Home | 11 ஆம் வகுப்பு | 11வது வேதியியல் | கரிமச் சேர்மங்களுக்கு பெயரிடுதலுக்கான IUPAC விதிமுறைகள்
   Posted On :  01.01.2024 11:54 am

11 வது வேதியியல் : அலகு 11 : கரிம வேதியியலின் அடிப்படைகள்

கரிமச் சேர்மங்களுக்கு பெயரிடுதலுக்கான IUPAC விதிமுறைகள்

IUPAC விதிமுறைகளைப் பின்பற்றி கரிமச் சேர்மங்களை பெயரிடுவதற்கு பின்வரும் படிநிலைகளைப் பின்பற்ற வேண்டும்.

கரிமச் சேர்மங்களுக்கு பெயரிடுதலுக்கான IUPAC விதிமுறைகள்

IUPAC விதிமுறைகளைப் பின்பற்றி கரிமச் சேர்மங்களை பெயரிடுவதற்கு பின்வரும் படிநிலைகளைப் பின்பற்ற வேண்டும்.

1. நீண்ட கார்பன் தொடரை தெரிவு செய்ய வேண்டும் (மூல வார்த்தை) இச் சங்கிலியுடன் இணைக்கப்பட்டிருக்கும் பிற அனைத்துத் தொகுதிகளையும் பதிலிகளாகக் கருத வேண்டும்.

2. நீண்ட கார்பன் சங்கிலிக்கு எண் இட வேண்டும்.

3. பதிலிகள் பெயரிடுதல் (முன்னொட்டு /பின்னொட்டு)

4. வினைச் செயல் தொகுதிகளுக்கு பெயரிடுதல்.

5. பதிலிகளை ஆங்கில அகர வரிசையில் அமைத்தல்.

கரிமச் சேர்மத்தின் பெயரை பின் வருமாறு எழுத வேண்டும்.

முன்னொட்டு + மூலவார்த்தை + முதன்மை பின்னொட்டு + இரண்டாம் நிலை பின்னொட்டு




கரிமச் சேர்மங்களுக்கான IUPAC பெயரினை எழுதுவதற்கான வழிமுறைகள்

1. IUPAC பெயரானது எப்போதும் ஒரே வார்த்தையில் எழுதப்பட வேண்டும். கரிம அமிலங்களின் உப்புகள், அமிலங்கள் மற்றும் அமிலப்பெறுதிகள் இதற்கு விதிவிலக்கானவை.

2. இரு அடுத்தடுத்த எண்கள் அல்லது எழுத்துக் குறியீடுகளுக்கு இடையே காற்புள்ளி (,) இடப்படவேண்டும். எண் மற்றும் எழுத்துக்குறியீட்டினை பிரித்துக்காட்ட இடைக்கோடு (hypen) இடப்படவேண்டும்.

எடுத்துக்காட்டு: 2, 2-டை மெத்தில் - 3-ஹெக்ஸீன், N, N- டை மெத்தில் மெத்தனமைடு

3. மீசோ (meso), சிஸ் (cis), டிரான்ஸ் (trans) போன்ற வடிவமைப்பைக் குறிக்கும் முன்னொட்டுகள் சாய்வெழுத்தில் எழுதப்பட வேண்டும் மேலும் இவைகளை பெயருடன் இடைகோட்டின் மூலம் இணைக்கவேண்டும். ஒரு வார்த்தையில் முதல் எழுத்து பெரிய எழுத்தில் எழுத வேண்டும் என்பதற்கும், ஆங்கில அகர வரிசைப்படி வரிசைப்படுத்தும் போதும் இத்தகைய முன்னொட்டுகளை கருத்திற்கொள்ள கூடாது.

எடுத்துக்காட்டு: டிரான்ஸ் - 2-பியூட்டீன்

4. டை (di), ட்ரை (tri), டெட்ரா (tetra) போன்ற முன்னொட்டுகளை எழுதும் போது அவற்றை பெயரின் ஒரு பகுதியாகக் கருதவேண்டும். எனவே சாய்வெழுத்தாக எழுதவோ அல்லது இடைகோடிடவோ கூடாது. ஆங்கில அகர வரிசைப்படி வரிசைப்படுத்தும் போது இத்தகைய முன்னொட்டுகளை கருத்திற்கொள்ள கூடாது. எடுத்துக்காட்டு: 4- எத்தில் -2, 2-டைமெத்தில் ஹெக்ஸேன். 4- Ethyl-2, 2-dimethylhexane

இதில் எத்தில், மெத்தில் ஆகியவற்றை மட்டுமே கருத்திற் கொள்ள வேண்டும், diஐகருத்திற்கொள்ளக் கூடாது.

5. அலிசைக்ளினிக் சேர்மங்களுக்கு பெயரிடும் போது, பின்வரும் கூடுதல் விதிகளையும் பின்பற்ற வேண்டும்.

அட்டவணை 11.6 – அலிசைக்ளிக் சேர்மங்களுக்கு பெயரிடுதலுக்கான விதிகள்




அரோமேட்டிக் சேர்மங்களுக்குப் பெயரிடுதல்

அரோமேட்டிக் சேர்மமானது உட்கரு மற்றும் பக்கச் சங்கிலி ஆகிய இரு பகுதிகளை உள்ளடக்கியது.

(A) உட்கரு: அரோமேட்டிக் சேர்மத்தில் காணப்படும் பென்சீன் வளையம் உட்கரு எனப்படுகிறது.

இது பின்வருமாறு குறிப்பிடப்படுகிறது.


(B) பக்கச் சங்கிலி: பென்சீன் வளையத்தில் உள்ள ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஹைட்ரஜன் அணுக்களை பதிலீடு செய்து, பென்சீன் உட்கருவுடன் நேரடியாக இணைந்துள்ள ஆல்கைல் அல்லது மற்ற அலிபாட்டிக் தொகுதிகள் பக்க சங்கிலிகள் என அழைக்கப்படுகின்றன.


பென்சீன் வளையத்திலுள்ள ஒன்று, இரண்டு அல்லது மூன்று ஹைட்ரஜன் அணுக்கள் முறையே பிற தொகுதிகளால் பதிலீடு செய்யப்பட்டிருப்பின் அவைகள் முறையே மோனோ, டை மற்றும் ட்ரை பதிலீடு செய்யப்பட்ட பெறுதிகள் என அழைக்கப்படுகின்றன.

எடுத்துக்காட்டு:


பென்சீனில் உள்ள ஒன்றிற்கும் மேற்பட்ட ஹைட்ரஜன் அணுக்கள் பிற அணுக்கள் அல்லது தொகுதிகளால் பதிலீடு செய்யப்படும் போது, அத்தொகுதிகளின் இட அமைவானது 1,2,3,.... போன்ற எண்ணுருக்களால் குறிப்பிடப்படுகின்றன. இரு பதிலீடு செய்யப்பட்ட பென்சீன்களில், தொடர்புடைய தொகுதிகளின் இட அமைவானது பின்வருமாறும் குறிப்பிடப்படுகின்றது.

ஆர்த்தோ-அருகருகில்:- O-என்ற எழுத்தால் குறிப்பிடப்படுகின்றது.

மெட்டா-ஒன்றுவிட்டு ஒன்று : -m-என்ற எழுத்தால் குறிப்பிடப்படுகின்றது.

பாரா-நேரெதிர்: -p-என்ற எழுத்தால் குறிப்பிடப்படுகின்றது.

அரோமேட்டிக் சேர்மங்கள் பொதுவாக இரு வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன

1. உட்கருவில் பதிலீடு செய்யப்பட்ட அரோமேட்டிக் சேர்மங்கள்: இத்தகைய சேர்மங்களில் வினைசெயல் தொகுதியானது பென்சீன் வளையத்துடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளன. இவைகள் பென்சீனின் பெறுதிகளாக பெயரிடப்படுகின்றன



2. பக்க சங்கிலியில் பதிலீடு செய்யப்பட்ட சேர்மங்கள்: இத்தகைய சேர்மங்களில் வினைசெயல் தொகுதியானது பென்சீன் வளையத்துடன் இணைக்கப்பட்ட பக்க சங்கிலியில் இடம் பெற்றிருக்கும். இவைகள் தொடர்புடைய அலிபாட்டிக் சேர்மங்களின் பீனைல் பெறுதிகளாகப் பெயரிடப்படுகின்றன.

அரைல் தொகுதிகள்

பக்கச் சங்கிலி மற்றும் பென்சீன் வளையம் ஆகியவற்றிலிருந்து மூல ஹைட்ரோ கார்பனை தெரிவு செய்தல் என்பது ஏறத்தாழ அலிசைக்ளிக் சேர்மங்களுக்கு பின்பற்றிய விதிகளின் அடிப்படையிலானது.


11th Chemistry : UNIT 11 : Fundamentals of Organic Chemistry : IUPAC rules for nomenclature of organic compounds in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது வேதியியல் : அலகு 11 : கரிம வேதியியலின் அடிப்படைகள் : கரிமச் சேர்மங்களுக்கு பெயரிடுதலுக்கான IUPAC விதிமுறைகள் - : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது வேதியியல் : அலகு 11 : கரிம வேதியியலின் அடிப்படைகள்