வெப்பம் | அலகு 4 | 8 ஆம் வகுப்பு அறிவியல் - கணக்கீடு | 8th Science : Chapter 4 : Heat

   Posted On :  27.07.2023 08:22 am

8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 4 : வெப்பம்

கணக்கீடு

8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 4 : வெப்பம் : எண் உதாரணம் சிக்கல்களைத் தீர்க்கிறது மற்றும் தீர்வுடன் எண் சிக்கல்கள் கேள்விகளைத் திரும்பப் பதிவு செய்யவும்

கணக்கீடு 1

ஒரு உலோகத்தின் வெப்பநிலை 30°C ஆக உள்ளது. அதற்கு 3000 ) அளவுள்ள வெப்ப ஆற்றல் அளிக்கப்படும்போது அதன் வெப்பநிலை 40° C ஆக உயர்கிறது எனில், அதன் வெப்ப எற்புத்திறனைக் கணக்கிடுக.

தீர்வு

வெப்ப ஏற்புத்திறன், C' = Q / AT

இங்கு,Q=3000 J

AT = 40°C - 30°C = 10°C அல்லது 10 K

எனவே, C' = 3000 / 10 = 300 JK-1

உலோகப் பந்தின் வெப்ப ஏற்புத்திறன் 300 JK-1 ஆகும்.


கணக்கீடு 2

ஒரு இரும்புப் பந்தின் வெப்பநிலையை IK உயர்த்துவதற்கு 500JK வெட்பம் தேவைப்படுகிறது. அதன் வெப்பநிலையை 20K உயர்த்துவதற்குத் தேவையான வெப்ப ஆற்றலைக் கனக்கிடுக.

தீர்வு

வெப்ப ஏற்புத்திறன், C = Q / AT

Q = C' x AT

இங்கு, C' = 500 JK

AT = 20 K

Q = 500 x 20 = 10000 J.

தேவையான வெப்ப ஆற்றல் 10000 J ஆகும்.


கணக்கீடு 3

2 kg நிறையுள்ள நீரின் வெப்பநிலையை 60°C லிருந்து 70°C ஆக உயர்த்தத் தேவைப்படும் வெப்ப ஆற்றலின் அளவு 84000) எனில், நீரின் தன் வெப்ப ஏற்புத்திறனின் மதிப்பைக் கணக்கிடுக.

தீர்வு

தன் வெப்ப ஏற்புத்திறன், C = Q/ m x AT

இங்கு,Q = 84000 J

m =2kg

T = 70°C - 60° C = 10° C அல்லது 10 K

C = 84000 / 2x 10 = 4200 J-1 kgK-1

நீரின் தன் வெப்ப ஏற்புத்திறன் 4200 kgK-1 k-1 ஆகும்.


கணக்கீடு 4

ஒரு உலோகத்தின் தன் வெப்ப ஏற்புத்திறனின் மதிப்பு 160 J-1 kgK-1 500கிராம் நிறையுள்ள உலோகத்தின் வெப்பநிலையை 125°C லிருந்து 325°C ஆக உயர்த்தத் தேவைப்படும் வெப்ப ஆற்றலின் மதிப்பைக் கணக்கிடுக.

தீர்வு

தன் வெப்ப ஏற்புத்திறன், C =Q/mX AT

Q=Cx mx AT

இங்கு, C = 160 Jkg K-1

m = 500 g = 0.5kg

T=325°C-125°C = 200°C அல்லது 200 K

எனவே, = 160 × 0.5 × 200 = 16000J

தேவைப்படும் வெப்ப ஆற்றலின் மதிப்பு = 16000 J.

Tags : Heat | Chapter 4 | 8th Science வெப்பம் | அலகு 4 | 8 ஆம் வகுப்பு அறிவியல்.
8th Science : Chapter 4 : Heat : Numerical problems Heat | Chapter 4 | 8th Science in Tamil : 8th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 4 : வெப்பம் : கணக்கீடு - வெப்பம் | அலகு 4 | 8 ஆம் வகுப்பு அறிவியல் : 8 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 4 : வெப்பம்