக்கூடிய திறனுடையது.

 

8. தவறைத் திருத்தி எழுதவும்.

) சலவை சோடா, கேக் மற்றும் ரொட்டிகளை மென்மையாக மாற்றுகிறது.

விடை :

) சமையல் சோடா கேக் மற்றும் ரொட்டிகளை மென்மையாக மாற்றுகிறது.

) கால்சியம் சல்பேட் ஹெமிஹைட்ரேட் என்பது துணிகளை வெளுக்கப் பயன்படுகிறது.

விடை :

) கால்சியம் ஆக்லிகுளோரைடு என்பது துணிகளை வெளுக்கப் பயன்படுகிறது.

 

9. நடுநிலையாக்கல் வினை என்றால் என்ன? உதாரணம் கொடு.

விடை :

காரத்திற்கும், அமிலத்திற்கும் இடையே ஏற்படும் வினை நடுநிலையாக்கல் வினை.

.கா. அமிலங்களும், காரங்களும் வினைபுரிந்து உப்பையும், நீரையும் தருகின்றன.

அமிலம் + காரம் à உப்பு + நீர் + வெப்பம்.

உதாரணம்: KOH + HCI – KCl+ H2O

 

III. விரிவாக விடையளி.

1. நீரற்ற மற்றும் நீரேறிய உப்பை விளக்குக.

விடை :


நீர் அற்ற உப்பு :

•  படிக நீர் அற்ற உப்புக்கள் நீரேற்றம் அற்ற உப்புக்கள் எனப்படும்.

இவை துகள்களாகக் காணப்படும்.

.கா. காப்பர் சல்பேட் (CuSO4.)

நீர் மூலக்கூறுகளை இழந்து வெண்மை நிறமாக இருக்கும்.

நீரேறிய உப்புக்கள் :

படிக நீரைக் கொண்ட உப்புக்கள் நீரேற்ற உப்புக்கள் எனப்படும்.

இவை பெற்றுள்ள நீர் மூலக்கூறுகள் வேதிவாய்ப்பாட்டிற்கு பின்

ஒரு புள்ளி வைத்து அதன் அளவு குறிப்பிடப்படும்.

.கா. காப்பர் சல்பேட்டில் ஐந்து நீர் மூலக்கூறுகள் உள்ளன. CuSO4 , 5H2O

நீல நிறமாக இருக்கும்.

 

2. அமிலம் மற்றும் காரம் ஆகியவற்றைக் கண்டறியும் சோதனையை விவரி?

விடை :

) லிட்மஸ் தாளுடன் சோதனை

அமிலம் நீல லிட்மஸ் தாளை சிவப்பாக மாற்றும்

காரம் சிவப்பு லிட்மஸ் தாளை நீலமாக மாற்றும்

) நிறங்காட்டி பினாப்தலீனுடன் சோதனை

அமிலத்தில் பினாப்தலீன் நிறமற்றது.

காரத்தில் இளஞ்சிவப்பு நிறத்தை உருவாக்கும்.


) நிறங்காட்டி மெத்தில் ஆரஞ்சுடன் சோதனை

அமிலத்தில் மெத்தில் ஆரஞ்சு இளஞ்சிவப்பு நிறத்தை உருவாக்கும்.

காரத்தில் மெத்தில் ஆரஞ்சு மஞ்சள் நிறத்தை உருவாக்கும்.


அமில கார நிறங்காட்டி


 

3. காரங்களின் பயன்கள் நான்கினை எழுதுக.

விடை :


காரங்கள்  -  பயன்கள்

i. சோடியம் ஹைட்ராக்சைடு (NaOH)  -  சோப்பு தயாரிக்க பயன்படுகிறது. i ii. கால்சியம் ஹைட்ராக்சைடு (Ca (OH)2)  -  கட்டிடங்களுக்கு சுண்ணாம்பு பூச பயன்படுகிறது.

iii. மெக்னீசியம் ஹைட்ராக்சைடு (Mg (OH)2) - வயிறு கோளாறுக்கு மருந்தாக பயன்படுகிறது.

iv. அமோனியம் ஹைட்ராக்ஸைடு (NH4OH) - துணிகளில் உள்ள எண்ணெய்க் கறைகளை நீக்குவதற்கு பயன்படுகிறது.

 

4. உப்புகளின் பயன்களில் ஏதேனும் ஐந்து எழுது.

விடை :

1) சாதாரண உப்பு (NaCl) :

நம் அன்றாட உணவிலும், உணவைப் பாதுகாப்பதிலும் பயன்படுகிறது.

2) சலவை சோடா (Na2CO3):

இது கடின நீரை மென்னீராக்கப் பயன்படுகிறது.

இது கண்ணாடி, சோப்பு மற்றும் பேப்பர் தொழிற்சாலைகளில் பயன்படுகிறது.

3) சமையல் சோடா (NaHCO3) :

இது ரொட்டிச் சோடா (சமையல் சோடா + டார்டாரிக் அமிலம்) தயாரிக்கப் பயன்படுகிறது.

இது சோடா - அமில தீயணைப்பான்களில் பயன்படுகிறது.

இது கேக் மற்றும் ரொட்டிகளை மென்மையாக மாற்றுகிறது.

இது வயிற்றிலுள்ள அதிகப்படியான அமிலத்தை நடுநிலையாக்குகிறது

4) சலவைத் தூள் (CaOCI2) :

இது கிருமி நாசினியாகப் பயன்படுகிறது.

பருத்தி மற்றும் லினன் துணிகளை வெளுக்கப் பயன்படுகிறது.

5) பாரிஸ் சாந்து (Caso4-1/2H20) :

முறிந்த எலும்புகளை ஒட்ட வைப்பதற்கு பயன்படுகிறது.

சிலைகளுக்கான வார்ப்புகளைச் செய்யப் பயன்படுகிறது.

 

5. சல்பியூரிக் அமிலம் வேதிப்பொருள்களின் அரசன்'' என்றழைக்கப்படுகிறது. ஏன்?

விடை :

பல்வேறு வேதிப்பொருள்கள் தயாரிக்க கந்தக அமிலம் அடிப்படை மூலப் பொருளாகும்.

வலிமை மிக்கது மற்றும் அதிகமாக அரிக்கக்கூடியது.

மருந்துகள் தயாரிப்பு, உரங்கள் தயாரிப்பில் பயன்படுகிறது.

பெட்ரோலியம் வடித்துப் பிரித்தலில், உயர் ஆக்டேன் பெட்ரோல் தயாரிக்கப் பயன்படுகிறது.

குறிப்பாக வாகன மின்கலங்களிலும் பயன்படுகிறது

ஒரு நாட்டின் பொருளாதாரம், அந்த நாட்டில் பயன்படுத்தப்படும் கந்தக அமிலத்தைப் பொருத்ததாகும்.


பிற நூல்கள்

1. Chemistry - Lakhmir Singh & Manjit Kaur

2. Practical Chemistry - Dr. N.K. Verma

 

இணைய வளங்கள்

https:/www.thoughtco.com

Aquaregia Wikipedia

http:/scienceing.com>Chemistry

 

கருத்து வரைபடம்


இணையச்செயல்பாடு 

அமிலங்கள், காரங்கள் மற்றும் உப்புகள்

 படி 1. கீழ்க்காணும் உரலி / விரைவுக் குறியீட்டினைப் பயன்படுத்தி 'Acids and Bases' என்னும் பக்கத்திற்குச் செல்லலாம்.

படி 2. 'pHMeter' என்ற பொத்தானை அழுத்தி, pH மதிப்பிற்கேற்றவாறு பண்புகளை ஆய்வு செய்யலாம்.

படி 3. 'pH paper' என்ற பொத்தானை அழுத்தி, pH தாளின் நிறத்திற்கு ஏற்றவாறு பண்புகளை ஆய்வு -செய்யலாம்.

படி 4. மேலும், கடத்தும் தன்மையைக் கொண்டு, அமிலங்கள் மற்றும் காரங்களின் இயற்கைத் தன்மைகளை அறியலாம்.

உரலி: https://phet.colorado.edu/en/simulation/acid-base-solutions


 

Tags : Acids, Bases and Salts | Chemistry | Science அமிலங்கள், காரங்கள் மற்றும் உப்புகள் | வேதியியல் | அறிவியல்.
9th Science : Chemistry : Acids, Bases and Salts : Answer the following questions Acids, Bases and Salts | Chemistry | Science in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 14 : அமிலங்கள், காரங்கள் மற்றும் உப்புகள் : பின்வரும் கேள்விகளுக்கு விடையளிக்க - அமிலங்கள், காரங்கள் மற்றும் உப்புகள் | வேதியியல் | அறிவியல் : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 14 : அமிலங்கள், காரங்கள் மற்றும் உப்புகள்