Home | 6 ஆம் வகுப்பு | 6வது அறிவியல் | செல்லின் அமைப்பு

செல் | பருவம் 2 அலகு 5| 6 ஆம் வகுப்பு அறிவியல் - செல்லின் அமைப்பு | 6th Science : Term 2 Unit 5 : The Cell

   Posted On :  20.09.2023 05:57 am

6 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 2 அலகு 5 : செல்

செல்லின் அமைப்பு

ஒரு செல் மூன்று முக்கிய பகுதிகளைக் கொண்டுள்ளது. 1. செல்லைச் சுற்றி காணப்படும் வெளி உறையான செல்சவ்வு 2 திரவநிலை சைட்டோபிளாசம் 3. உட்கரு

செல்லின் அமைப்பு

ஒரு செல் மூன்று முக்கிய பகுதிகளைக் கொண்டுள்ளது.

1. செல்லைச் சுற்றி காணப்படும் வெளி உறையான செல்சவ்வு

2 திரவநிலை சைட்டோபிளாசம்

3. உட்கரு


நமது உடலில் கண்கள், இதயம், நுரையீரல் போன்ற உறுப்புகள் எவ்வாறு தனித்தனியான நுட்பமான பணிகளை செய்வதற்காக அமைந்துள்ளனவோ அதுபோல செல்லின் பல்வேறு பணிகளைச் செய்வதற்காக செல்லினுள் பல உறுப்புகள் காணப்படுகின்றன. இவைசெல்நுண்ணுறுப்புகள்எனப்படுகின்றன.

உடலின் எப்பகுதியில் ஒரு செல்லானது இடம்பெறுகிறதோ, அதற்கேற்ப அச்செல்லின் நுண்ணுறுப்புகள் சிறப்புத்தன்மைகளைப் பெற்று அந்த உறுப்பின் நுட்பமான பணிகளைச் செய்கின்றன.

 

செல்லின் அளவு

செல்கள் வேறுபட்ட அளவுகளில் காணப்படுகின்றன. இவற்றின் அளவானது மைக்ரோமீட்டரிலிருந்து ஒரு மீட்டரில் ஆயிரத்தில் ஒரு பகுதி) சில சென்டிமீட்டர் வரை வேறுபடுகின்றது.

இவை பொதுவாக மிகச் சிறியவையாக இருப்பதால் இவற்றை வெறும் கண்களால் காண இயலாது. இவற்றினை கூட்டு நுண்ணோக்கி வழியாகப் பெரிதுபடுத்திப் பார்க்கலாம்.


செயல்பாடு 1:

நோக்கம்:

ஒரு தனி செல்லின் அமைப்பைக் கண்டறிதல் (கோழி முட்டை)

தேவையான பொருட்கள் :

கோழி முட்டை, ஒரு தட்டு

செயல்முறை:

கோழி முட்டையின் ஓட்டை உடைத்து, முட்டையை கவனமாக தட்டில் ஊற்றவும்.

காண்பன :

கோழி முட்டையின் மையத்தில் மஞ்சள் பகுதியும், அதைச் சுற்றி ஒளி ஊடுருவக் கூடிய, ஜெல்லி போன்ற, ஆல்புமினால் ஆன வெண்மைப்பகுதியும் உள்ளது அடர்த்தியான மஞ்சள் பகுதி, அச்செல்லின் உட்கருவாகும். வெள்ளை நிறப்பகுதி சைட்டேபிளாசம் எனப்படும். முட்டை ஓட்டின் உட்புறம் ஒரு மெல்லிய சவ்வு காணப்படுகிறது. அது செல்சவ்வைக் குறிக்கிறது.


பாக்டீரியாக்கள் மிகச்சிறியவை. ஒரே செல்லால் ஆனவை. இவை 0.1 முதல் 0.5 மைக்ரோமீட்டர் வரையிலான அளவில் காணப்படுகின்றன.

இதற்கு மாறாக ஒரே செல்லால் ஆன நெருப்புக்கோழியின் முட்டையானது 170 மி.மீ விட்டம் கொண்டதாக உள்ளது. இதனை வெறும் கண்களால் பார்க்க இயலும்.

நமது உடலில் கானப்படும் நரம்பு செல்லானது மிக நீளமான செல்லாகக் கருதப்படுகின்றது.

 

செல்லின் அளவிற்கும் உயிரினத்தின் அளவிற்கும் யாதொரு தொடர்பும் இல்லை. உதாரணமாக யானையின் செல், சுண்டெலியின் செல்லை விட மிகப் பெரியதாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.

 

செல்லின் வடிவம்

செல்கள் பல்வேறு வடிவங்களில்காணப்படுகின்றன. உதாரணமாக சில செல்களின் வடிவங்கள் படத்தில் காட்டப்பட்டுள்ளன.



செல்களின் எண்ணிக்கை

செல்களின்எண்ணிக்கை உயிரினத்திற்கு உயிரினம் மாறுபடும். உயிரினங்கள் ஒரு செல் கொண்டு ஒரு செல் உயிரினமாக இருக்கலாம் அல்லது பல செல்கள் (நூறு முதல் மில்லியன் எண்ணிக்கையில்) கொண்டு பல செல் உயிரினமாகவும் இருக்கலாம். பாக்டீரியா, அமீபா, கிளாமிடோமோனஸ் மற்றும் ஈஸ்ட் போன்றவை ஒரு செல் உயிரினத்திற்கு உதாரணமாகும். ஸ்பைரோகைரா, மாமரம், மற்றும் மனிதன் போன்றவை பல செல் உயிரினங்களுக்கு உதாரணமாகும்.

தோராயமாக, மனித உங்களுக்குக் உடலில் உள்ள செல்களின் செரியுமா எண்ணிக்கை 3.7×1013(அ) 37,000,000,000,000.



Tags : The Cell | Term 2 Unit 5 | 6th Science செல் | பருவம் 2 அலகு 5| 6 ஆம் வகுப்பு அறிவியல்.
6th Science : Term 2 Unit 5 : The Cell : The Structural Organization of the Cell The Cell | Term 2 Unit 5 | 6th Science in Tamil : 6th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 6 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 2 அலகு 5 : செல் : செல்லின் அமைப்பு - செல் | பருவம் 2 அலகு 5| 6 ஆம் வகுப்பு அறிவியல் : 6 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
6 ஆம் வகுப்பு அறிவியல் : பருவம் 2 அலகு 5 : செல்