வெப்பம் | அலகு 4 | 8 ஆம் வகுப்பு அறிவியல் - வினா விடை | 8th Science : Chapter 4 : Heat

   Posted On :  09.09.2023 07:50 am

8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 4 : வெப்பம்

வினா விடை

8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 4 : வெப்பம் : புத்தக வினாக்கள், கேள்வி பதில்கள்

மதிப்பீடு

 

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

 

1. வெப்பம் என்பது ஒரு வகையான. -----------------------

அ) மின்னாற்றல்

ஆ) ஈர்ப்பு ஆற்றல்

இ) வெப்ப ஆற்றல்

ஈ) எதுமில்லை

விடை: இ) வெப்ப ஆற்றல்

 

2. ஒரு பொருளுக்கு வெப்ப ஆற்றல் அளிக்கப்படும்போது பின்வருவனவற்றுள் எது / எவை நிகழ முடியும்?

அ) விரிவடைதல்

ஆ) வெப்பநிலை உயர்வு

இ) நிலைமாற்றம்

ஈ) அனைத்தும்

விடை: ஈ) அனைத்தும்

 

3. பின்வரும் பொருள்களில் எது அதிக வெப்ப ஆற்றலை உட்கவர்கிறது?

அ) திடப்பொருள்

இ) வாயுப்பொருள்

ஆ) திரவப்பொருள்

ஈ) அனைத்தும்

விடை: அ) திடப்பொருள்

 

4. திட, திரவ மற்றும் வாயுக்களுக்கு சம அளவு வெப்ப ஆற்றல் அளிக்கும்போது, எது அதிக விரிவுக்கு உட்படும்?

அ) திடப்பொருள்

இ) வாயுப்பொருள்

ஆ) திரவப்பொருள்

ஈ) அனைத்தும்

விடை: இ) வாயுப்பொருள்

 

5. திரவ நிலையிலிருந்து திடநிலைக்கு மாறும் நிகழ்விற்கு ------------- என்று பெயர்.

அ) பதங்கமாதல்

இ) உறைதல்

ஆ) குளிர்வித்தல்

ஈ) படிதல்

விடை: இ) உறைதல்

 

6. வெப்பக்கடத்தல் முறையில் வெப்ப ஆற்றல்  பரிமாற்றம் -------------ல் நடைபெறும்.

அ) திடப்பொருள்

ஆ) திரவப்பொருள்

இ) வாயுப்பொருள்

ஈ) அனைத்தும்

விடை: அ) திடப்பொருள்

 

II. கோடிட்ட இடத்தை நிரப்புக.

 

1. கலோரிமீட்டர் என்ற சாதனம் ஏற்கப்பட்ட அல்லது இழக்கப்பட்ட வெப்பத்தினை அளக்கப் பயன்படுகிறது.

2. ஒரு கிராம் நிறையுள்ள நீரின் வெப்ப நிலையை 1°C உயர்த்தத் தேவைப்படும் வெப்ப ஆற்றலின் அளவு 1 கலோரி எனப்படும்.

3. வெப்பக் கட்டுப்படுத்தி என்பது வெப்பநிலை மாறாமல் வைத்திருக்கிறது.

4. வாயு நிலையிலிருந்து திரவ நிலைக்கு ஒரு பொருள் மாறும் நிகழ்விற்கு

குளிர்தல் என்று பெயர்.

5. ஒரு அமைப்பிற்கு வெப்ப ஆற்றலை அளிக்கும் போது, அதன் வெப்பநிலை அதிகரிக்கும்

6. ஒரு கலனிலுள்ள திரவத்தின் வெப்பநிலையை உயர்த்தும் போது அணுக்களுக்கிடையேயான தொலைவு குறையும்

 

III. சரியா அல்லது தவறா எனக் கூறுக. தவறான கூற்றைத் திருத்தி எழுதுக.

 

1. ஒரு பொருளுக்கு அளிக்கப்படும் வெப்ப ஆற்றல், அப்பொருளில் உள்ள மூலக்கூறுகளின் சராசரி இயக்க ஆற்றலை அதிகரிக்கிறது. விடை: சரி

2. ஒரு பொருளின் வெப்பநிலையை அதிகரிக்கும்போது அப்பொருளின் பரிமாணத்தின் மதிப்பு அதிகரிக்கும். விடை: சரி

3.ஒரு பொருளானது திடநிலையிலிருந்து வாயுநிலைக்கு மாறும் நிகழ்விற்கு குளிர்வித்தல் என்று பெயர். விடை: தவறு. பதங்கமாதல்

4. திடப்பொருளில் வெப்பப் பரிமாற்றம் நடைபெறும் நிகழ்விற்கு வெப்பக் கடத்தல் என்று பெயர். விடை: சரி

5. ஒரு பொருள் ஏற்கும் வெப்பத்தின் அளவானது அதன்நிறையையும் உள்ளு றைவெப்பத்தையும் பெருக்கிக் கிடைக்கும் மதிப்பாகும். விடை: சரி

6. வெப்பக் குடுவையில், சில்வர் சுவர்கள் வெப்பத்தை எதிரொளிக்கின்றன. விடை: தவறு. உட்புறத்தில்

 

IV. பொருத்துக.


வெப்பக் கடத்தல் - திரவப்பொருள்

வெப்பச் சலனம் - வாயு திரவமாதல்

வெப்பக் கதிர்வீச்சு - திண்மம் வாயுவாதல்

பதங்கமாதல் - வாயு

குளிர் வித்தல் – திடப்பொருள்

 

விடைகள்

வெப்பக் கடத்தல் - திடப்பொருள்

வெப்பச் சலனம் - திரவப்பொருள்

வெப்பக் கதிர்வீச்சு - வாயு

பதங்கமாதல் - திண்மம் வாயுவாதல்

குளிர் வித்தல் - வாயு திரவமாதல்

 

 

V. கீழ்க்காணும் கூற்றுக்களை ஆராய்ந்து சரியான ஒன்றை தேர்வு செய்க


1. கூற்று: வெற்றிடத்தில் வெப்ப ஆற்றல் பரவும் முறைக்கு வெப்பக் கதிர்வீச்சு என்று பெயர். காரணம்: அணுக்களிள் இயக்கமின்றி ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு வெப்பம் பரவும் முறைக்கு வெப்பக் கதிர்வீச்சு என்று பெயர்.

விடை: ஆ) கூற்று சரி, காரணம் தவறு

 

2. கூற்று: ஓர் அமைப்பினை ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு மாற்ற முடியும்.

காரணம்: ஒரு அமைப்பின் வெப்பநிலை மாறாமல் இருக்கும்போது இது நிகழ்கிறது.

அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது,

ஆ) கூற்று சரி, காரணம் தவறு

இ) கூற்று தவறு, காரணம் சரி

ஈ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை.

 

விடை: i) கூற்றும், காரணமும் சரி. காரணம் கூற்றை நன்கு விளக்குகிறது

 

VI. சுருக்கமாக விடையளி.

 

1. அன்றாட வாழ்வில், வெப்பக்கடத்தல் நிகழ்விற்கு இரண்டு உதாரணம் தருக'.

> துணியை சலவை செய்யும் போது, வெப்ப ஆற்றலானது சலவைப் பெட்டியிலிருந்து துணிக்குப் பரவுகிறது.

> சமையல் பாத்திரத்தை வெப்பப்படுத்தும்போது, வெப்ப ஆற்றலானது பாத்திரத்திலிருந்து உணவுப் பொருளுக்குக் கடத்தப்படுகிறது.

 

2. வெப்ப ஆற்றலின் விளைவுகள் யாவை?

வெப்ப ஆற்றலானது மூன்று முக்கியமான மாற்றங்களை ஏற்படுத்தும். அவை

> விரிவடைதல்

> வெப்பநிலை உயர்வு

> நிலை மாற்றம்

 

3. வெப்பம் கடத்தப்படும் முறைகள் யாவை?

வெப்பம் கடத்தப்படும் மூன்று முறைகள்:

> வெப்பக் கடத்தல் –

> வெப்பச் சலனம்

> வெப்பக் கதிர்வீச்சு

\

4. வெப்பக் கடத்தல் என்றால் என்ன?

திடப்பொருள்களில் அதிக வெப்பநிலையிலுள்ள பகுதியிலிருந்து குறைந்த வெப்பநிலையிலுள்ள பகுதிக்கு அணுக்கள் அல்லது மூலக்கூறுகளின் இயக்கம் இல்லாமல் வெப்ப ஆற்றல் பரவும் நிகழ்வு.

 

5. வெப்பச் சலனம் பற்றி குறிப்பு எழுதுக

> ஒரு பொருளை வெப்பப்படுத்தும்போது, உயர் வெப்பநிலையிலுள்ள பகுதியிலிருந்து குறைந்த வெப்பநிலையிலுள்ள பகுதிக்கு மூலக்கூறுகளின் இயக்கத்தினால் வெப்பம் கடத்தப்படும்.

> வெப்பச்சலனம் திரவங்கள் மற்றும் வாயுக்களில் நடைபெறுகிறது.

 

6. தன் வெப்ப ஏற்புத்திறன் - வரையறு.

> 1 கிலோ கிராம் நிறையுள்ள பொருள் ஒன்றின் வெப்பநிலையை 1°C அல்லது 1K அளவு உயர்த்தத் தேவைப்படும் வெப்ப ஆற்றலின் அளவு."C" என்ற எழுத்தால் குறிப்பிடப்படும்.

> தன் வெப்ப ஏற்புத்திறன், C = Q / mx T

 

7. ஒரு கலோரி வரையறு

1 கிராம் நிறையுள்ள நீரின் வெப்பநிலையை 1°C உயர்த்தத் தேவைப்படும் வெப்ப ஆற்றலின் அளவு. 1 கலோரி = 4.186J

 

 

VII. விரிவாக விடையளி.

 

1. கலோரிமீட்டர் வேலைசெய்யும் விதத்தை தெளிவான படத்துடன் விவரி.

> பொருள் ஒன்றினால் ஏற்கப்பட்ட அல்லது இழக்கப்பட்ட வெப்பத்தினை அளவிடப் பயன்படுத்தப்படும் உபகரணம் கலோரி மீட்டர்.

> இது தாமிரம் அல்லது அலுமினியத்தால் ஆன பாத்திரத்தைக் கொண்டுள்ளது.

> வெப்ப இழப்பு ஏற்படுவதைத் தடுப்பதற்காக இது வெப்பத்தைக் கடத்தாத ஒரு கலனில் வைக்கப்பட்டுள்ளது.

> கலனின் மூடியில் ஒரு துளையின் வழியாக பொருளின் வெப்பநிலையை அளவிடுவதற்கு வெப்பநிலைமானி உள்ளது.

> மற்றொரு துளையின் வழியே ஒரு கலக்கியும் வைக்கப்பட்டுள்ளன. இது பொருளைக் கலக்கப் பயன்படும்.

> பாத்திரத்தில் திரவம் நிரப்பப்பட்டுள்ளது.

> மின்கம்பியினுள் மின்சாரத்தைக் கடத்துவதன் மூலம் இத்திரவமானது வெப்பமடைகிறது.

> இதன் மூலம் ஒரு திரவத்தின் வெப்ப ஏற்புத்திறனின் மதிப்பினைக் கணக்கிடலாம்.


 

2. வெப்பக் கட்டுப்படுத்தி பற்றி குறிப்பு வரைக.

> 'தெர்மோஸ்டாட்' என்ற சொல், இரண்டு கிரேக்க வார்த்தைகளிலிருந்து பெறப்பட்டது. இதில் 'தெர்மோ' எனும் சொல் வெப்பம் என்றும் 'ஸ்டாட்' எனும் சொல் அதே நிலையில் இருப்பது என்றும் பொருள்படும்.

> இது ஒரு பொருள் அல்லது இடத்தின் வெப்பநிலையை மாறாமல் வைப்பதற்காக பயன்படுத்தப்படும் சாதனம்.

> வெப்பமடையும் அல்லது குளிர்ச்சியடையும் உபகரணங்களில் நிர்ணயிக்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட வெப்ப நிலையை அடைவதற்காக பயன்படுத்தப்படுகிறது.

> ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையை அடைந்தவுடன், அந்த உபகரணத்தை செயல்பட வைக்கும் அல்லது நிறுத்திவிடும்.

> இது வெப்பக்கடத்தி உணர்வியாகவும், வெப்பநிலை அமைவுகளைக் கட்டுப்படுத்தும் கட்டுப்படுத்தியாகவும் செயல்படுகிறது.

எ.கா: i) காற்றுப்பதனாக்கி

ii) நீர் சூடேற்றி

iii) நுண்ண லை அடுப்பு

iv) குளிர்பதனி

V) அறைகளின் மைய சூடேற்றி

 

3. வெப்பக் குடுவை வேலை செய்யும் விதத்தினை விளக்குக.


> வெப்பக் குடுவை இரண்டு சுவர்களைக் கொண்ட ஒரு கலன்.

> உள்புறமானது சில்வரால் ஆனது.

> இரண்டு சுவர்களுக்கும் இடையே வெற்றிடம் உள்ளது.

> இது, வெப்பச்சலனம் மற்றும் வெப்பக்கடத்தல் ஆகிய நிகழ்வுகளால் வெப்ப ஆற்றல் பரவாமல் இருக்க உதவுகிறது.

> சுவர்களுக்கு இடையே சிறிதளவு காற்று இருப்பதால், வெளிப்புறத்திலிருந்து உள்புறத்திற்கும்,

> உள்புறத்திலிருந்து வெளிப்புறத்திற்கும் வெப்பம் கடத்தப்படுவதில்லை.

> குடுவையின் மேற்பகுதியிலும், கீழ்ப்பகுதியிலும் இரண்டு சுவர்களும் இணைகின்ற இடத்தில் வெப்பத்தைக் கடத்தமுடியும்.

> குடுவையிலுள்ள சில்வர் சுவர், வெப்பக்கதிர் வீச்சினை மீண்டும் குடுவையிலுள்ள திரவத்திற்கு அனுப்பி, நீண்ட நேரம் சூடாக இருக்க உதவும்.

 

 

VIII. உயர் சிந்தனை வினாக்கள்.


1. குளிர் காலங்களில் ஏரிகளின் உறைந்திருந்தாலும், அதன் மேற்பரப்பு கீழ்பகுதி உறையாமல் இருப்பது ஏன்?

> ஏரியின் மேற்பரப்பு, குளிர்ந்த வளிமண்டலத்துடன் தொடர்புடையதால், அது உறைந்திருக்கும்.

> தண்ணீரை விட குறைவான அடர்த்தி கொண்டதால் உறைந்த மேற்பரப்பு மூழ்காது.

> இந்த உறைந்த மேற்பரப்பு கடத்தாப் பொருளாக செயல்படுவதால், ஏரியின் அடிப்பகுதி சூடாக இருக்கும்.

> எனவே, குளிர் காலங்களில் ஏரிகளின் மேற்பரப்பு உறைந்திருந்தாலும், அதன் கீழ்பகுதி உறையாமல் இருக்கிறது.

 

2. வெப்பக் கடத்தல் பற்றிய கீழ்காணும் கூற்றுக்களுள் எது சரி?

அ) எஃகு > மரம்> நீர்

ஆ) எஃகு > நீர் > மரம்

இ)  நீர் > எஃகு > மரம்

ஈ) நீர் > மரம் > எஃகு


> நீர் > மரம் என்பது சரியான கூற்று.

ஏனெனில், எஃகு நன்றாக கடத்தும் தன்மை கொண்டது. ஆனால் நீர், மரம் கடத்தாப் பொருட்கள் ஆகும். எஃகு வெப்பத்தை கடத்தக்கூடியதாகும். மரத்தின் வெப்பக் கடத்தல் மிக மிக குறைவு. வெப்பக்கடத்துத்திறன்:

எஃகு - 50.2 (w/mk), நீர் - 0.6 (w/mk), மரம் - 0.12 - 0.04 (w/mk)

 

 

IX. கணக்கீடுகள்.


1. ஒரு இரும்புப் பந்தின் வெப்பநிலையை 20 °C உயர்த்த 1000 J ஆற்றல் தேவைப்படுகிறது. அப்பந்தின் வெப்ப ஏற்புத் திறனைக் கணக்கிடுக.



2. 100 கி.கி எடையுள்ள பாத்திரத்தின் வெப்ப ஏற்புத்திறன் 8000 J / K. அதன் தன் வெப்ப ஏற்புத்திறனைக் கணக்கிடுக.


Tags : Heat | Chapter 4 | 8th Science வெப்பம் | அலகு 4 | 8 ஆம் வகுப்பு அறிவியல்.
8th Science : Chapter 4 : Heat : Questions Answers Heat | Chapter 4 | 8th Science in Tamil : 8th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 4 : வெப்பம் : வினா விடை - வெப்பம் | அலகு 4 | 8 ஆம் வகுப்பு அறிவியல் : 8 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
8 ஆம் வகுப்பு அறிவியல் : அலகு 4 : வெப்பம்