Home | 12 ஆம் வகுப்பு | 12வது இயற்பியல் | மின்காந்த அலைகள்: கணக்குகள்

இயற்பியல் - மின்காந்த அலைகள்: கணக்குகள் | 12th Physics : UNIT 5 : Electromagnetic Waves

   Posted On :  27.11.2023 10:13 pm

12 வது இயற்பியல் : அலகு 5 : மின்காந்த அலைகள்

மின்காந்த அலைகள்: கணக்குகள்

12 வது இயற்பியல் : அலகு 5 : மின்காந்த அலைகள் : கணக்குகள்,பல்வேறு வினாக்களுக்கான கேள்வி பதில்கள் மற்றும் தீர்வுகள்

IV கணக்குகள் 


1. இலேசான பிரித்து வைக்கப்பட்டுள்ள இணைத்தட்டு மின்தேக்கி ஒன்றைக் கருதுக. தகடுகளின் ஆரம் R எனவும் இரண்டு தகடுகளையும் இணைக்கும் கடத்தியின் வழியே பாயும் மின்னோட்டம் 5A எனவும் கொண்டு, தகடுகளின் வழியே ஓரலகு நேரத்தில் மாற்றமடையும் மின்புலபாயத்தை நேரடியாகக் கணக்கிட்டு, அதன்மூலம் இணைத்தட்டு மின்தேக்கியின் தகடுகளுக்கு நடுவே உள்ள சிறிய இடைவெளியில் தகடுகளின் வழியே பாயும் இடப்பெயர்ச்சி மின்னோட்டத்தைக் கணக்கிடுக


விடை: Id = Ic = 5A 


2. பரப்பி ஒன்றின் LC சுற்றில் உள்ள மின்தூண்டியின் மதிப்பு 1 μH மற்றும் மின்தேக்கியின் மதிப்பு 1 μF என்க. இப்பரப்பியில் தோற்றுவிக்கப்படும் மின்காந்த அலையின் அலைநீளம் என்ன?


= 3 × 108 × 6.28 × 10−6 = 18.84 × 102 m

விடை : 18.84 × 102 m 


3. 10−6s நேர அளவு கொண்ட ஒளித்துடிப்பு ஒன்று தொடக்கத்தில் ஓய்வு நிலையில் உள்ள சிறிய பொருளினால் முழுவதும் உட்கவரப்படுகிறது. ஒளித்துடிப்பின் திறன் 60 × 10−3 W எனில், அச்சிறிய பொருளின் இறுதி உந்தத்தைக் கணக்கிடு


விடை : 20 × 10−17 kg ms−1


4. x அச்சுத்திசையில் பரவும் மின்காந்த அலை ஒன்றைக் கருதுக. y அச்சுத்திசையில் செயல்படும் காந்தப்புலத்தின் அலைவுகளின் அதிர்வெண் 1010 Hz மற்றும் அதன் வீச்சு 10−5 T எனில், மின்காந்த அலையின் அலைநீளத்தைக் கணக்கிடு. மேலும் இந்நிகழ்வில் தோன்றும் மின்புலத்தின் சமன்பாட்டினையும் எழுதுக.

மின்காந்த அலையின் திசைவேகம் வெற்றிடத்தில்

C = Eo/Bo

Eo = C × Bo = 3 × 108 × 10−5

= 3 × 103 NC−1

அலைநீளம் = C / f = (3 × 108) / 1010 = 3 × 10−2 m

மின்புலச் சமன்பாடு Ez = Eo sin (kz − ɷt)

 k = 2π / λ = 2π / (3 × 10−2) = 0.66 π × 102 

 k = 66π = 2.09 × 102

கோண அதிர்வெண் ɷ = 2 π f = 2 π × 1010 rad s−1

விடை :



5. ஊடகம் ஒன்றின் ஒப்புமை உட்புகுதிறன் மற்றும் ஒப்புமை விடுதிறன்கள் முறையே 1.0 மற்றும் 2.25 எனில், அவ்ஊடகத்தின் வழியே பரவும் மின்காந்த அலையின் வேகத்தைக் காண்க.


விடை : v = 2 × 108 m s−1

Tags : Physics இயற்பியல்.
12th Physics : UNIT 5 : Electromagnetic Waves : Electromagnetic Waves: Exercises and Example Solved Numerical problems Physics in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 வது இயற்பியல் : அலகு 5 : மின்காந்த அலைகள் : மின்காந்த அலைகள்: கணக்குகள் - இயற்பியல் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 வது இயற்பியல் : அலகு 5 : மின்காந்த அலைகள்