Home | 9 ஆம் வகுப்பு | 9வது அறிவியல் | மின்சுற்றுப் படம்
   Posted On :  12.09.2023 09:32 am

9 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 4 : மின்னூட்டமும் மின்னோட்டமும்

மின்சுற்றுப் படம்

மின் கம்பியிணைப்பைக் குறிக்கவும் மின்சுற்றுகள் தொடர்பான கணக்குகளைத் தீர்க்க வும், மின்சுற்றுப் படங்கள் (படம் 4.10) வரையப்படுகின்றன.

மின்சுற்றுப் படம்

மின் கம்பியிணைப்பைக் குறிக்கவும் மின்சுற்றுகள் தொடர்பான கணக்குகளைத் தீர்க்கவும், மின்சுற்றுப் படங்கள் (படம் 4.10) வரையப்படுகின்றன.


ஒரு மின்சுற்றுப் படத்தின் நான்கு முக்கியக் கூறுகளாவன: i) மின்கலம், ii) இணைப்புக் கம்பி, iii) சாவி, iv) மின்தடை அல்லது மின்பளு. இதைத் தவிர, பிற மின் கருவிகளும் ஒரு மின் சுற்றில் பயன்படுத்தப்படலாம். அவற்றைக் குறிப்பதற்கு சீரான குறியீட்டு முறை உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு குறியீட்டு மொழியைக் கற்பது போல் இதையும் கற்றால், மின்சுற்றுப் படங்களைப் புரிந்து கொள்வது எளிது. மின்சுற்றுகளில் பொதுவாக பயன்படுத்தப்படும் குறியீடுகள் சில அட்டவணை 4.1-ல் கொடுக்கப்பட்டுள்ளன:


செயல்பாடு 1

கழிக்கப்பட்ட பழைய டிவி தொலையுணர்வி (TV Remote) அல்லது பழைய கைபேசியின் மின்னணு அட்டையை எடுத்துக்கொள்ளவும். அதில் பயன்படுத்தப்பட்டுள்ள குறியீடுகளைப் பார்க்கவும். அவற்றுக்கு என்ன பொருள் என்பதைக் கண்டறியவும்.

 

1. பல்வேறு மின்சுற்றுகள்

படம் 4.11-ல் கொடுக்கப்பட்டுள்ள இரு மின்சுற்றுகளையும் பார்க்கவும். படம் -ல் இரு மின் விளக்குகள் தொடரிணைப்பிலும் படம் -ல் அவை பக்க இணைப்பிலும் இணைக்கப்பட்டுள்ளன. அவற்றைப் பற்றி தனித்தனியாகக் காண்போம்.


தொடர் இணைப்புகள்

தொடரிணைப்பில் பாயும் மின்னோட்டத்தை முதலில் பார்ப்போம். இவ்வகை இணைப்பில் ஒவ்வொரு கருவியும் (அல்லது மின்தடையும்) ஒன்றையடுத்து ஒன்றாக ஒரே தடத்தில் இணைக்கப்படுகின்றன. தொடரிணைப்பில் மின்னூட்டம் பாய்வதற்கு ஒரேயொரு பாதை மட்டுமே உள்ளது. தொடரிணைப்பில் செல்லும் மின்னோட்டம் (I) மாறாமல் இருக்கும் என்பதை இதிலிருந்து நாம் அறியலாம். அதாவது தொடரிணைப்பிலுள்ள மின்சுற்றில் அனைத்துப் புள்ளிகளிலும் ஒரேயளவு மின்னோட்டம் பாய்கிறது.

பக்க இணைப்புச் சுற்றுகள்

பக்க இணைப்புச் சுற்றுகளில் ஒரே மின்னியக்குவிசை மூலத்துடன் வெவ்வேறு கருவிகள், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தடங்களில் இணைக்கப்படுகின்றன. இத்தகைய சுற்றில் மின்னூட்டம் பாய்வதற்கு ஒன்றுக்கு மேற்பட்ட பாதைகள் உள்ளன.பக்க இணைப்புகளில் ஒவ்வொரு தனித்தனி மின்னோட்டத்தின் கூட்டுத்தொகையானது இணைப்பை நோக்கி வரும் (அல்லது) இணைப்பை விட்டு வெளியேறும் முதன்மை மின்னோட்டத்திற்குச் சமம். மேலும், பக்க இணைப்புச் சுற்றுகளில், ஒவ்வொரு கிளைகளிலும் காணப்படும் மின்னழுத்த வேறுபாடு சமமாகும். 

9th Science : Electric charge and electric current : Electric circuit diagram in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 4 : மின்னூட்டமும் மின்னோட்டமும் : மின்சுற்றுப் படம் - : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 4 : மின்னூட்டமும் மின்னோட்டமும்