Home | 10 ஆம் வகுப்பு | 10வது அறிவியல் | கொடுக்கப்பட்டுள்ள உப்பின் கரைதிறனைக் கண்டறிதல்

வேதியியல் ஆய்வக செய்முறை பரிசோதனை - கொடுக்கப்பட்டுள்ள உப்பின் கரைதிறனைக் கண்டறிதல் | 10th Science : Chemistry Practicals

10வது அறிவியல் : வேதியியல் செய்முறைகள்

கொடுக்கப்பட்டுள்ள உப்பின் கரைதிறனைக் கண்டறிதல்

ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் கொடுக்கப்பட்டுள்ள உப்பின் கரைதிறனை தெவிட்டிய கரைசல் / தெவிட்டாத கரைசல் அடிப்படையில் கண்டறிதல்.

கொடுக்கப்பட்டுள்ள உப்பின் கரைதிறனைக் கண்டறிதல்


நோக்கம்:

ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் கொடுக்கப்பட்டுள்ள உப்பின் கரைதிறனை தெவிட்டிய கரைசல் / தெவிட்டாத கரைசல் அடிப்படையில் கண்டறிதல்.


தத்துவம்:

எந்த ஒரு கரைசலில் வெப்பநிலை மாறாமல் மேலும் கரைபொருளைக் கரைக்க முடியாதோ, அக்கரைசல் தெவிட்டிய கரைசல் எனப்படும்.

எந்த ஒரு கரைசலில் வெப்பநிலை மாறாமல் மேலும் கரைபொருளைக் கரைக்க முடியுமோ, அக்கரைசல் தெவிட்டாத கரைசல் எனப்படும்.


தேவையான பொருள்கள்

250 மி.லி முகவை, கலக்கி, வாலை வடிநீர், 100 மி.லி அளவு ஜாடி, சமையல் உப்பு 25 கி, 11 கி, 1கி எடை கொண்ட மூன்று பொட்டலங்கள். 


செய்முறை:

250 மி.லி முகவையில் 100மி.லி வாலைவடி நீரை எடுத்து கொள்ளவும் (அளவு ஜாடியைப் பயன்படுத்தி). இந்த நீரில் முதல் பொட்டலத்தில் உள்ள 25 கிராம் உப்பைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும். பின்னர் இரண்டாவது பொட்டலத்தில் உள்ள 11 கிராம் உப்பையும் சேர்த்து நன்றாக கலக்கவும். இறுதியாக மூன்றாவது பொட்டலத்தில் உள்ள 1 கிராம் உப்பையும் சேர்க்கவும். மாற்றங்களை உற்றுநோக்கி பதிவு செய்யவும். 


உற்று நோக்கல்: 



முடிவு:

அட்டவணையில் குறிப்பிட்டுள்ளபடி தெவிட்டிய கரைசலை உருவாக்கத் தேவைப்படும் உப்பின் அளவு 36 கிராம்.


Tags : Chemistry Laboratory Practical Experiment வேதியியல் ஆய்வக செய்முறை பரிசோதனை.
10th Science : Chemistry Practicals : Testing the solubility of the salt Chemistry Laboratory Practical Experiment in Tamil : 10th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 10வது அறிவியல் : வேதியியல் செய்முறைகள் : கொடுக்கப்பட்டுள்ள உப்பின் கரைதிறனைக் கண்டறிதல் - வேதியியல் ஆய்வக செய்முறை பரிசோதனை : 10 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
10வது அறிவியல் : வேதியியல் செய்முறைகள்