அரோமேட்டிக் சேர்மங்களுக்குப் பெயரிடுதல்
அரோமேட்டிக் சேர்மமானது உட்கரு மற்றும் பக்கச் சங்கிலி ஆகிய இரு பகுதிகளை உள்ளடக்கியது.
(A) உட்கரு: அரோமேட்டிக் சேர்மத்தில் காணப்படும் பென்சீன் வளையம் உட்கரு எனப்படுகிறது.
இது பின்வருமாறு குறிப்பிடப்படுகிறது.
(B) பக்கச் சங்கிலி: பென்சீன் வளையத்தில் உள்ள ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஹைட்ரஜன் அணுக்களை பதிலீடு செய்து, பென்சீன் உட்கருவுடன் நேரடியாக இணைந்துள்ள ஆல்கைல் அல்லது மற்ற அலிபாட்டிக் தொகுதிகள் பக்க சங்கிலிகள் என அழைக்கப்படுகின்றன.
பென்சீன் வளையத்திலுள்ள ஒன்று, இரண்டு அல்லது மூன்று ஹைட்ரஜன் அணுக்கள் முறையே பிற தொகுதிகளால் பதிலீடு செய்யப்பட்டிருப்பின் அவைகள் முறையே மோனோ, டை மற்றும் ட்ரை பதிலீடு செய்யப்பட்ட பெறுதிகள் என அழைக்கப்படுகின்றன.
எடுத்துக்காட்டு:
பென்சீனில் உள்ள ஒன்றிற்கும் மேற்பட்ட ஹைட்ரஜன் அணுக்கள் பிற அணுக்கள் அல்லது தொகுதிகளால் பதிலீடு செய்யப்படும் போது, அத்தொகுதிகளின் இட அமைவானது 1,2,3,.... போன்ற எண்ணுருக்களால் குறிப்பிடப்படுகின்றன. இரு பதிலீடு செய்யப்பட்ட பென்சீன்களில், தொடர்புடைய தொகுதிகளின் இட அமைவானது பின்வருமாறும் குறிப்பிடப்படுகின்றது.
ஆர்த்தோ-அருகருகில்:- O-என்ற எழுத்தால் குறிப்பிடப்படுகின்றது.
மெட்டா-ஒன்றுவிட்டு ஒன்று : -m-என்ற எழுத்தால் குறிப்பிடப்படுகின்றது.
பாரா-நேரெதிர்: -p-என்ற எழுத்தால் குறிப்பிடப்படுகின்றது.
அரோமேட்டிக் சேர்மங்கள் பொதுவாக இரு வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன.
1. உட்கருவில் பதிலீடு செய்யப்பட்ட அரோமேட்டிக் சேர்மங்கள்: இத்தகைய சேர்மங்களில் வினைசெயல் தொகுதியானது பென்சீன் வளையத்துடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளன. இவைகள் பென்சீனின் பெறுதிகளாக பெயரிடப்படுகின்றன.
2. பக்க சங்கிலியில் பதிலீடு செய்யப்பட்ட சேர்மங்கள்: இத்தகைய சேர்மங்களில் வினைசெயல் தொகுதியானது பென்சீன் வளையத்துடன் இணைக்கப்பட்ட பக்க சங்கிலியில் இடம் பெற்றிருக்கும். இவைகள் தொடர்புடைய அலிபாட்டிக் சேர்மங்களின் பீனைல் பெறுதிகளாகப் பெயரிடப்படுகின்றன.
அரைல் தொகுதிகள்
பக்கச் சங்கிலி மற்றும் பென்சீன் வளையம் ஆகியவற்றிலிருந்து மூல ஹைட்ரோ கார்பனை தெரிவு செய்தல் என்பது ஏறத்தாழ அலிசைக்ளிக் சேர்மங்களுக்கு பின்பற்றிய விதிகளின் அடிப்படையிலானது.
அட்டவைண11.3.1.2: சில சேர்மங்களுக்கான IUPAC பெயர்கள்