Home | 12 ஆம் வகுப்பு | 12வது இயற்பியல் | மின்காந்த அலைகள்: பாடச்சுருக்கம்

இயற்பியல் - மின்காந்த அலைகள்: பாடச்சுருக்கம் | 12th Physics : UNIT 5 : Electromagnetic Waves

   Posted On :  16.10.2022 08:35 pm

12 வது இயற்பியல் : அலகு 5 : மின்காந்த அலைகள்

மின்காந்த அலைகள்: பாடச்சுருக்கம்

நேரத்தைப் பொறுத்து எங்கெல்லாம் மின்புலமும், மின்புலபாயமும் மாற்றமடைகிறதோ அங்கெல்லாம் இடம்பெறுகின்ற மின்னோட்டமே இடப்பெயர்ச்சி மின்னோட்டமாகும்.

பாடச்சுருக்கம்

• நேரத்தைப் பொறுத்து எங்கெல்லாம் மின்புலமும், மின்புலபாயமும் மாற்றமடைகிறதோ அங்கெல்லாம் இடம்பெறுகின்ற மின்னோட்டமே இடப்பெயர்ச்சி மின்னோட்டமாகும்.

• மேக்ஸ்வெல்லினால் சீரமைக்கப்பட்ட ஆம்பியரின் விதி

 

• முடுக்கப்பட்ட மின் துகள்கள் மின்புலம் மற்றும் காந்தப்புலங்களுடன் இணைந்த மின்காந்த அலைகளை வெளியில் கதிர்வீசுகின்றன. மின்புலம் மற்றும் காந்தப்புலம் இரண்டும் ஒன்றுக்கொன்று செங்குத்தாகவும் மேலும், மின்காந்த அலை பரவும் திசைக்கு செங்குத்தாகவும் அலைவுறுகின்றன.

• மின்காந்த அலைகள் குறுக்கலைகளாகும். அவை இயந்திர அலைகள் அல்ல. எனவே அவை பரவுவதற்கு எவ்விதமான ஊடகமும் அவசியமில்லை.

• மின்காந்த அலையின் மின்புலம் மற்றும் காந்தப்புல வெக்டர்களின் எண்மதிப்பு பின்வருமாறு தொடர்புபடுத்தப்பட்டுள்ளது, c = E/B.

• மின்காந்த அலைகள் குறுக்கீட்டு விளைவு, விளிம்பு விளைவு மேலும் தளவிளைவையும் அடைகின்றன.

• மின்காந்த அலைகளானது ஆற்றல் மற்றும் உந்தத்தை மட்டுமல்லாமல் கோண உந்தத்தையும் சுமந்து செல்கிறது.

• வெளியிடு நிறமாலை மற்றும் உட்கவர் நிறமாலை என்று நிறமாலையை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம்.

• தானாக ஒளிரும் ஒளி மூலத்திலிருந்து வெளியிடு நிறமாலையைப் பெறலாம். ஒவ்வொரு ஒளி மூலமும் அவற்றின் தனித்துவமான வெளியிடு நிறமாலையைப் பெற்றுள்ளன. வெளியிடு நிறமாலையை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். தொடர், வரி மற்றும் பட்டை நிறமாலைகள்.

• சூரியனிடமிருந்து கிடைக்கும் நிறமாலையை பகுத்து ஆராயும் போது, அதில் அதிக எண்ணிக்கையில் கருங்கோடுகள் (வரி உட்கவர் நிறமாலை) காணப்படும். சூரிய நிறமாலையில் காணப்படும் இக்கருங்கோடுகளுக்கு ஃபிரனாஃபர் வரிகள் என்று பெயர்.



Tags : Physics இயற்பியல்.
12th Physics : UNIT 5 : Electromagnetic Waves : Electromagnetic Waves: Summary Physics in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 வது இயற்பியல் : அலகு 5 : மின்காந்த அலைகள் : மின்காந்த அலைகள்: பாடச்சுருக்கம் - இயற்பியல் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 வது இயற்பியல் : அலகு 5 : மின்காந்த அலைகள்