அளவைகள் | பருவம் 2 அலகு 4 | 1 ஆம் வகுப்பு கணக்கு - ஒப்பீடுகள் | 1st Maths : Term 2 Unit 4 : Measurements
அலகு 4
அளவைகள்
ஒப்பீடுகள்
கலைச் சொற்கள்
நீளமானது-குட்டையானது,
தடிமனானது - மெல்லியது,
உயரமானது - குட்டையானது,
கனமானது - இலேசானது,
அதிகம் - குறைவு
பயணம் செய்வோம்
படத்தை உற்றுநோக்குக.
ஆசிரியருக்கான குறிப்பு
படத்தை உற்றுநோக்க வைத்து கலைச் சொற்களை அறிமுகப்படுத்தலாம்.
கற்றல்
நீளமானது-குட்டையானது
செய்து பார்
நீளமான காய்கறிக்கு □ வண்ணமும்,
குட்டையான காய்கறிக்கு □ வண்ணமும் தீட்டுக.
நீயும் கணித மேதைதான்
மரத்தின் மீதுள்ள பட்டத்தை எடுப்பதற்கு, அம்மா எந்தக் குச்சியைப் பயன்படுத்துவார்கள்? ஏன்?
கற்றல்
செய்து பார்
தடிமனான புத்தகத்தை (✔) செய்க.
மெல்லிய சக்கரத்தை (✔) செய்க.
முயன்று பார்
தடிமனான மெழுகுவர்த்திக்கு □ வண்ணமும்,
மெல்லிய மெழுகுவர்த்திக்கு □ வண்ணமும் தீட்டுக
எந்த மெழுகுவர்த்தி நீண்ட நேரம் எரியும்? ஏன்?
கற்றல்
உயரமானது - குட்டையானது
செய்து பார்
உயரமான கட்டிடத்திற்கு □ வண்ணமும்,
குட்டையான கட்டிடத்திற்கு□ வண்ணமும் தீட்டுக.
எந்த கட்டிடத்திற்கு அதிக வண்ணம் தேவைப்படும்? ஏன்?
பதில்: உயரமான கட்டிடதிற்கு அதிக வண்ணம் தேவை. உயரமான ஓவியப் பகுதி.
நீயும் கணித மேதைதான்
எந்த ஏணியைப் பயன்படுத்தி அலமாரியிலுள்ள சிவப்பு நிற புத்தகத்தை எடுக்கலாம்? ஏன்?
பதில்: உயரமான ஏணியப் பயன்படுத்தி அலமாரியிலுள்ள சிவப்பு நிற புத்தகத்தை எடுக்கலாம். சிறிய ஏணி சிவப்பு புத்தகத்தை அடையும் அளவுக்கு உயரமாக இல்லை.
கற்றல்
கனமானது – இலேசானது
செய்து பார்
கனமான காய்கறிக்கு □ வண்ணமும்
இலேசான காய்கறிக்கு □ வண்ணமும் தீட்டுக.
இக்கருத்திற்குத் தொடர்புடைய பழங்கள் இரண்டினைக் கூறுக.
பதில்: பலாப்பழம் கனமானது. மாம்பழம் லேசானனது.
நீயும் கணித மேதைதான்
சிறுவன் அமர்ந்துள்ள இடத்தில் சிறுவனுக்குப் பதிலாக அம்மா அமர்ந்தால், என்ன நிகழும்? ஏன்?
பதில்: சிறுவன் மேலே செல்வாள். சிறுவனை விட அம்மா கனமானவள், அதனால் அது சிறுவனைத் தூக்கும்.
கற்றல்
அதிகம் - குறைவு
செய்து பார்
குறைந்த அளவு நீர் கொண்டுள்ள தண்ணீர் பாட்டிலை (✔) செய்க.
அதிக அளவு நீர் கொள்ளும் பாத்திரத்தை (✔) செய்க.
நீயும் கணித மேதைதான்
பாலை முழுவதுமாக ஊற்றுவதற்கு இது சரியான பாத்திரந்தானா? ஏன்?
பதில்: இல்லை, தம்ளர் முழு பாலை வைத்திருக்க முடியாது.
கற்றல்
வரிசைப்படுத்துவோம்
மிக நீளமானதை (✔) செய்க.
செய்து பார்
மிகக் குட்டையானதை (✔) செய்க.
மிக உயரமானதை (✔) செய்க.
ஆசிரியருக்கான குறிப்பு
நீளம், எடை, உயரத்தின் அடிப்படையில் வரிசைப்படுத்தும் திறனை மேலும் பல எடுத்துக்காட்டுகள் தந்து வலுப்படுத்தலாம்.