Home | 11 ஆம் வகுப்பு | 11வது வேதியியல் | பாஸ்பரஸை அளந்தறிதல்

செய்முறை, கணக்கீடு, எடுத்துக்காட்டு - பாஸ்பரஸை அளந்தறிதல் | 11th Chemistry : UNIT 11 : Fundamentals of Organic Chemistry

   Posted On :  02.01.2024 09:34 am

11 வது வேதியியல் : அலகு 11 : கரிம வேதியியலின் அடிப்படைகள்

பாஸ்பரஸை அளந்தறிதல்

பாஸ்பரஸ் உள்ள எடை தெரிந்த கரிமச்சேர்மம் புகையும் HNO3 உடன் சீல் வைக்கப்பட்ட குழாயில் வெப்பப்படுத்தப்படுகிறது.

பாஸ்பரஸை அளந்தறிதல்

பாஸ்பரஸ் உள்ள எடை தெரிந்த கரிமச்சேர்மம் புகையும் HNO3 உடன் சீல் வைக்கப்பட்ட குழாயில் வெப்பப்படுத்தப்படுகிறது. C, ஆனது CO2 ஆகவும் H ஆனது H2 O ஆகவும் மாற்றப்படுகிறது. கரிமச்சேர்மத்திலுள்ள பாஸ்பரஸ், பாஸ்பாரிக் அமிலமாக ஆக்ஸிஜனேற்றமடைகிறது. இதனை அடர் HNO3 உடன் வெப்பப்படுத்தி, அம்மோனியம் மாலிப்டேட்டை சேர்க்கும்போது அம்மோனியம் பாஸ்போ மாலிப்டேட் வீழ்படிவு உருவாகிறது.


வீழ்படிவான அம்மோனியம் பாஸ்போமாலிப்டேட் வடிகட்டப்பட்டு  கழுவப்பட்டு, உலர்த்தி எடையறியப்படுகிறது

மற்றொரு முறையில், பாஸ்பாரிக் அமிலம் மெக்னீசியா கலவையால் மெக்னீசியம் அம்மோனியம் பாஸ்பேட்டாக மாற்றப்படுகிறது. (மெக்னீசியா கலவையில் MgCl2, NH4Cl மற்றும் அம்மோனியா உள்ளது). இவ்வீழ்படிவு கழுவப்பட்டு, உலர்த்தப்பட்டு, எரிக்கப்பட்டு மெக்னீசியம் பைரோ பாஸ்பேட்டாக மாற்றப்படுகிறது. வீழ்படிவு கழுவப்பட்டு, உலர்த்தப்பட்டு எடை அறியப்படுகிறது.

கரிம சேர்மத்தின் எடை, அம்மோனியம் பாஸ்போமாலிப்டேட் () மெக்னீசியம் பைரோ பாஸ்போட்டின் எடை ஆகியவற்றிலிருந்து, P ன் % கணக்கிடப்படுகிறது.

கரிம சேர்மத்தின் எடை = wg

அம்மோனியம் பாஸ்போ மாலிப்டேட்டின் எடை = x g

மெக்னீசியம் பைரோ பாஸ்பேட்டின் எடை = y g

(NH4)3 PO4 .12MoO3 ன் மூலக்கூறு எடை = 1877 g

[3 × (14 + 4) + 31 + 4(16)] + 12 (96 + 3×16)

Mg2P2O7 ன் மூலக்கூறு எடை = 222g

(2 × 24) + (31 × 2) + (7 × 16)

1877g (NH4)3 PO4.l2MoO3 ல் உள்ள Pன் எடை = 31 g

w g கரிம சேர்மத்திலிருந்து பெறப்பட்ட x g ((NH4)3 PO4.12MoO3 ல் (31/1877 × x/w)g பாஸ்பரஸ் உள்ளது.

w g கரிம சேர்மத்திலுள்ள Pன் சதவீதம் = 31/1877 × x/w × 100%

(அல்லது)

222 Mg2P2O7 ல் உள்ள Pன் எடை = 62g

yg Mg2P2O7 ல் உள்ள Pன் எடை = 62/222 × y

Pன் சதவீதம் = 62/222 × y/w × 100%


எடுத்துக்காட்டு 4: 0.24 g எடையுள்ள பாஸ்பரஸை கொண்டுள்ள கரிமச் சேர்மம் 0.66g Mg2P2O7 யை தந்தது. இச்சேர்மத்தில் உள்ள பாஸ்பரஸின் சதவீதத்தினை கணக்கிடுக

கரிம சேர்மத்தின் எடை = 0.24 g

Mg2P2O7 ன் எடை = 0.66 g

222g Mg2P2O7 ல் 62 g P உள்ளது 

0.66gல் (62/222 × 0.66) g P உள்ளது

w g கரிமச் சேர்மத்திலுள்ள P ன் சதவீதம் = 62/222 × 0.66/0.24 × 100% = 76.80%

Tags : Equation, Procedure, Calculation, Example செய்முறை, கணக்கீடு, எடுத்துக்காட்டு.
11th Chemistry : UNIT 11 : Fundamentals of Organic Chemistry : Estimation of phosphorus Equation, Procedure, Calculation, Example in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது வேதியியல் : அலகு 11 : கரிம வேதியியலின் அடிப்படைகள் : பாஸ்பரஸை அளந்தறிதல் - செய்முறை, கணக்கீடு, எடுத்துக்காட்டு : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது வேதியியல் : அலகு 11 : கரிம வேதியியலின் அடிப்படைகள்