Home | 4 ஆம் வகுப்பு | 4வது கணிதம் | நாட்காட்டியை பயன்படுத்துதல் (அமைப்புகளுடன் தொடர்புபடுத்தி)

காலம் | பருவம் 3 அலகு 4 | 4 ஆம் வகுப்பு கணக்கு - நாட்காட்டியை பயன்படுத்துதல் (அமைப்புகளுடன் தொடர்புபடுத்தி) | 4th Maths : Term 3 Unit 4 : Time

   Posted On :  13.10.2023 03:43 am

4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 4 : காலம்

நாட்காட்டியை பயன்படுத்துதல் (அமைப்புகளுடன் தொடர்புபடுத்தி)

60 நொடிகள் = 1 நிமிடம் 60 நிமிடங்கள் = 1 மணி நேரம் 1 மணி நேரம் = 60 × 60 = 3600 நொடிகள் 24 மணி நேரம் = 1 நாள்

நாட்காட்டியை பயன்படுத்துதல் (அமைப்புகளுடன் தொடர்புபடுத்தி)

60 நொடிகள் = 1 நிமிடம்

60 நிமிடங்கள் = 1 மணி நேரம்

1 மணி நேரம் = 60 × 60 = 3600 நொடிகள்

24 மணி நேரம் = 1 நாள்

பொதுவாக, 12 மணி நேரமே பயன்படுத்தப்படுகிறது. ஆனால் ரயில்வே, வானூர்தி, ஆயுத படைகள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் 24 மணி நேரமே பயன்படுத்தப்படுகிறது.

தற்பொழுது நாட்காட்டியில் அமைப்புகளைப் பற்றி கற்றுக் கொள்வோம்.


அருகிலுள்ள நாட்காட்டியிலிருந்து 2 × 2 சதுரத்தை எடுத்துக்கொள்க.

பின்வரும் வழியில் எண்களைக் கூட்டுக. எனவே, கூடுதலின் மொத்தம் 18 என கிடைக்கும்.


5 + 13 = 18

12 + 6 = 18

 3 × 3 சதுரத்தின் அமைப்பைப் பார்க்க.

பின்வரும் வழியில் எண்களை கூட்டுக. எனவே, கூடுதலின் மொத்தம் 51 என கிடைக்கும்.


9 +17 +25 = 51

23 +17 +11= 51, 

16 +17 +18 = 51,

10 + 17 + 24 = 51


குறிப்பு:

நாட்காட்டி மூலம் நாம் பல விஷயங்களை கற்றுக் கொள்ள முடியும்.

1. ஒரு நிரையில் எண்கள் ஒன்று ஒன்றாக அதிகரிக்கிறது.

2. ஒரு நிரலில் எண்கள் ஏழு ஏழாக அதிகரிக்கிறது.


செயல்பாடு

(i) ஏதாவது ஒரு மாதத்தைத் தேர்ந்தெடுத்து 3 × 3 சதுரம் மற்றும் 2 × 2 சதுரத்தை முயற்சிக்க.

(ii) சில அமைப்புகளை பின்வரும் மாதங்களில் காணலாம்.

5 6 7 8 9 10 11 என்ற வரிசையைக் கருதுக


நடு எண் 8 ஆகும்.


 5 மற்றும் 11 இன் கூடுதல், நடு எண் 8 இன் இருமடங்காகும் (2×8) = 16

6 மற்றும் 10 இன் கூடுதல், நடு எண் 8 இன் இருமடங்காகும் (2×8) = 16

7 மற்றும் 9 இன் கூடுதல், நடு எண் 8 இன் இருமடங்காகும் (2×8) = 16


இவற்றை முயல்க

1. மேலே உள்ள செயல்பாட்டின் படி வருடத்தின் ஏதேனும் ஒரு மாதத்தை தேர்ந்தெடுத்து செய்து மகிழ்க

விடை:


நடு எண் 11.

8 மற்றும் 14 இன் கூடுதல் நடு எண் 11 இன் இருமடங்காகும் (2×11) = 22

9 மற்றும் 13 இன் கூடுதல் நடு எண் 11 இன் இருமடங்காகும் (2×11) = 22

10 மற்றும் 12 இன் கூடுதல் நடு எண் 11 இன் இருமடங்காகும் (2×11) = 22

Tags : Time | Term 3 Chapter 4 | 4th Maths காலம் | பருவம் 3 அலகு 4 | 4 ஆம் வகுப்பு கணக்கு.
4th Maths : Term 3 Unit 4 : Time : Use calendar (interlinking with patterns) Time | Term 3 Chapter 4 | 4th Maths in Tamil : 4th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 4 : காலம் : நாட்காட்டியை பயன்படுத்துதல் (அமைப்புகளுடன் தொடர்புபடுத்தி) - காலம் | பருவம் 3 அலகு 4 | 4 ஆம் வகுப்பு கணக்கு : 4 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 4 : காலம்