Home | 9 ஆம் வகுப்பு | 9வது கணிதம் | பயிற்சி 9.3: பலவுள் தெரிவு வினாக்கள்

எண்ணியல் கணக்குகள் பதில்கள் மற்றும் தீர்வுகள் | நிகழ்தகவு | கணக்கு - பயிற்சி 9.3: பலவுள் தெரிவு வினாக்கள் | 9th Maths : UNIT 9 : Probability

   Posted On :  23.09.2023 11:04 am

9 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 9 : நிகழ்தகவு

பயிற்சி 9.3: பலவுள் தெரிவு வினாக்கள்

9 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 9 : நிகழ்தகவு : புத்தக வினாக்கள், பயிற்சிகள், எடுத்துகாட்டு எண்ணியல் கணக்குகளுடன் பதில்கள் மற்றும் தீர்வுகள் : பயிற்சி 9.3: பலவுள் தெரிவு வினாக்கள்

பயிற்சி 9.3

 

பலவுள் தெரிவு வினாக்கள்

 

1. 0−க்கும் மற்றும் 1−க்கும் இடைப்பட்ட ஓர் எண்ணைக் கொண்டு உறுதியற்றவற்றை அளவிடுவது எவ்வாறு அழைக்கப்படுகிறது?

(1) சமவாய்ப்பு மாறி

(2) முயற்சி

(3) எளிய நிகழ்ச்சி

(4) நிகழ்தகவு

விடை: (4) நிகழ்தகவு

 

2. நிகழ்தகவு மதிப்பின் இடைவெளி

(1)  −1 மற்றும் +1

(2) 0 மற்றும் 1

(3) 0 மற்றும் n

(4) 0 மற்றும்

விடை: (2) 0 மற்றும் 1

 

3. ஒப்பீட்டு நிகழ்வெண் கருத்தை அடிப்படையாகக்கொண்ட நிகழ்தகவு எவ்வாறு அழைக்கப்படுகிறது?

(1) பட்டறி நிகழ்தகவு

(2) தொன்மை நிகழ்தகவு

(3) (1) மற்றும் (2) இரண்டும்

(4) (1)வும் அல்ல (2) வும் அல்ல

விடை: (1) பட்டறி நிகழ்தகவு

 

4. ஒரு நிகழ்ச்சியின் நிகழ்தகவு எவ்வாறு இருக்க முடியாது?

(1) பூச்சியத்திற்குச் சமம்

(2) பூச்சியத்தை விடப் பெரியது

(3) 1இக்குச் சமம்

(4) பூச்சியத்தை விடச் சிறியது

விடை: (4) பூச்சியத்தை விடச் சிறியது

 

5. ஒரு சமவாய்ப்புச் சோதனையில் வாய்ப்புள்ள அனைத்து விளைவுகளின் நிகழ்தகவு எப்பொழுதும் ............. இக்குச் சமம்

(1) ஒன்று

(2) பூச்சியம்

(3) முடிவிலி

(4) ஒன்றை விடக் குறைவு

விடை: (1) ஒன்று

 

6. A என்பது Sன் ஏதேனும் ஒரு நிகழ்ச்சி மற்றும் A~ என்பது A -ன் நிரப்பு நிகழ்ச்சி எனில் P(A') இன் மதிப்பு

(1) 1

(2) 0

(3) 1 −A

(4) 1 −P(A)

விடை: (4) 1 −P(A)

 

7. பின்வருவனவற்றுள் எது ஒரு நிகழ்ச்சியின் நிகழ்தகவாக இருக்க முடியாது?

(1) 0

(2) 0.5

(3) 1

(4)  −1

விடை: (4)  −1

 

8. ஒரு சோதனையின் குறிப்பிட்ட முடிவு எவ்வாறு அழைக்கப்படுகிறது?

(1) முயற்சி

(2) எளிய நிகழ்ச்சி

(3) கூட்டு நிகழ்ச்சி

(4) விளைவு

விடை: (4) விளைவு

 

9. ஒரு சோதனையின் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட விளைவுகளின் தொகுப்பு ............ என அழைக்கப்படுகிறது.

(1) நிகழ்ச்சி

(2) விளைவு

(3) கூறுபுள்ளி

(4) மேற்கண்ட எதுவுமில்லை

விடை: (1) நிகழ்ச்சி

 

10. ஒரு பகடையானது ....... இருக்கும்போது, அதன் ஆறு முகங்களும் சமவாய்ப்புடையவை என அழைக்கப்படுகிறது.

(1) சிறியதாக

(2) சீரானதாக

(3) ஆறு முகம் கொண்டதாக

(4) வட்டமாக

விடை: (2) சீரானதாக

Tags : Numerical Problems with Answers, Solution | Probability | Maths எண்ணியல் கணக்குகள் பதில்கள் மற்றும் தீர்வுகள் | நிகழ்தகவு | கணக்கு.
9th Maths : UNIT 9 : Probability : Exercise 9.3: Multiple choice questions Numerical Problems with Answers, Solution | Probability | Maths in Tamil : 9th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 9 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 9 : நிகழ்தகவு : பயிற்சி 9.3: பலவுள் தெரிவு வினாக்கள் - எண்ணியல் கணக்குகள் பதில்கள் மற்றும் தீர்வுகள் | நிகழ்தகவு | கணக்கு : 9 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
9 ஆம் வகுப்பு கணக்கு : அலகு 9 : நிகழ்தகவு