Home | 6 ஆம் வகுப்பு | 6வது அறிவியல் | தாவர செல் மற்றும் விலங்கு செல்

செல் | பருவம் 2 அலகு 5 | 6 ஆம் வகுப்பு அறிவியல் - தாவர செல் மற்றும் விலங்கு செல் | 6th Science : Term 2 Unit 5 : The Cell

   Posted On :  20.09.2023 08:14 am

6 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 2 அலகு 5 : செல்

தாவர செல் மற்றும் விலங்கு செல்

தாவரங்கள் மற்றும் விலங்குகள் பல செல் உயிரினங்களாகும். இவற்றின் செல்கள் யூகேரியாட்டிக் செல்கள் என் அழைக்கப்படுகின்றன.

தாவர செல் மற்றும் விலங்கு செல்

தாவரங்கள் மற்றும் விலங்குகள் பல செல் உயிரினங்களாகும். இவற்றின் செல்கள் யூகேரியாட்டிக் செல்கள் என் அழைக்கப்படுகின்றன.


தாவர செல்லின் முக்கியப் பண்புகள்

தாவரசெல்கள் விலங்கு செல்களை விட அளவில் பெரியவையாகவும், கடினத்தன்மை மிக்கதாகவும் உள்ளன.

.  தாவர செல்கள் அதனைச் சுற்றி வெளிப்புறத்தில் செல்சுவரையும் அதனையடுத்து செல்சவ்வினையும் கொண்டுள்ளன.

தாவரசெல்கள் பசுங்கணிகங்களை கொண்டுள்ளன.  அவற்றில் காணப்படும் பச்சையம் என்னும் நிறமி தாவரத்திற்கு அதன் உணவினை தயாரித்துக்கொள்ள உதவுகின்றது.

நுண்குமிழ்கள் காணப்படுகின்றன ஆனால் சென்டிரியோல்கள் காணப்படவில்லை.


 

விலங்கு செல்லின் முக்கிய பண்புகள்

விலங்கு செல்கள், தாவர செல்களைவிட அளவில் சிறியவை. விலங்குசெல்கள் கடினத்தன்மை அற்றவை.

விலங்கு செல்லைச் சுற்றி செல்சவ்வு காணப்படுகிறது ஆனால் செல்சுவர் காணப்படுவதில்லை.

விலங்கு செல்லில் பசுங்கணிகங்கள் காணப்படுவதில்லை.

இவை சிறிய நுண்குமிழ்களைக் கொண்டுள்ளன.

விலங்கு செல்லில் சென்ட்ரியோல்கள் உண்டு.



செல்லின் முப்பரிமாண அமைப்பு

1. ஒரு செல் எப்படி இருக்கும்?

2 செல்லின் வடிவம் மற்றும் அளவு என்ன?


அமைப்புடையவை. மேற்காணும் முப்பரிமாண அமைப்பில் நீங்கள் செல்லின் முழுத்தோற்றத்தைக் காணலாம். காணலாம். செல்லின் நுண்ணுறுப்புகளின் அளவு, வடிவம் மற்றும், அவற்றின் அமைவிடத்தையும் நீங்கள் அறிந்து கொள்ளலாம்.


செயல்பாடு 3: நோக்கம்: இருபரிமாண மற்றும் முப்பரிமாண அமைப்பிற்கிடையே உள்ள வேறுபாட்டைக் கண்டறிதல்.

தேவையான பொருள்கள்: பாலித்தீன் பை, தண்ணீர், கோலிக்குண்டு,

செய்முறை: பாலித்தீன் பையில் தண்ணீரை எடுத்துக்கொண்டு அதில் கோலிகுண்டைப் போடவும். பிறகு அதனை பார்த்து உனது நோட்டில் படம் வரையவும். நீ வட்ட வடிவில் படம் வரைந்திருந்தால் அது இருபரிமாணப் படம். கோள வடிவில் வரைந்திருந்தால் அது முப்பரிமாணப்படம் ஆகும்.

முடிவு: இப்போது நீங்கள் தவறாகப் புரிந்து கொண்டிருந்தால் அதனை உணர்ந்திருப்பாய். விலங்கு செல்கள் எப்போதும் கோள வடிவில் தான் இருக்கும். வட்ட வடிவில் இருக்காது.


Tags : The Cell | Term 2 Unit 5 | 6th Science செல் | பருவம் 2 அலகு 5 | 6 ஆம் வகுப்பு அறிவியல்.
6th Science : Term 2 Unit 5 : The Cell : Plant cell and Animal cell The Cell | Term 2 Unit 5 | 6th Science in Tamil : 6th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 6 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 2 அலகு 5 : செல் : தாவர செல் மற்றும் விலங்கு செல் - செல் | பருவம் 2 அலகு 5 | 6 ஆம் வகுப்பு அறிவியல் : 6 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
6 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 2 அலகு 5 : செல்