Home | 4 ஆம் வகுப்பு | 4வது கணிதம் | கொடுக்கப்பட்ட இரண்டு தேதிகளுக்கு இடையே உள்ள நாட்களை கணக்கிட முடியுமா?

காலம் | பருவம் 3 அலகு 4 | 4 ஆம் வகுப்பு கணக்கு - கொடுக்கப்பட்ட இரண்டு தேதிகளுக்கு இடையே உள்ள நாட்களை கணக்கிட முடியுமா? | 4th Maths : Term 3 Unit 4 : Time

   Posted On :  13.10.2023 03:40 am

4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 4 : காலம்

கொடுக்கப்பட்ட இரண்டு தேதிகளுக்கு இடையே உள்ள நாட்களை கணக்கிட முடியுமா?

ஒரு வாரத்தில் 7 நாட்கள் உள்ளன. 1 வது நாள் ஞாயிறு, 2 வது நாள் திங்கள், 3 வது நாள் செவ்வாய், 4 வது நாள் புதன், 5 வது நாள் வியாழன், 6 வது நாள் வெள்ளி மற்றும் 7வது நாள் சனி =7

கொடுக்கப்பட்ட இரண்டு தேதிகளுக்கு இடையே உள்ள நாட்களை கணக்கிட முடியுமா?

ஒரு வாரத்தில் 7 நாட்கள் உள்ளன.

1 வது நாள் ஞாயிறு, 2 வது நாள் திங்கள், 3 வது நாள் செவ்வாய், 4 வது நாள் புதன், 5 வது நாள் வியாழன், 6 வது நாள் வெள்ளி மற்றும் 7வது நாள் சனி =7

இன்று வாரத்தின் 6 வது நாள் எனில், நேற்று மற்றும் நேற்றுக்கு முந்தைய நாள் என்னவாக இருக்கும்? நாளை மற்றும் நாளைக்கு அடுத்த நாள் என்னவாக இருக்கும்?


முந்தைய மற்றும் வரும் வாரத்தின் நாளைக் கண்டுபிடித்தல்

எடுத்துக்காட்டு: 14 வது நாள் என்பது சனிகிழமையைக் குறிக்கிறது. 21 வது நாள் என்பது எந்த நாளைக் குறிக்கும் என யூகிக்க முடிகிறதா?

ஒரு மாதத்தில் மற்றும் வருடத்தில் எத்தனை வாரங்கள் என்று முந்தைய வகுப்பிலேயே கற்றுள்ளீர்கள்.

குறிப்பு: இரண்டு வாரங்கள் கொண்டது ஒரு போர்ட் நைட் (fort night) () இரண்டு வார காலம் ஆகும். அதாவது 14 நாட்கள் கொண்டது ஒரு போர் நைட் ஆகும்.


இரண்டு தேதிகளுக்கிடையேயான நாட்களைக் கணக்கிடுதல்:

இரண்டு தேதிகளுக்கிடையேயான நாட்களைக் கணக்கிட, அவற்றிற்கிடையேயான நாட்களை எண்ணுக. ஒரு வேளை இவற்றிற்கிடையே மாதங்கள் இருந்தால், அவற்றிற்கிடையேயான நாட்களைக் கணக்கிடுக.

குறிப்பு: பொதுவாக ஒரு மாதம் = 4 வாரங்கள்


எடுத்துக்காட்டு

சுதந்திர தினத்திற்கும், காந்தி ஜெயந்தி தினத்திற்கும் இடையே உள்ள நாட்களைக் கணக்கிடுக.

தீர்வு:

சுதந்திரம் தினம் = ஆகஸ்ட்டு 15

காந்தி ஜெயந்தி = அக்டோபர் 2


எனவே, சுதந்திர தினத்திற்கும், காந்தி ஜெயந்திக்கும் இடையே உள்ள நாட்கள் 47 ஆகும்.

குறிப்பு: ஆகஸ்ட் மாதத்தில் 31 நாட்கள் உள்ளன. சுதந்திரதினமானது 15 ஆகஸ்ட் ஆகும். எனவே, 31 இலிருந்து 15 ஐக் கழிக்கவும்.


இவற்றை முயல்க

1. கிறிஸ்துமஸ் மற்றும் குடியரசு தினத்திற்கு இடையே உள்ள நாட்களைக் கணக்கிடுக.


2. பொங்கல் மற்றும் மே தினத்திற்கு இடையே உள்ள நாட்களைக் கணக்கிடுக.


3. ஆசிரியர் தினம் மற்றும் குழந்தைகள் தினத்திற்கு இடையே உள்ள நாட்களைக் கணக்கிடுக.


Tags : Time | Term 3 Chapter 4 | 4th Maths காலம் | பருவம் 3 அலகு 4 | 4 ஆம் வகுப்பு கணக்கு.
4th Maths : Term 3 Unit 4 : Time : Computing the number of days between two given dates Time | Term 3 Chapter 4 | 4th Maths in Tamil : 4th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 4 : காலம் : கொடுக்கப்பட்ட இரண்டு தேதிகளுக்கு இடையே உள்ள நாட்களை கணக்கிட முடியுமா? - காலம் | பருவம் 3 அலகு 4 | 4 ஆம் வகுப்பு கணக்கு : 4 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 4 : காலம்