Home | 11 ஆம் வகுப்பு | 11வது பொருளாதாரம் | தகவல் தொடர்பு தொழில்நுட்பம் (ICT)

பொருளியலுக்கான கணித முறைகள் - தகவல் தொடர்பு தொழில்நுட்பம் (ICT) | 11th Economics : Chapter 12 : Mathematical Methods for Economics

   Posted On :  07.10.2023 10:08 am

11ஆம் வகுப்பு பொருளாதாரம் : இயல் 12 : பொருளியலுக்கான கணித முறைகள்

தகவல் தொடர்பு தொழில்நுட்பம் (ICT)

தகவல் தொடர்பு தொழில்நுட்பம் (ICT) என்பது தகவல்களை விரைவாகவும், துல்லியமாகவும் தொகுக்கக்கூடிய ஓர் உள்கட்டமைப்பாகும்.

தகவல் தொடர்பு தொழில்நுட்பம் (ICT)

தகவல் தொடர்பு தொழில்நுட்பம் (ICT) என்பது தகவல்களை விரைவாகவும், துல்லியமாகவும் தொகுக்கக்கூடிய ஓர் உள்கட்டமைப்பாகும். பின்வரும் அட்டவணையில் ICTயின் தொழில்நுட்பக் கருவிகள் மற்றும் பணிகளின் பயன்களைக் காணலாம்.


ICT வளர்ச்சி ஐந்து கட்டங்களை கடந்துள்ளது. அவை

(A) கணினி (COMPUTER) 

(B) PC 

(C) நுண் செயலி (MICROPROCESSOR) 

(D) இணையம் (INTERNET) மற்றும் 

(E) வயர்லெஸ் தொடர்புகள் (WIRELESS LINKS)

புள்ளி விவரங்களை தொகுத்தல், ஒழுங்குற அமைத்தல், கையாளுதல், கணக்கிடுதல் மற்றும் முடிவுகளை காட்சிப்படுத்துதல் ஆகிய கணித புள்ளியியல் கருத்துகள் பொருளியலுக்கு தேவைப்படுகின்றன. அவற்றை தகவல் தொடர்பு தொழில் நுட்பம் (ICT) வேகமாகவும், அதிகமாகவும், துல்லியமாகவும் செய்கிறது. பொதுவாக, SPSS மற்றும் EXCEL தொகுப்புகள் பொருளியல் ஆய்வாளர்களால் பயன்படுத்தப்படுகின்றன. சில குறிப்பிட்ட பணிகளுக்குகென சில மென்பொருள்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. WORD PROCESSOR, SPREAD SHEET, WEB BROWSER முதலியன பொருளியல் ஆய்வுகளுக்கு அடிக்கடி பயன்படும் சில மென்பொருள்களாகும்.


1. MS Word

MS WORD என்பது ஒரு வார்த்தை செயலியாகும் (WORD PROCESSOR) இச்செயலி செய்திகளையும், புள்ளி விவரங்களையும் உருவாக்க, ஒழுங்குற அமைக்க, அச்சிட மற்றும் தகவல்களை ஆவணமாக பாதுகாக்க உதவுகிறது.

வார்த்தை செயலி (WORD PROCESSOR)யின் அம்சங்கள்

) ஆவணத்தை உருவாக்க, நகலெடுக்க, திருத்தியமைக்க, வடிவமைக்க முடியும்.

) சொற்களையும் வாக்கியங்களையும் இடையில் செருகிட, மாற்றிட அல்லது நீக்கிட முடியும்.

) வடிவமைப்பினை பயன்படுத்த முடியும்.

) பக்கங்களின் அளவையும் விளிம்பு அளவுகளை சரிசெய்து கொள்ள முடியும்.

) பிழை திருத்தம் செய்யும் வசதியுள்ளது.

) பல ஆவணங்கள் மற்றும் கோப்புகளை ஒன்றாக இணைக்க முடிகிறது. .

WORD DOCUMENT- திறப்பது எப்படி? 

பல்வேறு முறைகளில் MS WORD DOCUMENT திறக்கலாம்

CLICK START → ALL PROGRAM → MS WORD அல்லது DESKTOPல் MS WORD ஐகானை (ICON) இருமுறை கிளிக் செய்க.


தெரிவுசெய் நிரல்பட்டியலின் பயன்கள் (USES OF MENU)

தெரிவுசெய் நிரல்பட்டி (Home menu) எழுத்துக்கள் (fonts), எழுத்துரு வடிவம் (font size) ஆகியவற்றை மாற்றிட உதவுகிறது. எழுத்து வடிவச் செய்தி வண்ணத்தினை மாற்றிடவும், எழுத்து நடையினை தடிமனாக்கல், சாய்வாக எழுதுதல் (Italic), அடிக்கோடிட்டு எழுதுதல் போன்றவற்றை செயல்படுத்த முடியும்.

நுழைவு (Insert) → பக்கங்களுக்கு இலக்கமிட, வரைபடங்கள், அட்டவணைகள், வடிவங்கள், வார்த்தை கலை வடிவங்கள், சமன்பாடுகள், குறியீடுகள் மற்றும் படங்கள் ஆகியவற்றை தேவைப்படும் இடங்களில் நுழைக்க (Insert) முடியும்

பக்க வடிவமைப்பு  (Page Layout)பக்கங்களின் விளிம்பு அளவினை (margin size) மாற்றி அமைத்திட, செய்திகளை பல்வேறு நிரல்களாக பிரிக்க, பக்கத்தின் பின்புல வண்ணத்தை மாற்றி அமைக்க பயன்படுகிறது.

பார்வை குறிப்பு (Reference) அடிக்குறிப்பு, முடிவுக்குறிப்பு, ஆசிரியர்கள் பற்றிய அட்டவணைகளை நுழைக்க

மீள் பார்வை (Revieiw) பிழைதிருத்தம், இலக்கணம், மொழிபெயர்ப்பு செய்ய

பார்வையிடல் (View) வடிவமைத்த பக்கங்களை அச்சிட, முழுத்திரையில் படிக்க, ஆவணங்களை பார்வையிட


2. Microsoft Office Excel

வாய்ப்பாடுகளைப் பயன்படுத்தி தரவுகளை ஆய்வு செய்யப் பயன்படுகிறது. நிரைகளையும் நிரல்களையும் கொண்ட பெரிய தாள் விரிதாள் Spread sheet எனப்படுகிறது. நிரைகளும், நிரல்களும் ஒன்றையொன்று வெட்டிக்கொள்ளும் சிறு அலகிலான அறைகள் 'Cell' எனப்படுகிறது. MS Excel 2007 வடிவம் (version) 10 இலட்சம் நிரைகள் மற்றும் 16 ஆயிரம் நிரல்களைக் கொண்ட பணித்தாளில் (Work Sheet) விவரங்கள் பதிய முடியும்.

ஆரம்பம் (Start)

பல்வேறு முறைகளில் MS Excel பயன்படுத்தலாம்.

Click Start Program Micro Soft Excel அல்லது Desktop ல் MS Excel ஐகானை இருமுறை கிளிக் செய்க.

பணித்தாள் (Worksheet)

வாய்பாடுகளையும், தரவுகளையும் நிரைகளாகவும் நிரல்களாகவும் தருவதற்கு ஏற்ப அட்டவணை வடிவிலான ஆவணமே பணித்தாள் (Worksheet) எனப்படுகிறது. அதில் நான்கு வகையான கணக்கீட்டு செயலிகள் உள்ளன. அவை கணித செயல், ஒப்பிடுதல், உரையை ஒன்றாக இணைத்தல் மற்றும் குறிப்புகள் ஆகும். MS Excel தரவுகளை ஆராயவும் அவற்றை படங்கள், வரைபடங்கள்,பகுதி வரைபடங்கள், கோட்டு வரைபடங்கள் என விளக்குவதற்கும் பயன்படுகின்றது.


3. Microsoft Power Point

இது கணினி வாயிலாக தகவல்களை வழங்கிட உதவும் ஒரு மென்பொருள் ஆகும். தகவல்களை வழங்குவதில் உள்ள படிநிலைகள்

(i) துவங்கு (Start) செயலியை அமுக்கு 

(ii) செயற்கட்டளை (Program) யை அமுக்கு 

(iii) Microsoft Power point தெரிவு செய் 

(iv) புதிய Pover point கோப்பானது திறக்கும். அதன்பிறகு தலைப்பு மற்றும் துணை தலைப்புகளை விரும்பினால் தட்டச்சு செய்யவும்

(v) புதிய படிமம் ('new slide') என்ற குறியீடு (Icon) அல்லது 'Ctrl+M' என்ற பொத்தானை அமுக்குவதன் மூலம் புதிய படிமத்தை நுழைக்கலாம்

(vi) பாடப்பொருள், அட்டவணையை உள் நுழைத்தல், படங்கள், இயங்கு படங்கள் (movies), ஒலிகள் போன்றவற்றை உள்ளடக்கமாக தர முடியும்

(vii) வடிவமைப்பு 'Design' என்ற செயலி நழுமங்களை வடிவமைக்க உதவுகிறது. (அனைத்து நழுமங்களுக்கும் (slides) ஒரே பொதுவான வடிவமைப்பு அல்லது ஒவ்வொரு நழுமத்திற்கும் தனித்த வடிவமைப்புகளை தெரிவு செய்யலாம்). 

(viii) நழுமக்காட்சி (slide show) என்ற செயலியை அழுத்துவதன் மூலம் ஒருவர் நழுமக்காட்சிகளை துவக்கத்திலிருந்தோ அல்லது தற்போதைய நழுமக்காட்சியிலிருந்தோ இயக்க முடியும்

குறிப்பிட்ட தலைப்பிலான தகவல்களை புரிந்துகொண்டு நினைவில் வைப்பதற்குரிய குறிப்புகளை Power Point Presentation வசதிப்படுத்துகிறது. சமீபத்தில் மிடுக்கான வகுப்பறை (Smart Class room) கற்பித்தலில் தகவல் தொழில் நுட்பத்தை திறம்பட பயன்படுத்தி உயர்ந்த தரம் வாய்ந்த கல்வியினை வழங்கிட Pover Point Presentation (PPT) உதவுகிறது.

சிந்தித்து செயல்படு

சிறப்புகள் வாய்ந்த இந்தியா ("Incredible India") குறித்தான MS word ஆவணம் தயார் செய்க.

கடந்த மாதத்தில் உனது தினப்படி செலவினத்தை ஒவ்வொரு வகை/ உருப்படி வாரியாக Excel Sheet ல் தயார் செய்க

உனது பெற்றோருடன் வெளியில் சென்று வந்தது குறித்து "Power Point" தயார் செய்து வழங்கிடுக.






தொகுப்புரை

இந்த அலகில் நேரிய இயற்கணிதம், நுண்கணிதம் மற்றும் தகவல் தொழில்நுட்ப பயன்பாடுகளை கற்பதன் மூலம் பொருளியலில் கணிதத்தின் தேவையை அறியலாம். குறிப்பாக சார்புகள், அணிகள், வகை நுண்கணிதம், தொகை நுண்கணிதம், MS Word, MS Excel மற்றும் Power Point Presentation ஆகியன பற்றிய அறிவானது பொருத்தமான பயன்பாடுகளுடன் விளக்கப்படுகின்றன. பொருளியலில் கணித முறைகளின் பயன்பாடு பற்றிய உண்மையை கற்க மாணவர்களுக்கு கற்றல் செயல்பாடுகளும் சேர்க்கப்பட்டுள்ளன.

சூத்திரங்கள்

1. சாய்வு m = (Y2 –Y1) / (x2X1

2. (y - y1) = m (x - x1 ) என்பது நேர்கோட்டின் சமன்பாடு

3. 3 × 3 உடைய A என்ற அணியின் அணிக்கோவை மதிப்பு. |A|=a1(b2c3-b3c2) – a2(b,c3 – b3c1) + a3(b1c2 – b2c1

4. மாறிலியின் வகையீட்டு கெழு மதிப்பு சுழியமாகும்

5. xn ன் வகையீடு nx(n-1) 

6. ed = இறுதி நிலைச் சார்பு / சராசரிச் சார்பு

7. ed = -P dx / x dp 

8. xn என்ற சார்பின் தொகையீடு xn+1 / n+1 + C

9. நுகர்வோர் உபரி CS =

10. உற்பத்தியாளர் உபரி




ICT CORNER

வகுப்பு:XI - பாடம்:பொருளியல் அத்தியாயம் .12.பொருளியலுக்கான கணித முறைகள்

வரைபடம் வரைதல் எனும் இந்தச் செயல்பாடானது EXCEL தாளில் எளிமையான முறையில் வரைபடம் வரையும் முறையினை விளக்குகிறது.


படி1 : Ms - Excel பணித்தாளை எடுத்துக் கொள்ளவும். X - அச்சிற்குரிய விவரங்களை முதல் நிரலிலும் (column) அதற்குரிய மற்ற விவரங்களை அடுத்தடுத்த நிரல்களிலும் தட்டச்சு செய்யவும்

படி 2: தட்டச்சு செய்த விவரங்களை (select) தேர்வு செய்து, விளக்க வரைபடத்தைப் பெறுவதற்கு Insert- அழுத்தவும். 'Scroll down' பட்டியலைப் பெறுவதற்கு, அங்கு கொடுக்கப்பட்டுள்ள விளக்க வரைபடங்களில் 'Scatter type' ஐத் தேர்வு செய்யவும்

படி 3: 'Scroll down' பட்டியலில், 'scatter with Smooth lines and Markers' -ஐத் தேர்வு செய்தால் தேவையான வரைபடம் கிடைக்கும். தற்போது வலப்புறமுள்ள மூன்று பாவைகளைத் தேர்ந்தெடுத்து விளக்க அட்டவணையின் அமைப்பை மாற்றவும். முதலில், முதல் பொத்தானை அழுத்தி 'Chart elements' - மாற்றியமைக்கவும். குறிப்பாக ''Axis Titles' மற்றும் Chart title - தேர்வு செய்யவும்

படி 4 : 'Axis Titles' மற்றும் Chart title-ஐத் தேர்வு செய்து - அச்சு , Y- அச்சு மற்றும் தலைப்புகளைத் தட்டச்சு செய்யவும். வரைபடத்தாளின் நிலையை மாற்ற, 'Legend அழுத்தி (Right, Top, Left, Bottom) என தேவையான இடத்தைத் தேர்ந்தெடுத்து அங்கே வைக்கவும். வரைபடத்தாளின் மீது ' Right Click' செய்து Copy செய்து 'word' பக்கத்தில் 'paste' செய்யலாம் அல்லது Move Chart - தேர்வு செய்து வேறு 'excel பக்கத்திற்கும் நகர்த்தலாம்

படி 5 : புதிய தாளுக்கு மாற்றுவதற்கு அங்கே ஒரு பட்டியல் தோன்றும். வரைபடத்தை பட்டை விளக்கப் படமாகவோ அல்லது வேறு வகையான வரைபடமாகவோ மாற்றுவதற்கு 'graph' தேர்வு செய்து மேல் மெனுவில் கொடுக்கப்பட்டுள்ள வரைபட வகைகளில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்.


உரலி

https://youtu.be/Xn7Sd5Uu42A


* படங்கள் அடையாளத்திற்கு மட்டுமே.

ICT CORNER

வகுப்பு:XI - பாடம்:பொருளியல் 12.பொருளியலில் கணித முறைகள் - நுகர்வோர் மற்றும் உற்பத்தியாளர் உபரி

கணித முறைகளைப் பயன்படுத்தும் இச்செயல்பாட்டில் தொகையீட்டின் மூலம் நுகர்வோர் மற்றும் உற்பத்தியாளர் உபரிகள் எளிதாக விளக்கப்பட்டுள்ளது.


படி1: கொடுக்கப்பட்டிருக்கும் உரலி / விரைவுக்குறியீடைப் பயன்படுத்தி GeoGtbra பக்கத்திற்குச் செல்க

படி 2: 'நுகர்வோர் மற்றும் உற்பத்தியாளர் உபரி' என்னும் பணித்தாளை எடுத்துக் கொள்ளவும்

படி 3: வளைகோடுகளால் அடைபடும் பரப்பைக் காண தொகை நுண் கணிதம் தெரிந்திருக்க வேண்டும். அத்தகைய கணக்கீடுகளைச் செய்ய பல்வேறு செயலிகள் உள்ளன. எனினும் அவை எங்கே எப்படி பயன்படுகிறது என்பதைத் தெரிந்து கொள்வது அவசியமாகும் 

படி 4 : பணித்தாளில் தேவை வளைவு பச்சை நிறத்திலும், விநியோக வளைவு நீல நிறத்திலும் இருக்கும். A(4,9) என்னும் புள்ளியில் இரண்டும் வெட்டிக் கொள்கின்றன. 0 மற்றும் A க்கு இடையேயான தேவை வளைவைத் தொகுக்கும் போது கிடைக்கும் பரப்பானது அடுத்த படியில் காட்டப்பட்டுள்ளது அப்பரப்பைக் காண்பதற்கு 'Show Arca Integral 1' ஐச் சொடுக்கவும்.

படி 5 : இங்கே காட்டப்படும் பரப்பானது 0 மற்றும் A க்கு இடையேயான தேவை விலையின் தொகுக்கப்பட்ட மதிப்பாகும் 

படி 6 : 'Area of Rectangle'ன்மீது சொடுக்கும் போது செவ்வகப் பரப்பு கிடைக்கும். இது நீளம் 4 மற்றும் அகலம் 9ன் பெருக்கிய மதிப்பேயாகும் (கவனிக்க-புள்ளி A (4,9)) ஆக நுகர்வோர் உபரி = (f(x) என்னும் வளைகோட்டுக்குகீழ் அடைபடும் பரப்பு) - (செவ்வகப் பரப்பு) 

தொகை நுண்கணிதம் அறிக:

நிழலிடப்பட்ட பகுதியின் பரப்பு = x அச்சுக்கு மேல், x=a மற்றும் x=b என்னும் புள்ளிகளுக்கிடையே f(x) என்னும் வளைகோட்டுக்கு கீழ் அடைபடும் பகுதியின் பரப்பு = அதாவது 2,6 எல்லைகளுக்குட்பட்ட f(x) எனும் சார்பின் தொகையீடு f(x) ஆனது : அச்சின் மீது 2 மற்றும் 5 எல்லைகளுக்கிடையே தேவை வளைவு சமன்பாட்டின் வலப்பக்கம் அமைந்துள்ளது


படி 7 : Show Arca Integral 2' ஐச் சொடுக்கவும். 0 வுக்கும் A வுக்கும் இடைப்பட்ட விநியோக விலையின் தொகுப்பு நீல நிறத்தில் இருக்கும். உற்பத்தியாளர் உபரி =(செவ்வகப்பகுதியின் பரப்பு) - (Ps என்னும் கோட்டின் கீழ் வரும் பரப்பு) 'm' மற்றும் 'c' Sliders- நகர்த்தி மாற்றுவதன் மூலம் Ps கோட்டில் மாற்றம் ஆகும். நுகர்வோர் உபரி மற்றம் உற்பத்தியாளர் உபரியில் ஏற்படும் மாற்றங்களைக் காணலாம்.


உரலி:

https://ggbm.at/ddY3wkjp 


* படங்கள் அடையாளத்திற்கு மட்டுமே.

Tags : Mathematical Methods for Economics பொருளியலுக்கான கணித முறைகள்.
11th Economics : Chapter 12 : Mathematical Methods for Economics : Information and Communication Technology (ICT) Mathematical Methods for Economics in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11ஆம் வகுப்பு பொருளாதாரம் : இயல் 12 : பொருளியலுக்கான கணித முறைகள் : தகவல் தொடர்பு தொழில்நுட்பம் (ICT) - பொருளியலுக்கான கணித முறைகள் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11ஆம் வகுப்பு பொருளாதாரம் : இயல் 12 : பொருளியலுக்கான கணித முறைகள்