Home | 4 ஆம் வகுப்பு | 4வது கணிதம் | பகுதி மற்றும் பங்குகள்

பின்னங்கள் | பருவம் 2 அலகு 5 | 4 ஆம் வகுப்பு கணக்கு - பகுதி மற்றும் பங்குகள் | 4th Maths : Term 3 Unit 6 : Fractions

   Posted On :  13.10.2023 07:33 am

4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 5 : பின்னங்கள்

பகுதி மற்றும் பங்குகள்

கீழே கொடுக்கப்பட்ட புள்ளிகளை இணைக்க கோடுகள் வரைக. அவை செங்குத்தாகவோ, கிடைமட்டமாகவோ அல்லது குறுக்கு கோடுகளகவோ இருக்கலாம்.

பகுதி மற்றும் பங்குகள்:

ராணி மற்றும் கௌரி 4 தோசைகளில் சம பங்கு பெற விரும்பினர்.

நீங்கள் அவர்களுக்கு ஆலோசனை கூற இயலுமா?


எத்தனை பேர் உள்ளனர்?

இரண்டு

எனவே, ஒவ்வொருவருக்கும் எத்தனை பங்குகள் போட கிடைக்கும் ?


எனவே, ராணி 4 தோசைகளில் இரண்டு தோசைகளும், மற்றும் கௌரி 4 தோசைகளில் இரண்டு தோசைகளும் பெற்றனர்.


செயல்பாடு 1

கீழே கொடுக்கப்பட்ட புள்ளிகளை இணைக்க கோடுகள் வரைக. அவை செங்குத்தாகவோ, கிடைமட்டமாகவோ அல்லது குறுக்கு கோடுகளகவோ இருக்கலாம்.


32 சமபாகங்கள் உள்ளன.

நீ விரும்பிய பாகங்களை வண்ணமிடுக.

இப்போது 32 பகுதிகளில் 6 பகுதிகள் வண்ணமிடப்பட்டுள்ளன என எழுதலாம்.


செய்து பார்

கீழே கொடுக்கப்பட்டுள்ள வடிவத்தை உனக்குப் பிடித்த எண்ணிக்கையில் சம பாகங்களாகப் பிரிக்கவும். (செங்குத்தாகவோ அல்லது கிடைமட்டமாகவோ)


மொத்தம் 4 சமபாகங்கள் உள்ளன.

நீ விரும்பிய பாகங்களை வண்ணமிடுக,

4 பாகங்களில் 1 பாகங்கள் வண்ணமிடப்பட்டன.


செயல்பாடு 2

(வட்டத்தின் நான்கு சமபாகங்கள்)

நான்கு சமபாகமாக பிரிக்கப்பட்ட வட்டத்தினை நான்கு மாணவர்களிடம் கொடுத்து வண்ணமடிக்குமாறு கூறப்பட்டது.

இரண்டு நிமிடங்களில் அவர்கள் வண்ணமடித்த வட்டங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.


மேலே கண்ட படத்தில் கால் பாகம் வண்ணமடித்தவர் தருண்

அரைபாகம் வண்ணமடித்தவர் அருண்.

முழுபாகமும் வண்ணமடித்தவர் சங்கர்.

முக்கால் பாகம் வண்ணமடித்தவர் சாந்தனு.




முழுமையிலிருந்து கால், அரை, முக்கால் ஆகியவற்றை அடையாளம் காணுதல்


அரை


மேற்கண்ட ஒவ்வொரு பழமும் இரண்டு "அரைப்பாகமாக” பிரிக்கப்பட்டுள்ளது.


மேற்கண்ட ஒவ்வொரு படமும் இரண்டு சமபாகமாக பிரிக்கப்பட்டுள்ளன. அதில் ஒரு பாகத்திற்கு வண்ணமிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு பாகமும் "அரைப்பாகம்" ஆகும்.


மேற்கண்ட ஒவ்வொரு தொகுப்பும் இரண்டு சம "அரைப்பாகமாக" பிரிக்கப்பட்டுள்ளது.


Tags : Fractions | Term 3 Chapter 6 | 4th Maths பின்னங்கள் | பருவம் 2 அலகு 5 | 4 ஆம் வகுப்பு கணக்கு.
4th Maths : Term 3 Unit 6 : Fractions : Symbolic Representation of Simple Fraction Fractions | Term 3 Chapter 6 | 4th Maths in Tamil : 4th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 5 : பின்னங்கள் : பகுதி மற்றும் பங்குகள் - பின்னங்கள் | பருவம் 2 அலகு 5 | 4 ஆம் வகுப்பு கணக்கு : 4 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 2 அலகு 5 : பின்னங்கள்