Home | 8 ஆம் வகுப்பு | 8வது அறிவியல் | நினைவில் கொள்க, சொல்லடைவு , கருத்து வரைபடம்

வெப்பம் | அலகு 4 | 8 ஆம் வகுப்பு அறிவியல் - நினைவில் கொள்க, சொல்லடைவு , கருத்து வரைபடம் | 8th Science : Chapter 4 : Heat

   Posted On :  09.09.2023 07:53 am

8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 4 : வெப்பம்

நினைவில் கொள்க, சொல்லடைவு , கருத்து வரைபடம்

8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 4 : வெப்பம் : நினைவில் கொள்க, சொல்லடைவு , கருத்து வரைபடம்

நினைவில் கொள்க

• வெப்பமானது பொருளின் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்குப் பரவுகிறது.

• ஒரு பொருளிற்கு வெப்ப ஆற்றல் அளிக்கப்படும்போது, விரிவடைதல், வெப்பநிலை உயர்வு மற்றும் நிலைமாற்றம் ஆகிய நிகழ்வுகள் நடைபெறுகின்றன.

• ஒரு பொருளை வெப்பப்படுத்தும்போது அதன் அணுக்கள் ஆற்றலைப் பெறுவதால் அவை அதிர்வுறத் தொடங்கும். இந்த அதிர்வுகள் மற்ற அணுக்கள் மற்றும் மூலக்கூறுகளின் மீது அதிர்வினை ஏற்படுத்துகின்றன.

• உருகுதல், ஆவியாதல், பதங்கமாதல், குளிர்வித்தல், உறைதல் மற்றும் படிதல் போன்றவை வெப்பத்தினால் நீரில் ஏற்படும் நிலை மாற்றங்களாகும்.

• வெப்ப ஆற்றல் பரிமாற்றம் அடையும் மூன்று விதங்களாவன: வெப்பக் கடத்தல், வெப்பச் சலனம், வெப்பக் கதிர்வீச்சு.

• திடப்பொருளில் வெப்பக் கடத்தல் மூலமாகவும், திரவம் மற்றும் வாயுக்களில் வெப்பச் சலனம் மூலமாகவும் வெப்ப ஆற்றல் பரவுகிறது. ஆனால் வெப்பக் கதிர்வீச்சு வெற்றிடத்தில் பரவுகிறது

• ஒரு பொருளில் ஏற்படும் வெப்ப ஆற்றல் ஏற்பு அல்லது இழப்பு மூன்று காரணிகளால் நிர்ணயிக்கப்படுகிறது. பொருளின் நிறை, பொருளின் வெப்பநிலை மாற்றம், பொருளின் தன்மை.

• வெப்பநிலையை அளவிட மூன்று விதமான அளவுகோல்கள் பயன்படுத்தப்படுகின்றன. செல்சியஸ் அளவுகோல், ஃபாரன்ஹீட் அளவுகோல், கெல்வின் அளவுகோல்.

• ஒரு பொருளினால் ஏற்கப்பட்ட அல்லது இழக்கப்பட்ட வெப்பத்தினை அளவிடப் பயன்படுத்தப்படும் உபகரணம் கலோரிமீட்டர் ஆகும்.

 

சொல்லடைவு

வெப்ப அளவியல் பொருளில் ஏற்படும் இயற்பியல் மற்றும் வேதியியல் நிகழ்வுகளில் உருவாகும் வெப்ப ஆற்றலின் மதிப்பினைக் கணக்கிடும் முறை.

கலோரிமீட்டர் பொருள் ஒன்றினால் ஏற்கப்பட்ட அல்லது இழக்கப்பட்ட வெப்பத்தினை அளவிடப் பயன்படுத்தப்படும் உபகரணம்.

வெப்பக் கடத்தல் திடப்பொருளில் வெப்ப ஆற்றல் பரவும் நிகழ்வு.

வெப்ப ஏற்புத்திறன் ஒரு பொருளின் வெப்பநிலையை 1°C அல்லது I K உயர்த்தத் தேவைப்படும் வெப்ப ஆற்றலின் அளவு.

வெப்பச்சலனம் உயர் வெப்ப நிலை யிலுள்ள பகுதியிலிருந்து குறை ந்த வெப்ப நிலை யிலுள்ள பகுதிக்கு அணுக்களின் இயக்கத்தினால் வெப்பம் பரவும் முறை .

வெப்பக் கதிர் வீச்சு வெப்ப ஆற்றல் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு மின்காந்த அலைகள் வடிவத்தில் பரவும் முறை.

தன் வெப்ப ஏற்புத்திறன் 1 கிலோகிராம் நிறையுள்ள பொருளின் வெப்பநிலையை 1°C அல்லது 1K அளவு உயர்த்தத் தேவைப்படும் வெப்ப ஆற்றலின் அளவு.

வெப்பநிலை ஒரு பொருள் சூடாக உள்ளதா அல்லது குளிர்ச்சியாக உள்ளதா என்பதை அறிய உதவும் இயற்பியல் அளவு.

வெப்பக் குடுவை  ஒரு பொருளை நீண்ட நேரம் குளிர்ச்சியாகவோ அல்லது வெப்பமாகவோ வைக்க உதவும் ஒரு சாதனம்.

வெப்பக் கட்டுப்படுத்தி ஒரு பொருள் அல்லது இடத்தின் வெப்பநிலையை மாறாமல் வைப்பதற்காகப் பயன்படுத்தப்படும் சாதனம்.


பிற நூல்கள்

1. Fundamentals of Statistical and Thermal Physics - EReif

2. Statistical Thermodynamics and Microscale Thermo -physics – Carey

3. Heat, Thermodynamics and Statistical Physics - BrijLal and Dr. N. Subramaniyam

4. Thermodynamics and an Introduction to Thermos-statistics byHerbert Hallen

5. Fundamentals of Engineering Thermo dynamics by Michael Moran

 

இணைய வளங்கள்

https://www.explainthatstuff.com/thermostats.html

https://youtu.be/8-nLHWpgDsM

https://youtu.be/rYwgsF_haAg




இணையச் செயல்பாடு

வெப்பம்

வெப்பத்தினை கணினி விளையாட்டு மூலம் அறிவோம்

படி 1 கீழ்க்காணும் உரலி / விரைவுக்குறியைப் பயன்படுத்தி இணையப் பக்கத்திற்குச் செல்க.

படி 2 வெப்ப ஆற்றலை அறியும் பல விளையாட்டுகள் திரையில் தோன்றும்.

படி 3 எ.கா... Heat Energy match it" பொத்தானை சொடுக்கி, வெப்ப ஆற்றலைப் பொருத்தி விளையாடி மகிழ்க.

படி 4  அதே போன்று அனைத்து விளையாட்டுகளையும் தேர்வு செய்து விளையாடி மகிழ்க.

ரலி: https://www.learninggamesforkids.com/heat-energy-games.html

Tags : Heat | Chapter 4 | 8th Science வெப்பம் | அலகு 4 | 8 ஆம் வகுப்பு அறிவியல்.
8th Science : Chapter 4 : Heat : Points to Remember, Glossary, Concept Map Heat | Chapter 4 | 8th Science in Tamil : 8th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 4 : வெப்பம் : நினைவில் கொள்க, சொல்லடைவு , கருத்து வரைபடம் - வெப்பம் | அலகு 4 | 8 ஆம் வகுப்பு அறிவியல் : 8 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 4 : வெப்பம்