Home | 8 ஆம் வகுப்பு | 8வது அறிவியல் | நினைவில் கொள்க, சொல்லடைவு , கருத்து வரைபடம்

மின்னியல் | அலகு 5 | 8 ஆம் வகுப்பு அறிவியல் - நினைவில் கொள்க, சொல்லடைவு , கருத்து வரைபடம் | 8th Science : Chapter 5 : Electricity

   Posted On :  28.07.2023 01:21 am

8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 5 : மின்னியல்

நினைவில் கொள்க, சொல்லடைவு , கருத்து வரைபடம்

8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 5 : மின்னியல் : நினைவில் கொள்க, சொல்லடைவு , கருத்து வரைபடம்

நினைவில் கொள்க

ஓரின மின்துகள்கள் ஒன்றை ஒன்று விரட்டிக் கொள்ளும். வேறின மின்துகள்கள் ஒன்றையொன்று கவர்கின்றன.

மின்துகள்கள் மூன்று முறைகளில் ஒரு பொருளிலிருந்து மற்றொரு பொருளுக்கு இடமாற்றமடைகின்றன. அவை: உராய்வு மூலம் இடமாற்றம், கடத்துதல் மூலம் இடமாற்றம், மின்தூண்டல் மூலம் இடமாற்றம். இரு பொருள்கள் உராய்வதன் மின்துகள்கள் இடமாற்றமடைகின்றன.

நேரடியான தொடுதல் மூலம் ஒரு பொருளில் இருக்கும் மின்துகள்களை மற்றொரு பொருளுக்குக் கடத்தலாம்.

மின்னல் தாக்கிவதிலிருந்து உயரமான கட்டடங்களைப் பாதுகாக்க உதவும் ஒரு கருவி மின்னல் தாங்கி.

மின்னூட்டம் பெற்ற பொருளை மின்னூட்டம் பெறாத கடத்தியின் அருகே கொண்டு சென்று தொடுதலின்றியே அதனை மின்னூட்டமடையச் செய்யும் நிகழ்வு மின்தூண்டல் மூலம் மின் துகளை இடமாற்றம் செய்தல் எனப்படும்.

ஒரு எளிய மின்சுற்றில் மின்சார மூலம் (மின்கலம்), எலக்ட்ரான்கள் செல்வதற்கான பாதை (உலோக கம்பி), மின்னோட்டத்தைக் கட்டுப்படுத்தும் சாவி மற்றும் மின்சாரத்தால் செயல்படும் ஒரு கருவி (மின்தடை) ஆகிய நான்கு உறுப்புகள் இருக்கும்.

குறைந்த மின்தடை கொண்ட கம்பியின் மூலம் மின்னாற்றலை புவிக்கு இடமாற்றம் செய்யும் முறைக்கு புவித்தொடுப்பு என்று பெயர்.

நிலைமின்காட்டி பொருளொன்றில்மின்னூட்டம் இருப்பதைக் கண்டறியப் பயன்படும் கருவியாகும்.

மின்னோட்டத்தைப் பாயச் செய்வதன்முலம் ஒரு உலோகத்தின் படலத்தை மற்றொரு உலோகத்தின் மேற்பரப்பில் படியவைக்கும் நிகழ்வு மின்முலாம் பூசுதல் எனப்படும்.

குறைவான உருகுநிலை கொண்ட வெள்ளீயம் மற்றும் காரீயம் கலந்த உலோகக் கலவையினால் தயாரிக்கப்பட்ட குறைந்த நீளமுள்ள துண்டுக்கம்பி மின் உருகி எனப்படும்.

 

சொல்லடைவு

மின்கலம் மின் ஆற்றலைச் சேமித்து வைக்கும் சாதனம்.

மின்சுற்று மின்சாரம் பாயும் பாதை.

மின்துகள் பொருள்கள் ஒன்றையொன்று விலக்கவோ அல்லது ஈர்க்கவோ தேவையான அடிப்படைப் பண்பைப் பெற்றிருக்கும் துகள். இது நேர் மின்துகள், எதிர் மின்துகள் என இருவகைப்படும்.

மின்னோட்டம்  மின்கடத்தியில் பாயும் எதிர்மின்துகள்களின் ஓட்டம்.

எலக்ட்ரான்  அணுவில் உள்ள எதிர்மின்தன்மை கொண்ட சிறு துகள்.

நிலைமின்காட்டி பொருளொன்றில் மின்துகள் இருப்பதைக் கண்டறியப் பயன்படும் ஒரு கருவி.

உராய்வு ஒரு பொருள் அல்லது அதன் பரப்பு மற்றொரு பொருள் அல்லது அதன் பரப்பின் மீது சறுக்கும்போது ஏற்படும் விசை.

மின் உருகி உலோகக் கலவையாலான ஒரு கம்பி. இது அதிக மின்தடையும், குறைந்த உருகு நிலையும் கொண்டது.

வோல்ட்  மின்னழுத்தத்தின் அலகு.

மின்னழுத்தம் மின் தன்மை உள்ள பொருட்களைச் சூழ்ந்துள்ள மின்புலத்தால் ஏற்படும் அழுத்தம்.



பிற நூல்கள்

1. Concept of physics - HC Verma

2. A Text-Book on Static Electricity - Hobart Mason

3. Fun With Static Electricity - Joy Cowley

4. Frank New Certificate Physics. McMillan Publishers.

 

இணைய வளங்கள்

1. http://sciencenetlinks.com/lessons/staticelectricity-2/

2. https://www.stem.org.uk/resources/community/

collection/13389/static-electricity

3. https://www.physicsclassroom.com/class/ estatics


இணையச் செயல்பாடு

மின்னியல்

கணினி விளையாட்டின் மூலம் மின்சாரத்தை அறியலாமா?

படி 1 கீழ்க்காணும் உரலி விரைவுக்குறியைப் பயன்படுத்தி இணையப் பக்கத்திற்குச் செல்க.

படி 2 திரையில் மின்சாராத்தின் அறியும் வகையில் பலவிளையாட்டுக்கள் தோன்றும்.

படி 3 "Electricity circuits activityvd" என்பதனைத் தேர்வுசெய்யவும். அதில் துணைத்தலைப்புகள் Electricity in home, Introduction to circuits போன்றவை இடம் பெற்றிருக்கும்.

படி 4 துணைத்தலைப்புகளில் தோன்றும் விளையாட்டில் உனக்கு விருப்பமான விளையாட்டைத் தேர்ந்தெடுக்கவும்.

உரலி: http://interactivesites.weebly.com/electricity-and-energy.html


Tags : Electricity | Chapter 5 | 8th Science மின்னியல் | அலகு 5 | 8 ஆம் வகுப்பு அறிவியல்.
8th Science : Chapter 5 : Electricity : Points to Remember, Glossary, Concept Map Electricity | Chapter 5 | 8th Science in Tamil : 8th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 5 : மின்னியல் : நினைவில் கொள்க, சொல்லடைவு , கருத்து வரைபடம் - மின்னியல் | அலகு 5 | 8 ஆம் வகுப்பு அறிவியல் : 8 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 5 : மின்னியல்